Friday, May 15, 2015

சந்தோஷம்! மகிழ்ச்சி!! அசோகம்!!!

சந்தோஷம்!         மகிழ்ச்சி!!             அசோகம் !!!


சந்தோஷம் 1:

என் முதுகில் தட்டிக்கொடுத்து நேரிலும், போனிலும், facebook  ஊடாகவும் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் மீண்டும் என்னை எழுதத் தூண்டும் தூண்டுகோலாக அவர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம்.என் மனதின் ஆழத்திலிருந்து மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இனி தினமும் ஒரு பதிவாவது போட்டுவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆகவே, தினமும் என் ப்ளாக்கிற்கு வந்து பதிவை படித்து  என்னை உற்சாகப்படுத்தவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்த பதிவின் தலைப்பில் 3 முறை சந்தோஷம் என்று எழுதிருக்கிறோமே, இன்னும் இரண்டு சந்தோஷத்திற்கு எங்கே போவது ( நமக்குத்தான்  எப்போதும் கூட்டணி போட, சோகம் வாசலிலேயே நிற்கிறதே ) என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது மூன்று சந்தோஷங்கள் என்ன முப்பதாயிரம் கோடி சந்தோஷங்கள் உனக்கு கிடைக்கும் என்ற அசரீரி கேட்டது. பலித்தால் சந்தோஷம் தானே! அதையும்  உங்களிடமும் பகிர்ந்து கொள்வேன்!! 


சந்தோஷம் 2:

ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே என் ப்ளாக் http://jfivenews.blogspot.in - கிற்கு 322 முறை மக்கள் வருகை தந்திருக்கின்றனர். Screenshot இணைத்துள்ளேன், பார்க்கவும். ப்ளாக்கில் counter இரண்டு நாட்கள் கழித்தே சேர்த்ததன் காரணமாக counter -ல்  மொத்தம் 33 எண்ணிக்கையை  குறைவாகத்தான்  காட்டும். Screenshot  பார்க்க மறந்துடாதீங்க.

இந்தியாவில் இருப்பவர்களில் என் ப்ளாக் http://jfivenews.blogspot.in - கிற்கு வருகை தந்தவர்கள்                                 - 196 முறை 
அமெரிக்காவிலிருந்து                             - 69 
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து             - 16 
சவூதி அரேபியாவிலிருந்து                  - 14 
ஆஸ்திரேலியாவிலிருந்து                   - 7     
ஓமன்       நாட்டிலிருந்து                         - 7 
குவைத்    நாட்டிலிருந்து                        - 4 
மலேசியா       நாட்டிலிருந்து                - 4 
சின்ட் மார்ட்டின் தீவிலிருந்து              - 3 
பின்லாந்து                                                    - 2


வருகை புரிந்த அணைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த Screenshot -டைப் பார்க்கும் போதே மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பீரிடுகிறது .அதே சமயம் அவர்களுக்குத்தேவையான நல்ல கருத்துக்களை  மட்டுமே கொடுக்கவேண்டும் என்ற எச்சரிக்கை மணியும்  மனதில் ஒலிக்கிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! நானும் நல்ல விஷயங்களை மட்டுமே தருவேன்!!.

சந்தோஷம் 3:

கடந்த 12 நாட்களாக நமது பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் நடைபெற்று வந்தது அனைவருக்கும் தெரியும். நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் முதலாவதாக வந்த மாற்கு குழுவில் என் கடைசி மகள் இடம் பெற்றிருந்தது சந்தோஷம். இரண்டாவதாக வந்த மத்தேயு குழுவில் என் மூத்த மகனும் இளைய மகளும் இடம் பெற்றிருந்தது இரட்டிப்பு சந்தோஷம்.அனைத்து VBS குழந்தைகளுக்கும் J5 news சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

அசோகம் என்று தலைப்பில் எழுதும் போதுதான் அசோகமரம் பற்றிய எண்ணம் மனதில் தோன்றியது. நம்மில் நிறைய பேர் நெட்டிலிங்க மரத்தைத் தான் அசோகமரம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம்( புகைப்படம் பார்க்கவும்).ஆனால் இரண்டுமே வேறு வேறு.அசோகமரத்தின் பூவானது, ஏறத்தாழ நாம் பார்க்கும் இட்லி பூ போலவே இருக்கும்.( புகைப்படம் பார்க்கவும்).அசோகமரத்தின் அறிவியல் பெயர் " Saraca asoca". நெட்டிலிங்க மரத்தின் அறிவியல் பெயர் "Polyalthia-longifolia".

நெட்டிலிங்க மரம் 

இராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்திருந்தான் என்று கம்ப இராமாயணத்தில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறதா? அசோக மரங்களுக்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் அந்த மரங்கள் இருக்கும் பகுதியில் யார் இருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாம்.


 அப்படியானால்  நாமும் நமது வீட்டில் வளர்க்கலாமே என்று சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்த விவசாய தோட்டக்கலை பண்ணையிலிருந்து ( செம்மொழி பூங்காவிற்கு எதிரே அமைந்துள்ளது)  இரு  செடிகள்  வாங்கிவந்தேன். அண்ணா மேம்பாலத்திற்கு  அருகே இவ்வளவு பெரிய தோட்டப்பண்ணை இருப்பது பலருக்கு தெரியுமோ என்னவோ? மிகப்பெரிய இந்த தோட்டப்பண்ணையில் walking செல்வது மனதிக்கு மிகவும் உற்சாகத்தைத் தரும். 


அசோகமரம்

ஏனென்றால் பலவித மலர்களும் அவற்றின் மணமும் மனதை  மயக்கவும் செய்யும் ஒருநிலை படுத்தவும் செய்யும்.பல சினிமா படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளன. வெற்றி விழ படத்தில் குஷ்பு பிரபுவுடன் ஆடும் "சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே...."   என்ற பாடலின் இரண்டாவது சரணம் இங்கு படமாக்கப்பட்டது தான். 


அசோகமரத்தின்  பூ


நான் வாங்கிவந்த   செடி, தற்போது ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. பார்க்க விரும்புபவர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்யலாம். 


பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.

குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team











No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram