வெற்றி என்பது சுலபமா?
நம் அனைவருக்குமே வெற்றி மீது தான் ஆசை! அது ஒன்று தான் நம் இலக்கு. ஆனால் அந்த வெற்றி அனைவருக்கும் கிடைத்து விடுகிறதா? நேர்மை தான் வெற்றியின் தாரக மந்திரம். ஆனால், அந்த நேர்மை வெற்றியை நமக்கு உடனே பெற்றுத்தருகிறதா?
எண்டார்பின் உடலில் அதிகம் சுரந்தால் அது வெற்றிக்கு வழி வகுக்குமாம். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? வாய்விட்டு சிரிக்கும் போது எண்டார்பின் ஹார்மோன் அதிகம் சுரந்து, மனம் மகிழ்ச்சியாக இருப்பதுடன், வெற்றிக்கான சிந்தனைகள் மூளையில் உருவாகிறது.
மூளையில் வெற்றிக்கான சிந்தனைகள் தொடர்ந்து உருவாக நாம் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம்: தினசரி குறைந்தது ஐந்து ஐடியாக்களையாவது யோசிக்க வேண்டும். எந்த ஐடியாக்களை யோசிக்க வேண்டும்? அது நம் தொழிலை அல்லது வேலையை முன்னேற்றுவதற்கான ஐடியாவாக இருக்க வேண்டும்.இப்படி யோசிக்க, யோசிக்க, ஏதாவது ஒரு ஐடியா நம்மில் வேருன்ற ஆரம்பிக்கும்.அந்த ஐடியாவில் வேறு என்னன்ன விஷயங்களை பொருத்தி நம் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்று நம் மனம் தேடும். கடைசியில் நம்மை அந்த விஷயத்தை செயல்படுத்த வைக்கும்.
வானிலை அறிவிப்பு மாதிரி எல்லாமே சரியாக நடக்குமா?
இப்படி செயல் படுத்தும் போது, சில சமயங்களில் அது தோல்வியில் முடியலாம். ரெடி என்றதும் ஓட ஆரம்பிக்கும் நாம், தோற்றால் மீண்டும் அதிக முயற்சி எடுக்கவேண்டும்.முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை நம் அகராதியில் இருந்து தூக்கி எறியவேண்டும் .
இதில் வெற்றி யாருக்கு?
அறிவாளி,வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வான்.புத்திசாலி வாய்ப்புகளை
உருவாக்கிக் கொள்வான்! நீங்கள் எந்த ராகம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதாவது வேலையா அல்லது தொழிலா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
கடைசியாக, நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. எனவே கடவுளை நம்புங்கள்.நல்லதே நடக்கும்!
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News - ப்ளாக்கில்(www.jfivenews.blogspot.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram