நேற்று காலையில் எங்கள் பத்திநாதபுரத்தில் மழை பொய்த்த விபரத்தை எழுதி இருந்தேன். அதில் மழைமானி பற்றியும் எழுதியிருந்தேன்.
உடனே ஒன்று செய்தும் விடடேன். இனி மழை வந்தால்தானே மழையை அளக்க முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில்,
நேற்று பிற்பகல் 3:30 முதல் 4:15 வரை மழை பெய்து என் மழைமானிக்கு வேலை கொடுத்துவிட்ட்து.
நேற்று காலையில் போடட அந்த பதிவைப் பார்த்து, மழை மேகத்துக்கு கோபம் வந்து விட்ட்து போலும்.
பிற்பகல் 3:20 மணியளவில் மின்னலை என் வீட்டிற்கு மழை மேகம் அனுப்பி வைத்தது.
"ஏன் நான் உங்கள் ஊரில் பொழியவில்லை" என்று எழுதினாய் என்று என்னை மிரட்டியது.
அடுத்து, இடியானது பெரும் சத்தத்துடன் என்னை பயமுறுத்தியது.
நான் அமைதியாக இருந்தேன்.
3:30-க்கு பெரு மழையை அனுப்பியது.
வீட்டு ஜன்னல் மற்றும் கதவு வழியே மழையை வேகமாய் பொழிந்தது ( புகைப்படங்கள் பார்க்கவும்).
நான் அசரவில்லை!
4 மணியளவில், சூறை காற்றை அனுப்பியது( அது பகுதி 2 வீடியோவில்).
நான் மழை மேகத்துடன் சமரச பேச்சுக்கு தயாரானேன்.
வீடடை விட்டு வெளியே வருவதற்குள் என் பூவரசு மரம் ஒன்றை வேரோடு சாய்த்து விட்ட்து(புகைப்படங்கள் பார்க்கவும்).
வெளியே வந்து மழை மேகத்திடம்,
"இனி உன்னைப் பற்றி பெருமையாக எழுதுவேன்" என்றேன். சந்தோசப்பட்ட்து மேகம்.
அடிக்கடி எங்கள் ஊருக்கு மழை தரவேண்டும் என்றேன். உற்சாகமாய் ஆமோதித்தது.
என் வீட்டு மழைமானியில் நேற்று முக்கால் மணி நேரம் ( நேற்று பிற்பகல் 3:30 முதல் 4:15 வரை) பெய்த மழையின் அளவு என்ன தெரியுமா?
10 சென்டி மீடடர்
என் மழைமானியின் அளவு கோலில் 10 cm அளவை நீங்களும் புகைப்படத்தில் பாருங்கள்!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram