Saturday, November 9, 2019

...... இருக்க பயமேன்!

வடக்கன்குளத்தில், இரவு திருமண வீட்டில் சாப்பிட்டு விட்டு, வெளியே வந்தேன். கூடவே நண்பனும்!

"ஊருக்கு எப்படி போகப்போறே?", நண்பன் கேடடான்.
'பைக்- ல தான் வந்தேன்'
"கொஞ்சம் இரு" என்றவன், அருகில் உள்ள கடைக்கு ஓடினான்.
எதையோ வாங்கி வந்தவன், என் சடடை பையில் வைத்து விட்டு,
"இனி பயமில்லாமல் போ" என்று வழியனுப்பி வைத்தான்.
குழப்பத்துடன் வீடு வந்தவன், பின் பக்க கார் ஷெட்டில் 'பைக்'கை நிறுத்திவிட்டு, சடடை பையில் இருந்ததை வெளியே எடுத்தேன்.மங்கிய வெளிச்சத்தில் பார்த்தேன். பச்சை நிறத்தில் சோப்!
ஹமாம் இருக்க பயமேன்! என்று வீட்டினுள் டி.வி யில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
நண்பனின் தைரியத்தை நினைத்து சிரிப்பு வந்தது.
காலையில்-,
மெடிமிக்ஸ் சோப், புதுசா யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்களா என்றாள் என் மனைவி!!!

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram