கல்யாணவீட்டு வார்ப்பு ரசம்
தேவையானவை:
புளித்தண்ணீர் - இரு கொட்டைப் புளியில் கரைத்த அரை கப்
துவரம் பருப்பு - அரை கப் (வேக வைத்துகொள்ளவும் )
தக்காளி -இரண்டு
நெய்- சிறிது
மிளகுத்தூள் - சிறிதுதேங்காய்- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் வத்தல் -ஐந்து
தனியா பொடி - சிறிது
கடுகு-சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
சீரகபொடி - சிறிது
பெருங்காயம்- சிறிது
கறிவேப்பிலை - இரண்டு கீத்து
உப்பு - தேவைக்கேற்ப
சிறிது நெய்யில் மிளகு, தனியா, மிளகாய் வத்தல் முதலியவற்றை வறுக்கவும். பின் சீரகம் போட்டு வறுக்கவும்.கடைசியாக தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும். , ஆறியதும் தண்ணீர் விட்டு மிக்சியில் பேஸ்டாக அரைக்கவும்.இது தான் மசாலா
ஒரு தக்காளியை பொடிசாக அறிந்து கொள்ளவும். இன்னொரு தக்காளியை வெந்நீரில் போட்டு தோல் உரித்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து புளித்தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி ,நறுக்கிய தக்காளி அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின் , துவரம் பருப்பு சேர்த்து, நுரைத்து வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, மிளகாய் வத்தல்,பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
இது தான் கல்யாணவீட்டு வார்ப்பு ரசம். செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள்.
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram