கடந்த செவ்வாய் கிழமை வள்ளியூரில் புது பேருந்து நிலையத்துக்கு வடக்கே ஒரு கடைக்கு health faucet வாங்க சென்றிருந்தேன்.கவுண்டரில் இருந்தவர் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார்.வேறு யாரையும் காணவில்லை.
'health faucet இருக்குதா?'
ஒரே ஒரு பீஸ் மட்டும் இருக்கிறது என்றார். பார்த்தேன்.பேக்கிங் ஏற்கெனவே பிரிக்கப் பட்டிருந்தது.
'நல்ல பீஸ் தானே?' - இது நான்.
"எந்த பிரச்சினையும் இல்லை"
'அப்புறம் ஏன் பேக்கிங் பிரிச்சிருக்கு ?'
"வேலையாள் தெரியாம பிரித்து விடடார்"
நம்பி நானும் வாங்கி வந்து விடடேன் 390 ரூபாய்க்கு.
வீட்டில் வந்து பைப்பை மாட்டினேன். தண்ணீர் லீக்காகி கொண்டிருந்தது. கடைக்காரன் மீது கோபமாக வந்தது.
மீண்டும் வள்ளியூருக்கு நேற்று பைக்கில் அவன் கடைக்கு சென்றேன்.இரண்டு வேலையாள்களும் உடன் இருந்தனர்.
சொன்னேன்.
நான் வந்து சரியாக மாட்டித்தருகிறேன். அதற்கு தனியாக பணம் வேண்டும் என்றார்.
'வாசரும் சரியில்லை.பைப்பும் சரியில்லை. வேறொன்று நல்லது இருந்தால் தாருங்கள். அல்லது பணத்தை திருப்பி தாருங்கள்' என்றேன்.
உங்களுக்கு மாட்டத்தெரியவில்லை என்றார்.
நான் ப்ளம்பரை வைத்து மாட்டினேன் என்றேன்.
அந்த பிளம்பருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றார்.
இவரிடம் பேசி பலனில்லை என்று பணத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பொருளையும் கொடுத்துவிட்டு படியிறங்கினேன்.
பின்னாலேயே வேலையாள் வந்து என் 390 ரூபாயை தந்து விடடார். பணம் கிடைத்த போதும் கோபம் மட்டும் குறையவில்லை. கடையில் இவன் ஈ ஓட்டும் காரணம் மட்டும் புரிந்தது.
பைக்கில் ஏறி ஊருக்கு வர ஆரம்பித்தேன். வள்ளியூர் பழைய பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கும் முன்பே வலது பக்கத்தில் ( கிழக்கு பார்த்து) ஒரு பைப் கடை இருந்தது. பெயர் பார்த்தேன்.
பொன்சிங் & கோ (ஹார்ட்வர், எலக்ரிக்கல்ஸ் மற்றும் பிளம்பிங் ) என்று போட்டிருந்தது. 3 மாடி கட்டிடம். நிறைய பொருட்க்கள்!
பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றேன்.
ஒரு இளம் பெண் கவுண்டரில் இருந்தார். ஒரு முதியவர் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உடன் இருந்தனர். கடையில் இன்னொருவர் பொருள் வாங்கிக்கொண்டிருந்தார்.
'health faucet இருக்குதா?'
"ஆம்" என்றார் அந்த நடுத்தர வயதுக்காரர்.
உடனே எடுத்து வந்தார்.160 ரூபாய்.
வேறே காட்டுங்களேன் என்றேன்.
மாடியிலிருந்து வேறு சில பீஸ்கள் கொண்டு வந்தார்.
'500 ருபாய் ரேஞ்சில ஏதேனும் இருக்கா?'
மீண்டும் மாடியேறி கொண்டு வந்து தந்தா் சளைக்காமல்.
முகத்தில் துளியும் கோபமோ எரிச்சலோ இல்லை.
இன்னொருமுறை முதலில் காட்டிய 160 ரூபாய் பீஸை கொண்டு வர முடியுமா? என்று கேட்ட்டேன்.
நீங்கள் கேட்டதை கொடுத்தால் தானே மீண்டும் எங்கள் கடைக்கு வருவீர்கள். இதோ கொண்டுவருகிறேன் என்றவர் உடனடியாக எடுத்து வந்தார்.
என் மனம், இவரையும் முந்தய கடை ஓனரையும் எடை போட்ட்து.
மனதிற்குள் இவரை வாழ்த்திவிட்டு கீழே புகைப்படத்திலிருக்கும் பீஸை எடுத்தேன்.
'எவ்வளவு?'
"375 ரூபாய்"
'discount ஏதும் கிடையாதா?'
360 ருபாய் தாருங்கள் என்றார் அந்த பெண்.
இரண்டு வார்த்தைக்கே 15 ரூபாய் குறைந்திருக்கிறதே. மீண்டும் கேட்ப்போம் என்று,
'350 ருபாய் தரட்டுமா' என்றேன்.
உடனே அந்த நடுத்தர வயதுக்காரர் சரி என்றார்.
500 ருபாய் தாளை நீட்டினேன். மூன்று 50 ரூபாய்களை திருப்பித் தந்தார்.
இவரை நினைக்க சந்தோஷமாய் இருந்தது.கண்டிப்பாக இவர் கடைக்கு வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்.
டெய்ல் பீஸ் (Tail piece): இந்த health faucet 'பைப்' நன்றாகவே வேலை செய்கிறது.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram