VBS வகுப்புகள் (10 நாட்கள்) பத்திநாதபுரத்தில் ஆரம்பமாகி விட்டன
3.5.2015 முதல் நம் பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் ஆரம்பமாகி கன ஜோராக நடை பெற்று வருகிறது.
தினமும் காலை 6:30 மணிக்கு திருப்பலியும் அதைத் தொடர்ந்து VBS வகுப்புகளும் நடை பெறுகிறது.எனவே மாணவ மாணவிகள் திருப்பலிக்கு வரும்போதே தங்கள் பாடப்புத்தகங்களையும் கொண்டு வந்து விடுகின்றனர் .
ஏறத்தாள 7:30 மணி அளவில் திருப்பலி முடிந்ததும் நான்கு நிலை மாணவ மாணவிகளுக்கும் (நான்கு குழுக்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்) வகுப்புகள் நடை பெறும். அனைத்து குழந்தைகளுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன .
நான்கு நிலைகள்:
1. முதல் நிலை என்பது Pre K .G முதல் இரண்டாம் வகுப்பு வரையிலும்.
2. இரண்டாம் நிலை என்பது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும்.
3. மூன்றாம் நிலை என்பது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும்.
4.நான்காம் நிலை என்பது ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலும்.
நான்கு குழுக்கள் விபரம்:
1.மத்தேயு குழு
2.மாற்கு குழு
3.லூக்கா குழு
4.யோவான் குழு
அனைவருக்கும் 8 மணி அளவில் காலை உணவு நம் ஊரில் உள்ள ஏதாவது ஒரு நல்லுள்ளத்தால் வழங்கப்படுகிறது.
காலை உணவுக்கு முன் நான்கு நிலைகளாக பாடம் படித்தவர்கள், உணவுக்கு பின் நான்கு குழுக்களாக பாடல், கதை, விளையாட்டு என்று தம் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இது மட்டும் போதாது என்று, ஒவ்வொரு நாளும் இரவு கலைநிகல்சிகளும் நம் ஊர் மக்களின் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஊட்டுகின்றன.போட்டிகள் குழு வாரியாக நிலைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.
1-ம் நாள் (3.5.2015) அன்று பாடல் போட்டி.
2-ம் நாள் - மாறுவேட போட்டியும் சைகை மற்றும் உடல் அசைவுகளின் மூலம் ஒரு கருத்தை சொல்லுதல் ( 5 நிமிடம்).
3-ம் நாள் - எதிரும் புதிரும். அதாவது பேசுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு தலைப்பு கொடுப்பார்கள் (உ -ம்) தொலைக்காட்சி. இந்த தலைப்பில் முதலில் நன்மைகளைப் பற்றி பேசவேண்டும். 2 நிமிடம் முடிந்ததும் தீமைகளைப் பற்றி பேசவேண்டும்.6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு உற்சாகமாக பேசினார்கள்.
இன்று, நடனப்போட்டி நடைபெறுகிறது. அதன் புகைப்படங்களும் வீடியோவும் இந்த பகுதியில் தினமும் பதிவேற்றப்படும். "J5 news " என்ற facebook தளத்திலும் தளத்திலும் நீங்கள் கண்டு களிக்கலாம்.
இவ்வாறு நம் குழந்தைகளின் விடுமுறை பயனுள்ளதாக கழிந்து கொண்டிருக்கிறது.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
குறிப்பு:
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram