- பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் -4
8.5.2015 அன்று VBS கலைநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாத நிலையில் நேற்று
மீண்டும் நடைபெற்றது. எப்போதும் போல் காலியாக இல்லாமல் ஆண்களின்
பகுதி கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.ஏன் என்ற காரணம் கலைநிகழ்ச்சி காண
வந்திருந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.மாற்றம் நமக்கு நன்மை பயக்குமெனில்
அதை ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை என்ற கட்சியை சேர்ந்தவன்
தான் நானும்.
படங்கள் load ஆக அதிக நேரம் பிடிக்கிறது. அதனால் தான் நடன
வீடியோக்களையும் இன்னும் பதிவேற்றவில்லை.வேறு ஏதேனும்
வழி இருந்தால் சொல்லுங்களேன்.
என் முதல் பதிவில் கூறியிருந்ததுபோல் நான்கு குழுக்களும் குழு
நாடகத்தை நடித்துக் காட்டினர். ஒவ்வொரு குழுவிற்கும் 20 நிமிடங்கள்
வழங்கப்பட்டன.சிறு குழந்தைகள் முதல் 11 ம் வகுப்பு படிக்கும் பெரிய
குழந்தைகள் வரை பங்கு கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்துக்காட்டினர்.
அனைவருக்குமே சுற்றி போடத்தான் வேண்டும்.பெற்றவர்கள் அந்த
கூட்டத்தில் இருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.இத்தகைய நிகழ்ச்சிகள்
அடிக்கடி நடத்தப்படவேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கும்
தங்களின் திறமை எது என்று சிறு வயதிலேயே புரிந்துகொள்ள வசதியாக
இருக்கும்.
முதலாவதாக லூக்கா குழு "முதியோரை மதிப்போம் முதியோர் இல்லங்களில்
சேர்ப்பதை தடுப்போம் " என்ற பொருளில் தங்கள் நாடகத்தை நடித்துக்
காட்டினர். அடுத்ததாக யோவான் குழு "பெண் சிசு கொலை" தவறு என்று
தங்கள் நடிப்பை வெளிப்படுத்தினர்.மத்தேயு குழு அனைவரும் வெள்ளை
உடைகளில் வந்து ( மாணவ மாணவிகளாக நடித்தனர்) பார்ப்போரின்
உள்ளத்தில் வெண்மை புரட்சியை ஞாபகப்படுத்தினார். இவர்கள் நாடகத்தின்
சாராம்சம்: குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என்றால் அவர்களின்
தனிப்பட்ட திறமை எது என்று கண்டுபிடித்து அதை வளர்க்க ஆசிரியரும் உடன்
இருப்போரும் உதவ வேண்டும் என்பதே. கடைசியாக மாற்கு குழு " சிரித்து
வாழவேண்டும்" பிறர் சிரிக்க வாழக்கூடாது என்பதை வலியுறித்தினார்.
இன்று பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருக்கிறது. நாளை அதை
பதிவிடுகிறேன்.
பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.
குறிப்பு:
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
எங்கள் facebook page : J5 news
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
nala eruku
ReplyDeletekepit up
பாஸ்கர் அண்ணனுக்கு நன்றிகள். இந்த J5 news பகுதிக்கு தினமும் வாருங்கள். தினமும் .பதிவிட்டு வருகிறேன். மேலும் என் www.jfivenews.blogspot.com - க்கும் ,மறக்காமல் புகைப்படங்கள் பார்க்க வரவும்.
ReplyDelete