ஞாயிறு ( 31.5.2015) திருப்பலி மற்றும் வாசகங்களின் முன்னுரைகள்
திருப்பலி முன்னுரை:
மூவொரு இறைவன் பெருவிழாவை காண வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். அன்பே கடவுள், அன்பில் இறைவனை காணலாம் என்பதே மூவொரு இறைவன் பெருவிழாவின் முக்கிய நோக்கம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்றார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர்.ஆனால் பூமியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, இனி வாழப்போகிற அனைத்து உயிர்களின் மீதும் இறைவன் அன்பாக இருந்து அந்த அன்பை தன் மகன் மூலம் வெளிப்படுத்தி, தூய ஆவியின் வழியாக நம் ஒவ்வொருவர் மீதும் நிலைபெறச் செய்கிறார்.
இறைவனை நாம் மறைபொருளாக, மறையுன்மையாக பார்க்கவேண்டுமே அன்றி, நம் ஆறாம் அறிவால் பகுத்தறிய முற்படக்கூடாது. அன்பின் அடையாளமாகவும் அனுபவமாகவும் மட்டுமே மூவொரு இறைவனை நாம் துய்த்துணர வேண்டும். அந்த மூவொரு இறைவனின் அன்பில் திளைத்து வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கு கொள்ளவோம்.
முதல் வாசக முன்னுரை:
மோசே மக்களிடம் கடவுளின் அருஞ்ச்செயல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி அவர்கள் மேல் இறைவன் கொண்ட நல்லெண்ணத்தை விளக்குகிறார். மேலும் கடவுளின் மேல் நம்பிக்கை வையுங்கள், கடவுள் மட்டுமே நம்மை பாதுகாப்பவர், அவரால் மட்டுமே எல்லாம் முடியும் என்று எடுத்து கூறுகிறார். எனவே கடவுளைத்தவிர வேறு எவர்பாலும் பற்று கொள்ளவேண்டாம் என்று மோசே கூறும் முதல் வாசகத்திற்கு செவி மடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
எப்படி ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்ததும் தன் தந்தையின் சொத்துக்களின் மேல் உரிமை பாரட்ட முடியுமோ, அதே போல நாம் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் மூலம் இறைவனின் துன்பத்திலும் மாட்சியிலும் பங்கெடுக்கக் கூடிய கிறிஸ்துவின் பங்காளிகளாகிறோம்.நாம் கடவுளின் குழந்தைகள் என்பதற்கு மேலதிக சான்றாக தூய ஆவியும் எப்போதும் நம்ம்க்டையே இருந்து நம்மை கடவுளின் மக்களாக என்றன்றைக்கும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.
புனித பவுல் உரோமை நகர மக்களுக்கு எழுதிய மடலில் கடவுளின் மக்கள் யார் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இரண்டாம் வாசகத்தில் அதற்கான பதிலை கூறியுள்ளார். அது என்ன பதில் என்பதை நாம் அனைவரும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்பதன் மூலம் தெரிந்து கொள்வோம்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram