ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், பழைய USSR -ன் சில நாடுகளிலும் நாளை (April .8) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் Greek orthodox மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இவர்களின் ஈஸ்டர் பெருவிழா, சில வருடங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர் கொண்டாடும் நாடகளிலும், வேறு சில வருடங்களில் ஒரு வாரம் முன்னும் அல்லது பின்னும் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம், நாளை வருவதால், அவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை ( மொத்தம் 4 நாடகள் ) விடுமுறை. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 4 நாடகள் விடுமுறை விடப்பட்ட்து.
அது ஏன் திங்கள் கிழமையும் விடுமுறை என்று கேட்கிறீர்களா? பண்டிகையை கொண்டாடிவிட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டாமா! அதற்குத்தான்!!
ஈஸ்டர் மட்டுமல்ல, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவற்றிற்கும், மறுநாளும் விடுமுறையே!
கிழக்கு ஐரோப்பிய Greek orthodox மதத்தினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்று தெரியுமா?
ஜனவரி 7 ! ஆச்சரியமாய் இருக்கிறதா!!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram