Thursday, May 7, 2015

பத்திநாதபுரத்தில் இன்று மாதத்தின் முதல் வியாழன் நவநாள் திருப்பலி

  பத்திநாதபுரத்தில்  இன்று மாதத்தின் முதல் வியாழன் நவநாள் திருப்பலி 

ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழன் அன்று புனித ஆசீ ர்வாதப்பருக்கு நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

அதேபோல, இன்றும்   காலை 11:30  மணி அளவில்  ஆசீர்வாதப்பர்  பாடலுடன் நவநாள் ஆரம்பமானது.

ஆலயத்தில் இன்று புதிதாக புனித ஆசீர்வாதப்பர் பதக்கத்தின் இருபுற  தோற்றமும் மிக பெரிய அளவில் செய்து  பீடத்தின் மேற்பகுதியில் வைத்திருந்தது மிகவும் அழகாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருந்தது
(புகைப்படம் பார்க்கவும்). இந்த பதக்கத்தில் எழுதப்பட்ட எழுத்துகள், அதன் விளக்கங்கள் மற்றும் ஆசீர்வாதப்பர் உடன் இருக்கும் பொருட்களுக்கான விளக்கங்களை .பங்குத்தந்தை Rev.Fr ராஜன் அவர்கள்   கடந்த ஞாயிறு திருப்பலி பிரசங்கத்தில் தெளிவாக விளகினார்.அவற்றை   பின்னொருமுறை பதிவிடுகிறேன்






" ஆசீ ர்வாதப்பரே

எம் ஊரின் காவலரே

உம்மை நாடி ஓடி வந்தோம்

எம் குறைகள் தீர்ப்பவரே .........

................

..............."

இந்த பாடலை பாடும் போதே நம் மனதில் உள்ள கவலைகள் யாவும் பறந்தோடி  ஆசீர்வாதப்பரோடு நம் உள்ளம் ஐக்கியமாகிவிடுகிறது.மேலும்
ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நவநாள் புத்தகத்தையும் பாடல் புத்தகத்தையும் அனைவரும் கைகளில் ஏந்தி நவநாளில் பங்கு கொள்ளும்போது, நேர்மறை  எண்ணத்துடன் கூடிய பக்தி மின் காந்த  அலைகள் ஆலயம் முழுவதும் ஆக்கிரமிக்கிறது.

இன்று நல்லுள்ளம் கொண்ட ஒருவரால் அசன உணவும் வழங்கப்பட்டதால் அவரின் உறவினர்கள், துணை பங்கு மக்கள்  மற்றும் வெளியூர் மக்கள் என  பலராலும் ஆலயம் நிரம்பி வழிந்தது.

பலர்  தங்கள் விண்ணப்பங்களை நம்பிக்கையோடு விண்ணப்ப பெட்டியில் போட்டிருந்தனர்.அவர்களின் விண்ணப்பங்கள் குருவானவரல் படிக்கப்பட்டு இறைமக்களின் கூட்டு பிராத்தனையோடு ஆசீர்வாதப்பர் வழியாக கடவுளிடம் சேர்பிக்கப்பட்டது.

நவநாள் முடிந்ததும் திவ்விய நற்கருணை ஆசீர்  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருப்பலியும் இனிதே நடந்தேறியது.

திருப்பலி முடிந்ததும் அனைவருக்கும் அசன உணவு வழங்கப்பட்டது.

குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team






No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram