Tuesday, June 9, 2015

பத்திநாதபுரம் திருவிழா அழைப்பிதழ் - 3 (பத்திநாதபுரம் இளஞ்சிங்கங்கள் பிரத்தியேக வீடியோ)

பத்திநாதபுரம் திருவிழா அழைப்பிதழ் - 3 (2.7.2015 முதல் 11.7.2015 வரை)


இந்த வருட 8- ம் திருவிழா, 9- ம் திருவிழா மற்றும்  10- ம் திருவிழா ஆகிய

 மூன்று நாட்களிலும் தேர் எடுப்பதென்று ஊர் கூட்டத்தில்

 முடிவெடுக்கப்பட்டது.  8 மற்றும்  9- ம் திருவிழாக்களில் வழக்கம்போல 

இரவிலும்,  10- ம் திருவிழாவின் போது, மதியம் 3 மணிக்கு தேர் மற்றும் 

சப்பரம் ஆகிய இரண்டும் ( மாதா  மற்றும் ஆசீர்வாதப்பர்)  

எடுப்பதென  முடிவானது.



பத்திநாதபுரத்தில், தற்போது உள்ள ஆலயம் 29.11.1969 -ம் ஆண்டு Rev  Fr.A.M 

ஞானம் சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டு 11.7.1974-ம் ஆண்டு, 

அப்போதைய பாளையங்கோட்டை ஆயர் மேதகு இருதயராஜ் அடிகளாரால் 

அர்ச்சிக்கப்பட்டு  திறக்கப்பட்டது.அந்த சமயத்தில் Rev  Fr. M.S அந்தோணி 

சுவாமிகள் வடக்கன்குளத்தின் பங்கு தந்தையாக இருந்தார்.  பத்திநாதபுரம் 

அப்போது வடக்கன்குளத்தின் துணை பங்காக இருந்தது.

பத்திநாதபுரத்தின் 125-ம் திருவிழா கொண்டாட்டத்தின் போது பதிவை இளஞ்சிங்கங்கள்  ( முதல் திருவிழாவின் போது எடுத்த வீடியோ )




 2006-ம் ஆண்டு, 9-ம் திருவிழாவின் போது இரவில் நல்ல மழை. எனவே, 10-ம் திருவிழா காலை  திருப்பலி  ஆலயத்தின் உள் வைத்து நடைபெற்றது. அப்போது எடுத்த சில புகைப்படங்கள் உங்களுக்காக :





பழைய தேர்பரையில்  மாதாவின் தேர் 



மழையின் காரணமாக ஆலயவளாகத்தில் தண்ணீர் 

கட்டி நிற்பதை இந்த படத்தில் பார்க்கலாம்.




திருவிழாவானது, ஜூலை மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி 

முடிவடைகிறது.  மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறும் திருவிழாவை 

 உங்களுக்காக தினமும் வீடியோ மூலமும் புகைப்படங்கள் வழியாகவும் J 5 

News கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வீடியோக்கள் J 5 News  -

ன் youtube பக்கத்தில் வெளியாகும்.






குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram