பொதுவாக மிஸ்டு கால் பண்ணுபவர்களை எனக்குப் பிடிக்காது. அன்று மீண்டும் மீண்டும், தெரியாத ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்தது. கோபத்தில், நானே போன் செய்து கத்தினேன்.
தோழரே! நான் தான் என்றது எதிர் குரல்.
என் வயது தான் இருக்கும்! வெள்ளை வேட்டி சடடையில் வடக்கன்குளம் பேருந்து நிலையத்தில் இவரை அடிக்கடிப் பார்க்கலாம்.
ஏன் மிஸ்டு கால் தொடர்ந்து பண்றீங்க? உங்க பைசாவில் பேசவேண்டியது தானே? என்றேன் கோபம் அடங்காமல்! போனில் பாலன்ஸ் இல்லை தோழரே! என்றார்.
என் காசிலேயே பேசி, அவருக்கு தேவையான விஷயத்தையும் கேட்டு வாங்கிக்கொண்டார்.இனிமேல் இவரிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சில நாட்களுக்கு முன்பு, வடக்கன்குளம் பேருந்து நிலையத்தின் எதிர் புறம் இருக்கும் வசந்தம் ஹோட்டலில் காபி குடித்துக்கொண்டிருந்தேன்.
தோழரே! என்று ஒரு குரல்!!
திரும்பினேன்!
எதிரில் மிஸ்டு கால் பார்ட்டி!
எச்சரிக்கையாய் இரு! என்று மனம் சொன்னது!
"எனக்கெல்லாம் டீ கிடையாதா?" என்றார் தோழர்.
"கடையில் கேடடால் தான் கிடைக்குமே" என்று கடையைக் காட்டி எரிச்சலில் சொன்னேன்.
வேறொரு நண்பர் வர, சற்று தள்ளி நின்று, அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். தோழரின் புராணத்தை இவர் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தவர் பணத்திலேயே அன்றைய சாப்பாடு, காபி, என்று முழு நாளையும் ஓட்டிவிடுவார் என்றார்.
பணவிஷயத்தில், தோழரிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, காபி டம்ளரை ஹோடடல் திண்டில் வைத்து விட்டு, 10 ரூபாயை நீட்டினேன்.
இன்னும் 5 வேண்டும் என்றார் ஹோடடல்காரர்.
காபி 8 ரூபாய் தானே! என்றேன்.
"உங்ககிடட பைசா வாங்கிக்க சொல்லி, தோழர், டீ வாங்கிட்டுப் போயிடடார்"! நீங்க கூட, என்னைப் பார்த்து, கை காட்டினீங்களே! என்றார்.
மறுபடியுமா!................ என்று என்னை நானே நொந்துகொண்டேன்.
இந்த மாதிரி மனிதர்களிடத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று டிப்ஸ் தாருங்களேன்!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram