Friday, May 8, 2015

மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? பகுதி -1

மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? பகுதி -1


இப்பதிவில் மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை எளிமையாக  விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஏன் மின்சாரம் தயாரிக்க வேண்டும்? ஒரு ஜெனரேட்டர்  வாங்கி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றினால் மின்சாரம் கிடைத்துவிடப்போகிறது. பின் எதற்காக மின்சாரம் தயாரிக்க வேண்டும்?

இந்த கேள்விக்கு  இரண்டு பதில்களை நாம் அலச வேண்டும்.
 1. ஜெனரேட்டர் விலை.
2.மண்ணெண்ணெய் எவ்வளவு காலம் இந்த பூமியில் கிடைக்கும். அதற்குபின் நாம் எதை வைத்து  ஜெனரேட்டரை  ஓட்டுவோம்!.


அப்படியானால் ஜெனரேட்டர் மற்றும் மண்ணெண்ணெயை விட செலவு கம்மியான மின்சாரம் தயாரிப்பு முறையை கண்டு பிடித்தாக வேண்டும். அதைத்தான் மைக்கேல்  பாரடே கண்டு பிடித்தார்.

அதென்ன கண்டு பிடிப்பு! இதோ உங்களுக்காக  எளிமையான விளக்கத்துடன் தர முயற்சித்திருக்கிறேன்.


சிறு குழந்தையாக இருக்கும் போது அனைவரும் காந்தம் வைத்து விளையாடி இருப்பீர்கள்.காந்தத்தின் எதிரெதிர் துருவங்களை அருகில் கொண்டு செல்லும் போது அவை உடனடியாக ஒட்டிக்கொள்ளும்.இது அனைவரும் அறிந்ததே.சிறு காந்தமாக இருந்தால் ஈர்ப்பு  சக்தியின் இடைவெளி குறைவாக இருக்கும். பெரிய காந்தமாக இருந்தால் ஈர்ப்பு  சக்தியின் இடைவெளி அதிகமாக  இருக்கும்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.இரு பெரிய  காந்தநகளை  காற்று புகாத  குழாயின் இரு முனையிலும் அசையாதவாறு ஆணி வைத்து பொருத்திக் கொள்ளவும்.இல்லாவிடில்  இரண்டும்  ஈர்ப்பு விசையின் காரணமாக ஒட்டிக்கொள்ளும்.இப்போது இரு காந்தங்களின் நடுவே ஓர் செம்பு கம்பியை நீள் சதுரமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ வைத்து சுற்றவேண்டும்( படம் பார்க்க).




அதாவது காந்த சக்தியை செம்பு கம்பியால் வெட்டும் போது மின்சாரம் கிடைக்கிறது.இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் காந்த சக்தி மின்  சக்தியாக மாற்றப்படுகிறது.இதை பெரிய அளவில் செய்யும் போது செம்பு கம்பிக்கு பதிலாக செம்பு காயில் பயன்படுத்தப்படுகிறது.

செம்பு கம்பி/காயிலின் வெளிப்பக்க முனையில் பேரிங்க் வைத்து  வீட்டு வயரை இணைத்து வீட்டிற்கு மின்சாரம் பெறலாம். அல்லது transformar இணைத்து மின்சாரத்தை வேறு இடத்திற்கு கொண்டுசெல்லலாம்.

இதுதான் மின்சாரம் தயாரிக்கும் முறை. இதற்க்கான முதலீடு இரண்டு காந்தங்களும் செம்பு காயிலும் மட்டுமே. அதுவும் ஒருமுறை முதலீடுதான்.இப்போது சொல்லுங்கள் இது செலவு அதிகம் இல்லாத முறை தானே.

நீர் மின்சாரம்:

அப்படியானால் நீர் மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? ஏன் அணைக்கட்டுப்பகுதிகளில் மட்டும் நீர் மின்சாரம் தயாரிக்கிறார்கள்?

நான் ஏற்கனவே சொன்னது போல  காற்று புகாத  குழாய்க்கு வெளியே இருந்து செம்பு காயிலை ஒருவர் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் மின்சாரம் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.அவருக்கு கை வலித்தால் அடுத்தவர் அதற்கு அடுத்தவர் என்று  சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும். மனிதர் கையால் சுற்றுவதற்கு பதிலாக வேறு மாற்று என்ன என்று யோசித்ததன் விளைவே நீர் மின்சாரத்தின் கண்டுபிடிப்பு.

இதில் மின்சாரம் தயாரிக்கும் அ டிப்படை முறை  நான் மேலே கூறியதுதான்.

செம்பு காயிலை சுற்றுவதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள பேரிங்கில் ராட்ஷச விசிறிகளை ( நம் வீட்டில் உள்ள மின் விசிறிகளின் இறக்கைகளைப்போன்று ) பொருத்தி இருப்பார்கள். இப்போது அணைக்கட்டிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவார்கள்.அவை இந்த ராட்ஷச விசிறிகலின் மேல் பட்டு அதை சுற்றச்செய்யும்.மின்சாரமும் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும்.

எனவே நீர் மின்சாரம் என்பது நீரிலிருந்து எடுக்கப்படுவது அல்ல நீரின் உதவியால் எடுக்கப்படுவது.இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியானால் அனல் மின்சாரமும் அணு  மின்சாரமும் எப்படி தயாரிக்கப்படுகிறது? சிறிது யோசித்துதான் பாருங்களேன். முடியாதவர்கள் என் அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்.

குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in 

எங்கள்  facebook page  : J5 news

1. சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் (comment ) செய்யவும். பதிலளிக்க  காத்திருக்கிறோம்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம். 
- J5 news  Team 

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram