பத்திநாதபுரத்தில் நேற்று நல்ல மழை
நேற்று காலை முதல் பிற்பகல் வரையிலும் வெயில் வழக்கம் போல கொளுத்தியது.2:30 மணியிலிருந்து வானில் சிறிது மாற்றம். A R ரஹ்மானுக்கு போட்டியாக வானமும் தன் பங்குக்கு பலவிதமான ரிதத்தோடு இடியோசைகளை மீட்டிக்கொண்டிருந்தது. ஏறத்தாழ 3 மணி அளவில் மேகம் தன் கருங்கூந்தலால் சூரியனை மறைக்க முயற்சித்தது. சூரியனும் பதிலுக்கு மேகத்தை அலைக்கழித்தது. அந்த அலைச்சலில் மேகம் தன் facebook முகவரியை மறந்தது( என் facebook முகவரி: J5 news. மறந்திடாதீங்க!). முகவரியை தொலைத்த மேகம், ஏறகுறைய 10 நிமிடங்கள், அதாவது 3: 10 மணி வரை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.திடீரென்று அழ ஆரம்பித்தது.
பூமி குளிர்ந்து. பதிவை மக்கள் மகிழ்ந்தார்கள்.ஏறகுறைய முக்கால் மணி நேரம் பெய்த மழையால் மனம் நிறைந்தது. நம் ஊர் தெருக்களும் தான்! ஆனால் தண்ணீரில்!!
மீண்டும் facebook முகவரியை மேகம் கண்டுபிடித்து விட்டதோ என்னவோ தன் கருங்கூந்தலை டை அடிக்காத வயதானவரின் தலை போல மாற்றியது.மேகத்தை அலைக்கழித்த சந்தோசத்தில் சூரியன் மீண்டும் எட்டிப்பார்த்தது.
மேகம் அடிக்கடி தன் முகவரியை தொலைக்க அனைவரும் வேண்டிக்கொள்வோம்.
வீ ட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் இந்த பதிவை உடனடியாக போடமுடியவில்லை.மாலை 6 மணிக்குத்தான் மின்சாரம் வந்தது. கூடவே சிறுது பயமும் தான்.ஏனென்றால் மழை பெய்தால் இரவு வேளையில் கட்டெறும்பும் ஈசலும் கூடவே வருமே!.மின்விளக்கை போட்ட சிறிது நேரத்திலே அவை பல்பை சூழ்ந்து கொண்டும், நம் மீதும் விழுந்தும் நம்மை இம்சை படுத்தும்.வீட்டின் வெளி பல்பை மட்டும் எரிய விட்டு உள்ளே உள்ளவற்றை அணைத்தால் அவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
மே மாதம் என்பதால் அதற்கும் விடுமுறையோ என்னவோ அவற்றை காணோம்.ஏனென்று காரணம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் ( comment ) இடலாமே!
குறிப்பு:
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டும்.
எங்கள் facebook page : J5 news
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram