பத்திநாதபுரம் வீரர்கள் சாதனை
வீரம் என்ற வுடனே நினைவுக்கு வருவது சிங்கம் தான். 1960- களில் வந்த தமிழ் திரைப்படங்களை பார்த்தால் கதாநாயகன் சிங்கத்தோடு மோதும் சண்டை காட்சி ஒன்று கண்டிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக M G R படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கதாநாயகியையோ, தங்கையையோ அல்லது தாயையோ சிங்கத்திடமிருந்து காப்பர்றினால் தான் அன்றைய ரசிகர்களுக்கு படம் பார்த்த திருப்பதி!. சிவாஜி கூட ஒரு சில படங்களை சிங்கத்திடம் சண்டையிட்ட ஞாபகம் இருக்கிறது. படத்தின் பெயர் தான் ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னோட்டம் இடுங்களேன்.
மன்னர் ஆட்சி காலத்தில் வீரம் தான் பிரதானம். காலட் படை, தேர் படை, குதிரை படை, யானை படை என்று வீரர்கள் பிரிக்கப்பட்டு வாள் சண்டையிலும் ஈட்டி எறிதலி லும் சிறந்து விளங்கினர். இன்றும் அந்த வாள்களையும் ஈட்டிகளையும் நாம் பல அரண்மனைகளில் காணலாம். நம் ஊருக்கு அருகில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு குழந்தைகளுடன் ஒரு விசிட் அடித்தால் குழந்தைகளுக்கும் வரலாறு தெரிய வாய்ப்பிருக்கும்.
வீரத்திற்கு இலக்கணமாக விளங்கிய இள வட்ட கல்லை மறக்க முடியுமா?
முன் பக்கமாக கீழே குனிந்து அந்த உருண்டை கல்லை நெஞ்சுக்கு மேலே தூக்கி, நிமிர்ந்து நின்று தோளுக்கு பின் பக்கமாக கீழே போடவேண்டும். விரும்பிய பெண்ணை கட்டவேண்டுமாயின் ஒரு சில மாமனார்கள் இந்த போட்டி வைத்து தன் மருமகனை தேர்ந்தெடுத்தனர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு கடந்த வருடம் வரை வழக்கத்தில் இருந்ததே? திருமணம் என்பதிலிருந்து தங்கச்சங்கிலி, பணமுடிப்பு என்று வேறு கட்டத்திற்கு ஜல்லிக்கட்டு நகர்ந்து விட்டது. பரிசு என்னவாக இருந்தாலும் காளையை அடக்கவரும் இளஞசிங்கங்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
ஜெயந்த் ஜூலியான்ஸ் வெற்றி கோப்பையுடன்
ஜாய் ஜூலியான்ஸ் வெற்றி கோப்பையுடன்
"Nagercoil Young Cricket Club" கடந்த 2 வாரங்களாக நாகர்கோயிலில் உள்ள scott christian கல்லூரியில் நடத்திய கிரிக்கெட் போட்டியில் "Star Duckers Club" முதலிடம் பிடித்து பரிசாக "Marble World Rolling Cub" ( புகைப்படம் பார்க்கவும்)-பை வென்றது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று தமிழ்நாடு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் திருவனந்தபுரத்திலிருந்தும் மொத்தமாக 20 டீம்கள் போட்டியில் பங்கேற்றன.நுழைவு கட்டணமாக Rs 1000 வசூலிக்கப்பட்டது.
இறுதிப் போட்டி, நேற்று funny cricket club -க்கும் பத்திநாதபுரத்தின் "Star Duckers Club"க்கும் நடந்தது. முதலில் களமிறங்கிய funny cricket club 20 ஓவருக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. 77 ரன்களை வெற்றி இலக்காக்கி கொண்ட பத்திநாதபுரத்தின் "Star Duckers Club" 12 ஓவரிலேயே வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் J5 news சார்பாக வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற Star Duckers Club
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram