மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? பகுதி -2
முதல் பகுதியை காண இங்கே சொடுக்கவும்.
http://jfivenews.blogspot.in/2015/05/blog-post_8.html
இப்போது அனல் மின்சாரம் எவ்வாறு தயாராகிறது என்று பார்ப்போம்.
எப்படி நீர் மின்சாரம் என்பது நீரிலிருந்து எடுக்கப்படாமல் நீரின் உதவியால் எடுக்கப்படுகிறதோ அதைப்போல அனல் மின்சாரமும் தீயிலிருந்து எடுக்கப்படாமல் தீயின் உதவியால் தான் எடுக்கப்படுகிறது.
கீழே இருக்கும் படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
அதற்கு முன்னதாக ஒரு சிறிய கேள்வி? நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? பதிலை பின்னோட்டம்(comment ) செய்யவும். இந்த கேள்விக்கும் அனல் மின்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்?முழுவதாக படிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
நீராவிக்கு ஒரு பொருளை தள்ளிக்கொண்டு போகும் சக்தி உண்டு என்பதை பாத்திரத்தில் சோறு சமைக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சோறு கொதிக்கும் போது பாத்திரத்தின் மூடியை கீழே தள்ளிவிட்டு விடும்.இந்த அடிப்படையில் தான் அனல் மின்சாரம் தயாராகிறது.
அதாவது தண்ணீரை சூடாக்கி ( சூடாக்க நிலக்கரியை பயன்படுத்துகிறார்கள்) தன் மூலம் உருவாகும் நீராவியை விசிறி அல்லது சுற்றும் உருளையின் மீது பாய்ச்சுகிறார்கள். இந்த உருளை காந்தத்தின் நடுவே சுற்றும் செம்பு காயிலில் பொருத்தப்பட்டிருக்கும்.படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். செம்பு காயிலில் இருந்து மின்சார வயர்கள் transformar -ருடன் இணைத்து வேறு இடங்களுக்கு மின்சாரத்தை கொண்டு செல்கிறார்கள்.
இந்த தயாரிக்கும் முறை, நீர்மின்சாரத்தை விட சிறிது செலவு அதிகம். ஏனென்றால் இங்கு நிலக்கரியின் பயன்பாடு தேவையாயிருக்கிறது.நீர் மின்சார தயாரிப்பில் அணைக்கட்டு அருகே இந்த பிளான்ட் இருப்பதால் நீரை திறந்து விட்டாலே போதும்.
இனி அணு மின்சாரம் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம்.
அதற்கு முன்னதாக ஒரு சிறிய விளக்கம்:
அணு என்பது ஒரு சிறிய துகள். இந்த சிறிய துகளின் நடுப்பகுதியை நியுக்ளியஸ் என்று சொல்வார்கள்.இதை மறந்துவிடாதீர்கள்.
அணு மின்சாரம் தயாரிக்க யுரேனியக்கட்டிகள் அல்லது தோரியக்கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த யுரேனியம் அல்லது தோரிய நியுக்ளியஸின்
( இது என்னவென்று மேலே குறிப்பிட்டுள்ளேன்) இரண்டு சிறப்பம்சங்கள் என்னவென்றால்
1. உடனடியாக அடுத்த அணு துகளைத் தாக்கி அந்த அணுவின் நியுக்ளியஸை தனியாக பிரிக்கும்.
2. அதிக வெப்பத்தை உண்டாக்கும்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் யுரேனியக்கட்டிகள் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். அந்த பாத்திரத்தில் ஒரே ஒரு யுரேனிய நியுக்ளியஸை போடுங்கள். என்னவாகும்? அடுத்த நொடியே அந்த நியுக்ளியஸ், முதல் அணுவைத் ( அதாவது மிகச்சிறிய துகள்) தாக்கி அதன் நியுக்ளியஸை பிரித்து வெப்பத்தையும் உண்டாக்கும்.
இப்போது பாத்திரத்தில் இரண்டு நியுக்ளியஸுகளும் சிறிது வெப்பமும் இருக்கின்றன. இந்த இரண்டும் அடுத்த இரண்டு அணு க்களைத்தாக்கும்.அப்போது வெப்பமும் உண்டாகும் நியுக்ளியஸுகளும் புதிது புதிதாக அணுவிலிருந்து வெளிவரும்.இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த வெப்பத்தை வைத்து, தண்ணீரை சூடாக்கி அதன் மூலம் உருவாகும் நீராவியை விசிறி அல்லது சுற்றும் உருளையின் மீது பாய்ச்சுகிறார்கள். இந்த உருளை காந்தத்தின் நடுவே சுற்றும் செம்பு காயிலில் பொருத்தப்பட்டிருக்கும்.படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
இதில் என்ன பிரச்சினை என்றால்:
1. யுரேனியம் விலைக்கு வாங்கவேண்டும்.
2. அந்த பாத்திரத்தில் இப்போது என்ன இருக்கும்? வெப்பம், நியுக்ளியஸ் மற்றும் துகளின் கழிவுகள்.அதாவது அணு துகளானது நியுக்ளியசாகவும் மீதி துகளின் கழிவுகளா கவும் பிரிந்து விட்டது.
இந்த துகளின் கழிவுகளை வெளியே உடனடியாக கொட்டிவிட முடியாது. 20 வருடங்கள் வரை பாதுகாத்து அதன் பிறகுதான் கொட்டவேண்டும். இல்லாவிடில் நமக்கு பலவித நோய்கள் வர வாய்ப்புண்டு.
இனி காற்றாலையிலிருந்து மின்சாரம் எப்படி தயாராகிறது என்பதை நீங்கள் எனக்கு பின்னோட்டம் (comment ) செய்யுங்களேன்.இந்த இரண்டு பகுதிகளையும் படித்தபின் உங்களுக்கு கண்டிப்பாக காற்றாலை மின்சாரம் தயாராவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்
பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.
குறிப்பு:
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram