"என்ன எப்படி இருக்கீங்க? பாத்து ரொம்ப நாளான மாதிரி இருக்கே" என்றேன்.
"நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே" என்றார் அந்த பெரியவர்.
ஏன் சாப்பிடலையா? குரலில் சுதி குறையுதே என்றேன் சின்ன சீண்டலுடன்.
தன் வீட்டு பிரச்சினைகளை சொன்னவர்,
எனக்கு, இரண்டு மருமகன்களுமே ரெண்டு கண்கள் மாதிரி தான்.மூத்தவளை உள்ளூருலயும் அடுத்தவளை வெளியூருலயும் கட்டி கொடுத்தேன்.அன்னைக்கி நாகர்கோயிலுக்கு ஒரு வேலையா போய்ட்டு வீட்டுக்கு வந்தபோது, ரெண்டு மருமகனுகளும் முன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
மூத்த மருமகனை உள்ளூரிலேயே எப்பவும் பாக்குறதாலே, ரெண்டாவது மருமகனப் பாத்து
"எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க" னு விசாரிச்சுட்டு கையில் இருந்த ஆப்பிள் பழ பார்சலையும் கொடுத்தேன்.
அது மூத்த மருமகனுக்கு வருத்தம்! அதிலிருந்தே என்னிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை.
அவர் குரலின் வருத்தம் எனக்குப் புரிந்தது.
கவலைப்படாதீங்க! உங்க மருமகன் சீக்கிரம் உங்களை புரிஞ்சிக்குவாரு. அவருக்கும் தான் ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறதே! என்றேன்.
புரிஞ்சிக்கிற போது நான் உயிரோட இருக்கணுமே! என்றார்!
மருமகன்களே! கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கங்கப்பா!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram