VBS வகுப்புகள் நான்காவது நாளாக நேற்றும் எப்போதும் போல காலை திருப்பலி முடிந்ததும் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றது. இரவு ஜெபத்திற்கு பின் மனப்பாட போட்டியும் நடனப் போட்டியும் நடைபெற்றன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் நான்கு நிலைகளிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர் மனப்பாட போட்டியிலும் நடனப் போட்டியிலும் கலந்து கொண்டனர்.எனவே மனப்பாட போட்டியில் 16 பேரும் நடனப் போட்டியில் 16 பேரும் பங்கெடுத்து தத்தம் குழுவிற்கு மதிப்பெண்களை வாங்கி குவித்தனர்.
32 போட்டிகள் என்பதன் காரணத்தால் நடனப்போட்டியின் நேரம் பாதியாக குறைக்கப்பட்டது.ஏறத்தாழ 2 நிமிடங்களே ஒவ்வொரு நடனத்திற்கும் ஒதுக்கப்பட்டது. L .K .G முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் நடனத்தில் பங்கெடுத்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மனப்பட போட்டியில், சிறுவர் சிறுமியர் கூட பங்கு கொண்டு, புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறி பார்வையாளர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்தனர்.
போட்டியில் 32 பேர் பங்கு கொண்டதன் காரணத்தினால் நேற்று இரவு நிகழ்ச்சி முடிய சிறிது கால தாமதமாயிற்று.இருந்தபோதிலும் மக்கள் அனைவரும் உட்கார்ந்திருந்து தங்களின் குழந்தைகளின் நிகழ்சிகளை சந்தோசமாக கண்டு களித்தனர்.
புகைப்படங்களும், வீடியோவும் "J5 news" facebook page பகுதியில்.
இன்றைய நிகழ்ச்சியின் தொகுப்புகளை நாளை பதிவிடுகிறேன்.
எங்கள் facebook page : J5 news
Very nice. Keep it up
ReplyDelete