கிசுகிசு கிசுகிசு
கண்ணம்மாவும் பொன்னம்மாவும் சிறு வயது முதலே தோழிகள். இருவருக்கும் திருமணமும் உள்ளூரிலேயே நடந்ததால் இந்த 50 வயதிலும் அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. J5 News -க்காக அவர்கள் தந்த சில கிசுகிசு செய்திகள் அவர்கள் பேசும் நடையிலேயே::
"அடியே பொன்னம்மா! கேட்டியாடி சேதி!"
"சொல்லுங்கக்கா!"
"வடக்கன்குளம் பக்கத்தில் உள்ள அந்த ஊருல ஜூலை மாசம் 2-ம் தேதிலருந்து 11-ம் தேதி வரைக்கும் திருவிழா நடக்க போவுதாம்.கேட்டவரமெல்லாம் கெடைக்குமாமே அந்த கோயிலுக்கு போனா! நா போலாமுன்னு இருக்கேன். நீயும் வாரியா?"
"நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும். நா கூட கேள்வி பட்டிருக்கேங்கா அந்த ஊரைப்பத்தி! புதும வேப்பமரம் கூட உண்டாமே!அத ஒரு தடவையாவது பாத்துபுடனுமுன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இந்த வருஷம் அதுக்கு சந்தர்ப்பம் வந்திடிச்சி!" - இது பொன்னம்மா.
"அந்த ஊர்ல இருக்கிற பங்கு தந்தை கூட, அடுத்தவங்கள கை காட்டி வேலை வாங்காம அவரே களத்தில இறங்கி கவுரவம் பாக்காம எல்லா வேலைகளையும் செய்வாராம்" - கண்ணம்மா
"அங்க தங்க கொடிமரம் இருக்கிறதா கேள்வி பட்டேனே உண்மையா அக்கா?"
"இப்போதைக்கு கல் கொடிமரத்துக்கு தங்க கலர் அடிச்சிருக்காங்க. ஆனா கூடிய சீக்கிரமே நீ சொன்னது நடந்தாலும் ஆச்சரிய படறதுக்கு இல்ல! ஏன்னா, அந்த ஊர்ல உள்ளவங்க எல்லாருமே கோயிலுக்கு அள்ளி கொடுக்கிறதுல ஏழு வள்ளல்களையுமே மிஞசியவங்க தான்.அது மட்டுமில்ல! அந்த பங்கு தந்தையோட உழைப்பும் இராசியும் அவங்க கூடவே இருக்கே!ஏற்கெனவே அந்த ஆலய வளாகத்தில இரண்டு கெபிகளையும் 14 ஸ்தலங்களையும் கட்டியிருக்காங்க. யார் கண்டது! அடுத்த புராஜெக்ட் தங்க கொடிமரமாக கூட இருக்கலாம்! நடந்தா சந்தோசம் தானே ! "- கண்ணம்மா.
கண்ணம்மாவே மேலும் தொடர்ந்து, "
அந்த ஊரு இளைஞர்களப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.
கோயிலுக்கு போகணுமுன்னு சொன்னாலே பைக்க எடுத்துகிட்டு வெளிய போற இளைஞர்களுக்கு மத்தியில, அந்த ஊரு இளைஞர்கள் தினமும் நல்ல காரியம் பண்றாங்க. அதாவது, மாலையில கோயிலில குடும்ப ஜெபமாலை முடிஞ்சதும் எல்லா இளைஞர்க ளும் ஒண்ணு சேர்ந்தது கோயிலுக்குள்ள முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணுவாங்களாம். அது மட்டுமில்ல! கோயில் சம்பத்தமா எந்த வேலைன்னாலும் பங்கு தந்தை கூட கை கோர்த்து உடனே செய்து முடிச்சிருவான்களாம்".
"அக்கா! நீங்க சொன்னத கேட்க கேட்க, எனக்கு அந்த ஊர் திருநாளைக்கு போகணும் போல ஆசையா இருக்கு! கூட்டிட்டு போங்களேன் "- பொன்னம்மா
"கண்ணடிப்பா போவோம். போயி புனித ஆசீர்வாதப்பர் அருளையும் வாங்கிகிட்டு வருவோம்.அவர் தான் கேட்ட வரத்தையெல்லாம் கொடுப்பவர் ஆயிற்றே! ஆமா உன்கிட்ட ஒண்ணு கேக்கனுமுன்னு நெனச்சிகிட்டே இருந்தேன்!
உன் மக அருக்காணிக்கு மாப்பிள்ள பாத்துக்கிட்டு இருந்தியே! அந்த கோவில் திருவிழாவுக்கு போவோம். அங்கெ ஏதாவது மாப்பிள்ளை அமைஞ சாலும் அமையும்! என்ன சொல்ற? " - கண்ணம்மா
"அவ அமெரிக்கா மாப்பிள்ள தான் வேணும்முன்னு ஒத்த கால்ல நிக்கிறா! நா என்ன பண்ண! பெரிய படிப்பு வேற படிக்க வச்சி புட்டேன். அவ கேக்கிற மாதிரி மாப்பிள்ளை பாத்து தானே ஆகணும்!" -பொன்னம்மா
"அப்படி என்ன பெரிய படிப்பு படிச்சிருக்கா உன் பொண்ணு அருக்காணி?"
" அஞ்சாங் கிளாஸ்"
எங்கள் Email: jfivenews@gmail.com
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram