FM ரேடியோ எப்படி ஒலிபரப்பப்படுகிறது?
FM ரேடியோ எப்படி ஒலிபரப்பப்படுகிறது என்று பார்ப்போமா?
அதற்குமுன் வெள்ளோட்டமாய் ஒரு முன்னோட்டம் உங்களுக்காக.
அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்த பண்பலை வரிசைகள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தனியாருக்கு ஏலம் விடப் பட்டன.விளைவு? டீக்கடை, மினி பேருந்து என்று அனைத்து இடங்களிலும் தனியார் பண்பலை மயம்.
தனியார் FM ரேடியோவிற்கு அனுமதி அளித்தவுடன் FM வரலாற்றில் ஓர் புத்துணர்ச்சி பரவியது.புத்தம் புதிய பாடல்களின் தொடர் அணி வகுப்பால் மக்களிடையே தனியார் FM ரேடியோ நிகழ்ச்சிகளின் மேல் ஒரு திடீர் ஈடுபாடு.அதனால் அனைத்து மினி பஸ்களிலும், டீக்கடைகளிலும் FM ரேடியோ தான். மினி பஸ்களில் தனியார் FM ரேடியோ நிகழ்ச்சிகளை speaker வைத்து ஒலிபரப்பி மக்களை பேருந்துக்கு இழுத்தனர்.ஒரு முறை திருநெல்வேலிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். எங்களுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன் செல்லவேண்டி இருந்தது. மினி பஸ் கண்டக்டர் மக்களை பேருந்துக்குள் வரவைக்க கையாண்ட உக்தி அவரின் பேச்சுத்திறமைக்கு ஒரு சான்று.குறிப்பிட்ட FM ரேடியோவின் நிகழ்ச்சியையும் அதன் தொகுப்பாளரின் பெயரையும் குறிப்பிட்டு, 11 மணிக்கு ஒலிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியின் வர்ணனைகளையும் பாடல்களையும் கேட்க வேண்டுமென்றால் எங்கள் பஸ்சில் உடனடியாக ஏறுங்கள் என்று கூறி மக்களை ஏற்றிக்கொண்டிருந்தார்.அந்த அளவிற்கு தனியார் FM ரேடியோக்களும் அதன் தொகுப்பாளர்களும் மக்களிடையே பிரபலம் அடைந்திருந்தனர்.இன்று அந்தளவுக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
மழை காளான் போல திடீரென்று முளைத்த தனியார் FM ரேடியோக்கள், சில வருடங்களிலேயே தொலைக்காட்சிப் பெட்டியால் பல இடங்களில் காணாமல் போனது. தொலைக்காட்சிப் பெட்டியின் விலை வீழ்ச்சியாலும் விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டியாலும் டீக்கடை மற்றும் பேருந்துகளில் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் பார்க்க முடிந்தது.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் டீக்கடையில், டீ குடித்துக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டியில் குஷ்பு நடித்த பிரம்மா படத்தில் இடம் பெற்ற " இவள் ஒரு இளங்குருவி ...எழுந்து ஆடும் மலர்கொடி ........" என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.பாடலின் ஒரு காட்சி டிராலி ஷாட்டாக முன்னோக்கி வருவதுபோல் படமாக்கி இ ருந்தார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நபரும் கையில் டீ கிளாஸுடன் பக்கவாட்டில் நகர்ந்தார்( பாடலில் ரொம்ப லயித்து விட்டார் போலும் ).அவ்வளவு தான்! டீ கிளாஸ் உடைந்ததோடல்லாமல் கையிலும் சிறு காயம்.டீக்கடையில் FM ரேடியோ வைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?
இன்னமும் சிறு தொழில் செய்வோருக்கு, குறிப்பாக பீடி சுற்றுவோர், டைலர்கள், கொத்தனார் தொழில் செய்வோர் என்று பலருக்கும் FM ரேடியோ தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. வேலையிலும் கவனம் சிதறாது. அதே சமயம் மனதிற்கும் புத்துணர்ச்சி! ஏனென்றால் சில பாடல்கள் நம்மை மலரும் நினைவுக்கு கொண்டு சென்று நமக்குள் ஒரு உற்சாகத்தை பீறிடச் செய்யுமே, இதை யாரும் மறுக்க முடியுமா?
இந்த FM ரேடியோ எவ்வளவு தூரம் மக்களை சென்றடையும்?
- தொடரும்
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- தொடரும்
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram