எங்க ஊருல, இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால், மரம் செடிகள் இன்னும் கொஞ்சம் பசுமையாய் இருக்கும்.அதுக்கு இயற்கை வரம் தரணுமே!
மூதுரையில்,
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை" -னு சொல்லியிருக்காரு ஔவையார்.
எல்லார்க்கும் பெய்யும் மழை" -னு சொல்லியிருக்காரு ஔவையார்.
ஒரு நல்லவர் இருந்தாலே மழை பெய்யும்னா, ஊருல உள்ளவங்க எல்லோருமே நல்லவங்களா இருந்தா! கொஞ்சம் யோசிச்சி பாருங்க!!
இப்படித்தான், ஒரு ஊருல தொடர்ந்து மழை பெய்துகிட்டே இருந்தது. ஒரு வாரம், ரெண்டு வாரம்னு தொடர்ந்து ஒரு மாசமா மழை!
மழை வெள்ளத்துல ஊரே மூழ்கப்போகுதுனு மக்கள் எல்லோருமே பயந்துட்டாங்க!
உடனே எல்லோரும் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற மண்டபத்துல கூடுனாங்க! நம்மள்ல யாரோ ஒருத்தர் பாவம் பண்ணிருக்காங்க! அதான் மழை வெள்ளத்துல ஊரு மூழ்கப்போகுது. அதுக்கு ஒரு முடிவு கட்டிடத்தான் நாம இங்கே கூடியிருக்கோம்னாரு ஊர் தலைவரு.
அனைவரும் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தாங்க.
மண்டபத்துக்கு எதுத்தாப்புல 100மீட்டர் தொலைவுல இருக்குற அந்த பெரிய மரத்த ஒவ்வொருத்தரா போய் தொட்டுக்கிட்டு வரணும். நம்மள்ல இருக்குற அந்த கெடடவன் போய் தொடும் போது, அவன் மேலே இடி விழுந்து அவன் செத்து போவான்னு நேத்து என் கனவுல கடவுள் சொன்னாரு ன்னு தலைவர் பேசுனாரு.
எல்லோருமே அதுக்கு சம்மதிச்சாங்க.
ஒவ்வொருத்தரா போய் தொட்டுக்கிட்டு வந்தாங்க!எதுவுமே நடக்கல. கடைசியா ஒருவன் மட்டுமே மிச்சம்!
அவனுக்கு புரிஞ்சிட்டுது, நாமதான் இடி விழுந்து சாகப்போறோம்னு. எல்லோருமே அவனை ஏசினாங்க.
"போ! சீக்கிரம் போ!! மரத்த தொடு னு சொன்னாங்க. அவனும் வேற வழியில்லாம, பயத்தோடே மழைல நனஞ்சிகிட்டே மரத்துகிட்ட போனான்.மரத்தை தொடவும்,
ஒரு பெரிய இடி!
அந்த மண்டபம் முழுவதுமே இடி விழுந்ததில் நொறுங்கி சின்னாபின்னமானது.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram