26.05.2015 ஒரு தகவல்
இன்றைய தகவல் இதோ:
அவ்வையார்:
"அடக்கம் உடையாரை அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"
திருவள்ளுவர்:
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து"
குத்தொக்க சீர்த்த இடத்து"
அவ்வையாரும் திருவள்ளுவரும் ஏறத்தாழ ஒரே கருத்தைத்தான் சொல்லியிருக்கின்றனர்.
இருவருமே சொல்வது என்னவென்றால், "கொக்கு போல் பொறுமையுடன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, காலம் சரியாக வாய்க்கும் போது கொக்கு குறிபார்த்து மீனை கொத்துவது போல நாமும் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்".
அவ்வையார் மேலதிகமாக இன்னொரு கருத்தையும் முதலிரண்டு வரிகளில் கூறியுள்ளார். அதாவது, "பொறுமையுடையவர்களை முட்டாள்கள் என்று எண்ணக்கூடாது".
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram