13.06.2015 ஒரு தகவல்
டிவி, ரேடியோ மற்றும் தினசரி பத்திரிக்கைகளில் நாம் அடிக்கடி வாசிக்கும் அல்லது கேள்வி படும் வார்த்தை " சுவிஸ் பேங்க்".
இந்த பேங்க் எங்கே இருக்கிறது? எவ்வளவு பேர் இதில் டெபொசிட் பண்ணி இருக்கிறார்கள்? வங்கி கணக்கு, தொடங்குவதற்கு குறைந்த பட்சம் எவ்வளவு பணம் நாம் கட்ட வேண்டும்?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்குமே பதில்,
"இல்லை" அல்லது "கிடையாது" என்பதுதான்.
என்ன! குழப்பமாக இருக்கிறதா?
ஏனென்றால் "சுவிஸ் பேங்க்" என்று ஒரு தனிப்பட்ட வங்கியே உலகில் எங்கும் கிடையாது.
அப்படியானால் பேப்பரில் "சுவிஸ் பேங்க்" என்று வருகிறதே! என்கிறீர்களா?இதற்கு பதில் :
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுமே "சுவிஸ் பேங்க்" தான்.
அதாவது "சுவிஸ் பேங்க்" என்பது ஒரு பொதுவான வார்த்தை .
சுவிட்சர்லாந்து நாட்டில் என்னென்ன வங்கிகள் பிரபலமானவை என்றால் இரண்டு வங்கிகளை குறிப்பிடலாம்.
1.UBS AG
2.Credit Suisse Group
இந்த இரண்டு வங்கிகளும் தான் சுவிட்சர்லாந்து நாட்டில் கோலோச்சி கொண்டிருக்கின்றன.
சுவிஸ் வங்கிகளை Swiss Financial Market Supervisory Authority (FINMA) என்ற அமைப்பு தான் மேற்பார்வை இட்டுக்கொண்டிருக்கிறது.
ஏன் சுவிஸ் வங்கியில் பணம் போட்டால் யாருக்கும் தெரியாது அல்லது தெரிய படுத்த மாட்டார்கள் என்றால்,
சுவிஸ் நாடு, மிகவும் சிறியது. காலநிலையை எடுத்துக்கொண்டால் பிற ஐரோப்பிய நாடுகளை ஒத்தது. எனவே வருடத்திற்கு ஒரு முறை
மட்டுமே விளைச்சல் பார்க்க முடியும்.செப்டெம்பரில் மரங்களும் செடிகளும்
தங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பித்து டிசம்பர், ஜனவரியில் ஐஸ் (snow) மழையால் என்கெங்கினும் வெள்ளைநிறமாகி மீண்டும் ஏப்ரலில் தான் துளிர்க்க ஆரம்பிக்கும்.அது மட்டுமன்றி மலைகள் நிறைந்த பகுதி ( interlagen -ஐ மறக்க முடியுமா?)
எனவே தான் வங்கிகள் மூலம் அவர்கள் பணம் திரட்டுகிறார்கள்.வங்கிகள் தான் இவர்களின் வருமானத்தின் மூலாதாரம். அதனால் தான் யார்
எவ்வளவு பணம் போட்டாலும் இவர்கள் வெளியில் சொல்வதில்லை . சொன்னால் அடுத்த முறை யாரும் பணம் போடா மாட்டார்களே!
என்ன! சுவிஸ் பேங்க்-ல் அக்கௌண்ட் திறக்க ரெடியாயிட்டீங்களா!
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram