Thursday, July 30, 2015

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை

ஒரு நிமிடத்தில் எத்தனை முறை 

1.நீங்கள், ஒரு நிமிடத்தில் எத்தனை முறை  உங்கள் காலனியை கழற்றி மீண்டும் மாட்டுவீர்கள்?

2."J5 News"  என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது தெரியுமா! என்ன! சொல்லி பார்த்து விட்டீர்களா! உள்ளுக்குள் சிரிக்கிறீர்கள் தானே! இதைப் படித்ததும் மீண்டும் சிரிக்கிறீர்கள்!

3.அருகிலிருப்பவர் உங்களிடம் ஏன் சிரிக்கிறாய் என்று கேட்கிறார், அப்படித்தானே!

அவரையும் தினமும் www.jfivenews.in படிக்கச் சொல்லுங்கள்!!





                 
ஒட்டிய உதடு                                                         ஒட்டாத உதடு



தினமும் www.jfivenews.in பாருங்கள் 

Wednesday, July 29, 2015

பூசணிக்காய் குழம்பு

                                                  பூசணிக்காய் குழம்பு

தேவையானவை:
பூசணிக்காய் - ஒரு கீத்து
தக்காளி - 2 ( தக்காளியை ஒதுக்குவோர், புளி  செரித்துக்கொள்ளலாம். ஆனால் தக்காளி புற்றுநோய்க்கு ஒரு சிறந்த நிவாரணி )
வரமிளகாய் -3
வெங்காயம் - பெரியது ஒன்று ( பொடிதாக நறுக்கவும். நீளவாக்கில் வேண்டாம்)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் -ஒரு டீஸ்பூன்
வத்தல் தூள் -ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - சிறிது
சர்க்கரை - சிறிது
கறிவேப்பிலை - இரண்டு கீத்து
உப்பு - தேவைக்கேற்ப


பூசணிக்காயில் மோர் குழம்பு நிறைய பேர் செய்திருப்பார்கள்.இது சற்று வித்தியாசமான சுவையான குழம்பு.செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் அனுப்புங்கள்!

செய்முறை:

முதலில் தண்ணீர் ஊற்றி அதில் பூசணிக்காயை வேக வைக்கவும்( அதிக நீர் வேண்டாம்.பாதி வேகும் போது அரை டம்ளர் தண்ணீர் இருக்க வேண்டும்).இப்போது மசாலா பொடிகளையும் ( மேலே குறிப்பிட்டுள்ள ) தக்காளி அல்லது புளித்தண்ணீரையும் அதில் இட்டு மேலும் வேகவிடவும்.வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், வரமிளகாய், வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும். இப்போது பூசணிக்காய் பாத்திரத்தில் இதை கொட்டி அடுப்பை அணைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தினமும் www.jfivenews.in பாருங்கள்!

    மச்சு பிச்சு மலை

     மச்சு பிச்சு மலை


    உலக அதிசயத்திற்கு ஈடாக கருதப்படும் மச்சு பிச்சு மலை என்ற  மேகம் தவழும் மலை கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டில், பேரரசர் பச்சாக்குட்டிக்(Pachacútec) என்பவர் ஏறத்தாழ 1000 பேர் வாழும் வகையில் இன்கா பேரரசின் கஸ்கா நகரத்தை  இந்த மலையில்  நிர்மாணித்தார். இந்த நகரம் ஆண்டஸ்பீடபூமிக்கு மேலே பாதி வழியில், அமேசான்காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் இருந்தது. (வரைபடத்தில் இந்த மலையின் இருப்பிடத்தை குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும்).







    பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியபோது கஸ்கா நகருக்கும் ஆபத்து வந்தது. மக்கள் அனைவரும் காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர்.இருப்பினும் ஸ்பானிஷ் படை படைகளை எதிர்த்துக்கொண்டே இருந்தனர். 36 ஆண்டு காலம் இந்த சண்டை நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.ஸ்பானியரால் இன்காபேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக இந்நகரம் காணாமல் போனதாக கருதப்பட்டது.சின்னம்மைநோய் தொற்றால் மீதம் இருந்தவர்கள் இறந்திருக்கலாம் என்றும்  கருதப்படுகிறது. 





                                      மச்சு பிச்சுவில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமா 



























    எந்திரன் படத்தில் வரும் 'கிளிமஞ்சாரோ ....' பாடல் இங்கு தான் படமாக்கப் பட்டது.




     1911-ல் ஹிரம் பிங்கம் ( யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியர் ) என்பவரால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.இருப்பினும் பிங்கம் கண்டறிந்த செய்திகளே வரலாற்றில் அதிகம் இடம் பெற்றுள்ளன.


    பிங்காம் இந்த இடத்திற்கு வந்து ஏறத்தாழ 3 குழுவினருடன் தங்கி அந்த நகரை ஆராய்ந்தார்.அப்போது 150 பெண்களின் எலும்புக் கூடுகளும் 233 ஆண்களின் எலும்புக் கூடுகலும் கண்டெடுக்கப்பட்டன. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது சற்று சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.இங்கு நடந்த ஆராச்சியில் வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் கூறியிருக்கிறார்.



    தற்போது, இந்த இடம்   சுற்றுலாப் பயணிகளின்  வந்து குவியும் இடமாகத் திகழ்கிறது. . 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலிலும்  சேர்க்கப்பட்டது.
    குஸ்கோ  என்ற இடத்திலிருந்து ஒல்லாண்டயடம்போ - விற்கு ரயிலில் சென்று பிறகு பேருந்து பயணம் மூலம் மச்சு பிச்சு நகருக்கு செல்லலாம்.

    அமெரிக்காவின் New Haven, Connecticut -ல் உள்ள யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் மச்சு பிச்சுவின் கலைப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது.  ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வாருங்களேன்!

    தினமும் www.jfivenews.in பாருங்கள்!









    Monday, July 27, 2015

    மஞ்சள் வண்ணத்தில் இயற்கையும் செயற்கையும்


    மஞ்சள் வண்ணத்தில்  இயற்கையும்  செயற்கையும் 







                               
                                                                www.jfivenews.in








                                                                          www.jfivenews.in






                                                                       www.jfivenews.in



                                                               www.jfivenews.in

    பிரபலமான கைகடிகாரங்கள்

    பிரபலமான கைகடிகாரங்கள் 


    சூரியனைப் பார்த்து நேரம் சொல்லிய நம் முன்னோர்கள் இன்று இந்த கைகடிகாரங்களின் விலையைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?


    1.Rolex Cosmograph Daytona



    விலை: ரூபாய் ஏழு லட்சம் முதல்





    Rolex Cosmograph Daytona -ஐ போட்டிருக்கும் இந்த நடிகரை, ஆங்கில பட ரசிகர்களுக்குத் தெரியும்.பெயர் சொல்லுங்களேன்!


    2.Omega Speedmaster 


    விலை: ரூபாய் 2,83,000 முதல் 5,48,000 வரை










    3.Audemars Piguet Royal Oak



    விலை: ரூபாய் பனிரெண்டு லட்சத்து அறுபதாயிரம் முதல்







    4.1794-ல் லண்டனில் இருந்த வில்லியம் அந்தோணி என்பவரால் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் . இதற்கு விலையே கிடையாது!ஆம் இது ஒரு பொக்கிஷம்.










    5. மீண்டும் ஒரு பொக்கிஷம்.1800 களில் உருவான முதல் டிஜிட்டல் வாட்ச்.








    6.Jaeger LeCoultre Gyrotourbillon

     விலை : ரூபாய் இரண்டரை கோடி . 

    முதன் முதலாக "space age technic" இந்த கடிகாரத்தில் தான் அறிமுகப்படுத்தப் பட்டது. அதென்ன! space age technic என்கிறீர்களா?  பின்னோட்டம் இடுங்கள், பதிலில் விளக்குகிறேன்.  www.jfivenews.in 











    www.jfivenews.in



    Thursday, July 23, 2015

    ஜெர்மனியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி 2

    ஜெர்மனியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி 2


    முதல் பகுதியில் ரைன் நதிக்கரையோரம் 40 -க்கும் மேற்பட்ட அரண்மனைகளும் கோட்டை களும் இருப்பதாக எழுதியிருந்தேன் அல்லவா! அவற்றைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.


    நான் ஜெர்மனியில் பல வருடங்கள் இருந்ததன் காரணத்தினால் இன்னும் ஒரு சில பதிவுகள் ஜெர்மனியைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். உங்களின் ஆதரவைப் பொறுத்து அது அமையும். ஆதரவு என்றால் நீங்கள் " share " செய்வதைப் பொறுத்து என்று பொருள்.


    பாரதி ராஜாவின் 'கண்களாய் கைது செய்' படத்தின் பல பகுதிகளில் இந்த கோட்டைகள் இடம் பெறும்.சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன் கூட ஒருமுறை தன் பேட்டியில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். " ஜெர்மனியின் ரைன் நதியில் படகில் சென்றபடி அந்த கோட்டைகளை நான் ரசித்த நாட்கள் மறக்க முடியாதவை" .


    இளைய தளபதி விஜய் நடித்த 'மின்சார கண்ணா ' படத்தின் பல பகுதிகள் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் எடுத்தது தான். இப்போது ஜெர்மனியில் உள்ள அரண்மனைகள் உங்களுக்காக:


    1.Herrenchiemsee அரண்மனை (Bayern மாநிலம்):


    இந்த அரண்மனையில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா, மற்றும் ஜெய சித்ரா நடித்த ரத்த பாசம் திரைப்படம் எடுக்கப்பட்டது. " மான் குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே..." என்ற பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது.






    அரண்மனையின் வெளிப்புறத் தோற்றம்









    அரண்மனையின் முன்னால் உள்ள சிலையின் மேல் என் வாரிசு






    அரண்மனையின் உள்ளே .............




    அரண்மனையின் ஒரு பகுதி







    படகில் போன பின் குதிரை வண்டியில் மலை மீது ஏறும் போது.............வண்டியில் இருப்பது......நீங்கள் நினைப்பது சரிதான்! அது என் மகன் தான்.


    2. Füssen அருகில் உள்ள Hohenschwangau கோட்டை:


    பவேரியா (baveriya) மாகாணத்தை ஆண்ட இரண்டாம் Maximilian மன்னரும் அவரின் மனைவியும் கோடை காலத்தை இந்த அரண்மனையில் தான் களிப்பார்கள்.வருத்திற்கு மூன்று லட்சம் பேர் வரை இந்த அரண்மனையைப் பார்க்க வருகிறார்கள்.














    3. Eisenach -கில் உள்ள Wartburg கோட்டை:


    நான்காம் லூட்விக் ( Ludwig) மன்னன் ஹங்கேரியைச் சார்ந்த எலிசபெத்தை தன்னை மணம் செய்து கொள்ள சொல்லி இங்கு தான் அடைத்து வைத்திருந்தார். பின்னாளில் எலிசபெத், புனிதையாக பிரகடனம் செய்யப்பட்டார்( அவரது புகைப்படம் கீழே).













                        புனித எலிசபெத்



    4. Würzburg - கில் உள்ள Residenz கோட்டை:


    Würzburg நாட்டு இளவரசர் bishops - புக்கு சொந்தமான அரண்மனை இது.












    5. Cochem-ல் உள்ள Reichsburg கோட்டை :


    மூன்றாம் கொன்ராட் (Konrad III) அரசரிடம் இருந்து 1688-ல் ஒன்பது வருட சண்டைக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிஸ் (King Louis XIV) கைப்பற்றிய அரண்மனை இது.












    தினமும் www.jfivenews.in பார்க்கத் தவறாதீர்கள்.

    Sunday, July 19, 2015

    ஜெர்மனி நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்

     ஜெர்மனி நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்


    1.Black Forest

    அடர்ந்த மரங்கள் சூழ்ந்த  "Black Forest" மலைப்பகுதி, ஜெர்மனியின்  தென்மேற்கு பகுதியில்  அமைந்துள்ளது.  ஒரு காலத்தில் பனி சறுக்கு வீரர்களின் விளையாட்டு ஸ்தலமாகிய விள ங்கிய இது இப்போது மிகவும் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்.




    2.ரைன் நதி ஜெர்மனியின் மிக முக்கியமான நதிகளில் ஒன்று.1320 கி. மீ  நீளமுள்ள இது சுவிஸ்சர்லாந்திலிருந்து ஜெர்மனி வழியாக நெதர்லாந்து வரை நீள்கிறது.ஏறத்தாழ 40 கோட்டைகள் சிறியதும் பெரியதுமாக இந்த நதிக்கரையோரம் ஜெர்மனியில் அமைந்துள்ளது.படகில் இந்த நதியில் பயணித்து, கோட்டைகளை பார்ப்பது தனி அழகு.




    3.பாபிலோன் தொங்கு தோட்டத்தை ஞாபகப்படுத்தும் போஸ்ட்டாமில்  உள்ள சன்சோ சி பார்க்கும் அரண்மனையும் (Sanssouci Park and Palace)



    4.Bayern மாநிலத்தில்( munich நகரத்திற்கு அருகில்) உள்ள நோயஷ்வான்ஷைன் கோட்டை




    5.அனைத்து நகரங்களிலும் அக்டோபர் மாதத்தில் நடக்கும்  "Oktoberfest" திருவிழாவை மறக்க முடியுமா!

    aktoberfest -ல்  இந்த ப்ரட்டையும் பீயரையும் சாப்பிடாதவர் உண்டோ!



    6.கோல்ன் ( cologne ) நகர ஆலயம் 


    குறிப்பு:

    உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com

    எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
    எங்கள் facebook page : J5 news