Monday, May 11, 2015

பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் -5

பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் -5


இன்று விடியற்காலை முதலே மழை லேசாக தூறிக்கொண்டே இருக்கிறது.காலை  6:30 மணி திருப்பலிக்கு கிளம்பி வெளியே வரும்போதுதான் குடை எடுக்கவேண்டும் என்று உரைத்தது.குடையை தேடுவதற்கே 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. அதனால் மாண்புயர் கீதம் பாடும் போதுதான் ஆலயத்திற்குள் நுழைந்தேன் ( இன்று மாலை பங்குத்தந்தை அவர்கள் வெளியூர் செல்கிறார் போலும். அதனால் திவ்ய நற்கருணை ஆசீர் திருப்பலிக்கு முன்னதாக காலையிலேயே நிறைவேற்றப்பட்டது).இப்போது பிற்பகல் மணி 12:30.ஆனால் தூறல் நிற்பதற்கான  அறிகுறி தெரியவில்லை.வானிலிருந்து தேவதைகள் நம்மை ஆசிர்வதித்துக்கொண்டிருக்கிறார்களோ !!

இனி நிகழ்ச்சிக்கு வருவோம். நேற்று(10.5.2015) இரவு பத்திநாதபுரத்தில் நடந்த VBS வகுப்பு  மாணவ மாணவிகள் நடத்திக்காட்டிய   பல்சுவை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் புகைப்படங்களும் உங்களுக்காக இங்கே:

இரவு ஜெபம் முடிந்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. காணவரும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நல்ல விஷயம் தானே!.நம் குழந்தைகளை நாம் உற்சாகப்படுத்தாவிட்டால் வேறு யார் உற்சாகப்படுத்துவார்கள்?




போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக நம் பங்குத்தந்தை முந்தை ய நாள்
 ( குழு நாடகம்) நிகழ்ச்சிக்கான  மதிப்பெண்களை கூட்டத்தினருக்கு வாசித்து காட்டினார். மத்தேயு குழுவினர் 10,000 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் இருப்பதாக கூறி அந்த குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அனால் அடுத்த நிமிடமே அனைத்து குழுக்களுக்குமே 5000 மதிப்பெண்கள் மைனஸ் என்று  அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள்.. அதற்கு காரணம் அனைத்து குழந்தைகளுமே நாடகத்தில் புறமுதுகு காட்டி நடித்திருந்ததுதான் ( புகைப்படங்களை பார்த்தாலே உங்களுக்குப்புரியும். புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்: http://jfivenews.blogspot.in/2015/05/vbs-4.html). மேலும் இதுபற்றி பங்குத்தந்தை அவர்கள்,  சிறுவயதிலேயே இந்த தவறுகளை திருத்தினால் பெரியவர்களாகும் போது நன்றாக பிரகாசிக்கலாம் என்று  கூறினார்கள். அனைவருமே  அந்த கருத்தை  ஆமோதித்தனர். 

நம் குழந்தைகளின் திறமைகளை என்னவென்று சொல்ல? 

ஜிம்னாஸ்டிக்ஸ். யோகா, பாடல், நடனம் என்று தங்களின் திறமைகளை அனைத்து குழந்தைகளுமே சிறப்பாக வெளிப்படுத்தினர்.  புகைப்படங்களை பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று உங்களுக்கே புரியும்.

இதற்கு களம் அமைத்து தந்த  நம் பங்குத்தந்தை Rev. Fr. ராஜன் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யுட். அதுமட்டுமல்லாமல் நான்கு குழுக்களையும் பொறுப்பேற்று நடத்திவரும்( ஒவ்வொரு குழுவிற்கும் 3 பேர்)  மாத சபை இளம் பெண்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.தங்கள் வீட்டு வேலைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, அத்தனை குழந்தைகளுக்கும்   பொறுமையுடன் நடனம், நாடகம் இன்ன பிற நிகழ்சிகளையும் ஒரேநாளில் பயிற்றுவித்து மேடையில் அவர்களை செய்துகாட்டவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் குழு தலைவிகளிடம்  பேசும் போதுதான் அவர்களின்  டென்ஷன் நமக்குப் புரிகிறது. இவர்களுக்கும் ஒரு ஒரு ராயல் சல்யுட். 



   பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.

குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in 
எங்கள்  facebook page  : J5 news

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team


































No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram