Star DuckerZ-ன் வெற்றி மேல் வெற்றி
ஒருவர் முதல் முறையாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அவரின் சந்தோஷத்தை முகபாவனைகளும் சிரிப்புமே மற்றவர்களுக்கு ஆயிரம் தகவல்கள் சொல்லும். இரண்டாம் முறை வெற்றி பெறும் போது அவரின் திறமை மீது அவருக்கிருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்.மூன்றாம் முறையும் வெற்றி பெற்றால் பெருமையும் அவரிடம் ஒட்டிக்கொள்ளும்.நான் சொல்வது தற்பெருமை அல்ல. சந்தோஷத்துடன் கூடிய ஒரு நம்பிக்கையின் பெருமை.
இதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை உணரத்தான் முடியும். தேன் இனிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அந்த இனிப்பை ருசி பார்த்தவர் மட்டுமே உணர முடியும். அத்தகைய இனிப்பான சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தை அணு அணுவாக ரசித்து ருசித்து கொண்டிருக்கிறார்கள் Star DuckerZ கிரிக்கெட் குழுவினர். ஆம்! தொடர்ந்து மூன்றாம் முறையாக கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று பணமுடிப்புகளையும் கோப்பைகளையும் வென்று வந்திருக்கின்றனர்.
அவர்களின் சந்தோஷத்தை நம்மால் 100 சதவீதம் உணர முடியாவிட்டாலும் அதை புரிந்து கொள்ளமுடியும், இரண்டு நாட்களுக்கு முன் பெருமணல் மின வின அன்னை திருவிழாவை முன்னிட்டு பெருமணலில் நடந்த இரண்டு போட்டிகளிலும் பணமுடிப்புகளையும் கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்புதான் நாகர்கோயிலில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தனர். இப்போது பெருமணலில் இன்னும் இரண்டு பரிசுகள்!!அடுத்தடுத்து மூன்று வெற்றிகள் என்றால் சும்மாவா?
அவர்களின் வெற்றி பற்றி அறிந்த நாம், J5 News சார்பாக பேட்டி எடுக்க திரு.ஜுனி ஜூலியான்ஸ் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டோம்.பலமுறை முயற்சித்தும் அவரின் இணைப்பு கிடைக்கவில்லை. திரு.ஜெயந்த் ஜூலியான்ஸ் அவர்களை நேரில் பார்த்து வாழ்த்துக்களை கூறினோம். நம் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக ஆடுகளத்திற்கு செல்லவிருப்பதாகவும் விளையாட்டு முடிந்ததும் மாலையில் அவரே நம்மை தொடர்பு கொள்ளவதாக வாக்களித்தார்.பூங்கொத்துக்களை அவரிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வழியில் திரு.ஜாய் ஜூலியான்ஸ் அவர்களை கண்டோம். அப்படியே அவரை மடக்கி J5 News -வாசகர்களுக்கு உங்களின் வெற்றியை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றோம்.அவரும் சந்தோஷத்துடன் சம்மதித்தார்.
அதற்கு முன்னதாக திரு அமல் ஜெதீஷ் அவர்களை முகநூல் (facebook ) வாயிலாக தொடர்பு கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை கேட்டோம். அவரும் உடனடியாக நமக்கு பதில் அனுப்பியிருந்தார்.
இதோ வெற்றியை ருசித்துக்கொண்டிருக்கும் வீரர்களின் பெயர்கள்:
திரு.ஜுனி ஜூலியான்ஸ்
திரு.ஜாய் ஜூலியான்ஸ்
திரு.ஜெயந்த் ஜூலியான்ஸ்
திரு.அமல் ஜெதீஷ்
திரு.அன்பு
திரு.நிவின்
திரு.சாரதி
திரு.சவரி
திரு.ஷெல்ட்டன்
திரு.சந்தான சேகர்
திரு.பிரவின்
திரு.சுடலை
திரு.தங்கராஜ்
திரு.லிஸ்பன்
திரு.சிவா
இனி திரு.ஜாய் ஜூலியான்ஸ் அவர்களின் பிரத்தியேக பேட்டி உங்களுக்காக:
திரு.ஜாய் ஜூலியான்ஸ்
திரு.ஜாய் ஜூலியான்ஸ்:முதலில் போட்டிகளை ஏற்பாடு செய்த நாகர்கோயில் மற்றும் பெருமணல் குழுவினர்களுக்கு என் டீம் சார்பாக நன்றிகலை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் திறமைகளை வெளிக்கொணர களம் அமைத்துக்கொடுத்தவர்கள் அவர்கள் தான் . இது போன்ற அமைப்புகள் இன்னும் பல வரவேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறையினர் விளையாட்டில் மென்மேலும் பயிற்சி எடுத்து பல சாதனைகள் புரிய முடியும்.
J5 News:தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்திருக்கிரீர்கள்,, உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
திரு.ஜாய் ஜூலியான்ஸ்:ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் Star DuckerZ குழுவில் உள்ள அனைவருக்குமே இந்த வெற்றிகளில் பங்கு உண்டு. நாங்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு விளையாடியதால் தான் எங்களால் சோபிக்க முடிந்தது.
J5 News:விளையாடிகொண்டிருக்கும் போது நான் மட்டுமே அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைப்பீர்களா அல்லது உங்கள் பாட்னருக்கும் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பீர்களா?
திரு.ஜாய் ஜூலியான்ஸ்:இது சற்று கஷ்டமான கேள்வி! கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா?
J5 News:நீங்கள் பதில் சொன்னால் தானே உங்கள் மனநிலை எங்கள் வாசகர்களுக்கு தெரியும்!ஒளிவு மறைவின்றி சொல்லுங்களேன்?
திரு.ஜாய் ஜூலியான்ஸ்:எல்லோருக்குமே அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே சமயம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடினால் தான் நம் அணி ஜெயிக்கமுடியும். man of the match வேண்டுமென்றால் கூட நம் அணி வெற்றி பெற்றாக வேண்டுமே!.அதனால் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு என் பாட்னருக்கும் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன்.நானும் அதிக ரன் குவிக்க முயற்சிப்பேன்.
J5 News:பணமுடிப்பு மற்றும் வெற்றி கோப்பை தவிர வேறு பரிசு பொருட்கள் ஏதேனும் கிடைத்ததா?
திரு.ஜாய் ஜூலியான்ஸ்:ஆமாம்! அங்கு உள்ள பங்கு தந்தை வெற்றி பெற்ற எங்கள் அனைவருக்கும் மெடல் அணிவித்து வாழ்த்தினார்.அது எங்கள் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு.
J5 News:நன்றி திரு.ஜாய் ஜூலியான்ஸ்! நீங்கள் மென்மேலும் பல வெற்றிகள் பெற J5 News சார்பாக வாழ்த்துக்கள்.
திரு.ஜாய் ஜூலியான்ஸ்: J5 News வாசகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி!
குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram