Wednesday, May 27, 2015

காய்ச்சல் காரணமாக சில நாட்கள் இந்தப்பக்கம் எட்டிப் பார்க்கமுடியாது

காய்ச்சல் காரணமாக சில நாட்கள் இந்தப்பக்கம்  எட்டிப்  பார்க்கமுடியாது என்று நினைக்கிறேன். காய்ச்சல் பறந்தோடியதும்  புத்துணர்ச்சியுடன்  மீண்டும் வருவேன். அதுவரை எப்போதும் போல்  தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
- J5 news Team



எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news

Tuesday, May 26, 2015

பத்திநாதபுரம் வீரர்கள் சாதனை

பத்திநாதபுரம் வீரர்கள் சாதனை

வீரம் என்ற வுடனே நினைவுக்கு வருவது சிங்கம் தான். 1960- களில் வந்த தமிழ் திரைப்படங்களை பார்த்தால் கதாநாயகன் சிங்கத்தோடு மோதும்  சண்டை காட்சி ஒன்று  கண்டிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக M G R படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கதாநாயகியையோ, தங்கையையோ அல்லது தாயையோ சிங்கத்திடமிருந்து காப்பர்றினால் தான் அன்றைய ரசிகர்களுக்கு படம் பார்த்த திருப்பதி!. சிவாஜி கூட ஒரு சில படங்களை சிங்கத்திடம் சண்டையிட்ட ஞாபகம் இருக்கிறது. படத்தின் பெயர் தான் ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னோட்டம் இடுங்களேன்.

மன்னர் ஆட்சி காலத்தில் வீரம் தான் பிரதானம். காலட் படை, தேர் படை, குதிரை படை, யானை படை என்று வீரர்கள் பிரிக்கப்பட்டு வாள் சண்டையிலும் ஈட்டி எறிதலி லும் சிறந்து விளங்கினர். இன்றும் அந்த வாள்களையும் ஈட்டிகளையும் நாம் பல அரண்மனைகளில் காணலாம். நம் ஊருக்கு அருகில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு குழந்தைகளுடன் ஒரு விசிட் அடித்தால் குழந்தைகளுக்கும் வரலாறு தெரிய வாய்ப்பிருக்கும்.

வீரத்திற்கு இலக்கணமாக விளங்கிய இள வட்ட கல்லை மறக்க முடியுமா?
முன் பக்கமாக கீழே குனிந்து அந்த உருண்டை கல்லை நெஞ்சுக்கு மேலே தூக்கி, நிமிர்ந்து நின்று தோளுக்கு பின் பக்கமாக கீழே போடவேண்டும். விரும்பிய பெண்ணை கட்டவேண்டுமாயின் ஒரு சில மாமனார்கள் இந்த போட்டி வைத்து தன் மருமகனை தேர்ந்தெடுத்தனர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு கடந்த வருடம் வரை  வழக்கத்தில் இருந்ததே? திருமணம் என்பதிலிருந்து  தங்கச்சங்கிலி, பணமுடிப்பு என்று வேறு கட்டத்திற்கு ஜல்லிக்கட்டு நகர்ந்து விட்டது. பரிசு என்னவாக இருந்தாலும் காளையை அடக்கவரும் இளஞசிங்கங்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.



ஜெயந்த் ஜூலியான்ஸ் வெற்றி கோப்பையுடன் 

இன்றைய இளைய தலைமுறையை பொருத்தவரை வீரமும் விவேகமும் ஒருங்கே அமைய பெற்ற மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். படித்துக்கொண்டே விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள். கிரிக்கெட்டில் அனைவருமே புலிகள் தான். இனி பிறக்கும் குழந்தை கூட கிரிக்கெட் மட்டையோடுதான் பிறக்குமோ என்னவோ!


ஜாய்  ஜூலியான்ஸ் வெற்றி கோப்பையுடன்


பத்தினாதபுரத்து இளைஞர்கள் மட்டும் சோடை போவார்களா என்ன? பத்திநாத புரத்தை சேர்ந்த திரு.K A S. லாரன்ஸ் அவர்களின் தலைமையில், வள்ளியூர் வட்டார இளைஞர்கள் இணைந்து  "Star Duckers Club" என்ற ஒரு கிரிக்கெட் டீம் செயல்பட்டு வருகிறது.பத்திநாத புரத்தை சேர்ந்த ஜுனி ஜூலியான்ஸ் , ஜாய் ஜூலியான்ஸ், ஜெயந்த் ஜூலியான்ஸ் மற்றும் மத்யூ ஜாய் ஆகிய நால்வரும் இந்த கிரிக்கெட் டீமில் உறுப்பினர்களாக உள்ளனர்.

"Nagercoil Young Cricket Club" கடந்த 2 வாரங்களாக நாகர்கோயிலில் உள்ள scott christian கல்லூரியில் நடத்திய கிரிக்கெட் போட்டியில் "Star Duckers Club" முதலிடம் பிடித்து  பரிசாக "Marble World Rolling Cub" ( புகைப்படம் பார்க்கவும்)-பை வென்றது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று தமிழ்நாடு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் திருவனந்தபுரத்திலிருந்தும்  மொத்தமாக 20  டீம்கள் போட்டியில் பங்கேற்றன.நுழைவு கட்டணமாக Rs 1000  வசூலிக்கப்பட்டது.

இறுதிப்  போட்டி, நேற்று funny cricket club -க்கும் பத்திநாதபுரத்தின் "Star Duckers Club"க்கும் நடந்தது. முதலில் களமிறங்கிய funny cricket club 20 ஓவருக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. 77 ரன்களை வெற்றி இலக்காக்கி கொண்ட பத்திநாதபுரத்தின் "Star Duckers Club" 12 ஓவரிலேயே வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் J5 news  சார்பாக வாழ்த்துக்கள்.






வெற்றி பெற்ற Star Duckers Club


குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
















ஞாயிறு ( 31.5.2015) திருப்பலி முன்னுரை மற்றும் வாசகங்களின் முன்னுரைகள்

ஞாயிறு ( 31.5.2015) திருப்பலி   மற்றும் வாசகங்களின் முன்னுரைகள்


 திருப்பலி முன்னுரை:
மூவொரு இறைவன் பெருவிழாவை காண வந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.  அன்பே கடவுள், அன்பில் இறைவனை காணலாம் என்பதே மூவொரு இறைவன் பெருவிழாவின் முக்கிய நோக்கம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்றார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர்.ஆனால் பூமியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, இனி வாழப்போகிற அனைத்து உயிர்களின் மீதும்  இறைவன் அன்பாக இருந்து அந்த அன்பை தன்  மகன் மூலம் வெளிப்படுத்தி, தூய ஆவியின் வழியாக நம் ஒவ்வொருவர் மீதும் நிலைபெறச் செய்கிறார்.


இறைவனை நாம் மறைபொருளாக, மறையுன்மையாக பார்க்கவேண்டுமே அன்றி, நம் ஆறாம் அறிவால் பகுத்தறிய முற்படக்கூடாது. அன்பின் அடையாளமாகவும் அனுபவமாகவும் மட்டுமே மூவொரு இறைவனை நாம் துய்த்துணர வேண்டும். அந்த மூவொரு இறைவனின் அன்பில் திளைத்து வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கு கொள்ளவோம்.


முதல் வாசக முன்னுரை:
மோசே மக்களிடம் கடவுளின் அருஞ்ச்செயல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி அவர்கள் மேல் இறைவன் கொண்ட நல்லெண்ணத்தை விளக்குகிறார். மேலும் கடவுளின் மேல் நம்பிக்கை வையுங்கள், கடவுள் மட்டுமே நம்மை பாதுகாப்பவர், அவரால் மட்டுமே எல்லாம் முடியும் என்று எடுத்து கூறுகிறார். எனவே கடவுளைத்தவிர வேறு எவர்பாலும் பற்று கொள்ளவேண்டாம் என்று  மோசே கூறும் முதல் வாசகத்திற்கு செவி மடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை:

எப்படி ஒரு குழந்தை இந்த பூமியில் பிறந்ததும் தன் தந்தையின் சொத்துக்களின் மேல் உரிமை பாரட்ட முடியுமோ, அதே போல நாம் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் மூலம் இறைவனின் துன்பத்திலும் மாட்சியிலும் பங்கெடுக்கக் கூடிய கிறிஸ்துவின் பங்காளிகளாகிறோம்.நாம் கடவுளின் குழந்தைகள் என்பதற்கு மேலதிக சான்றாக தூய ஆவியும் எப்போதும் நம்ம்க்டையே இருந்து நம்மை கடவுளின் மக்களாக என்றன்றைக்கும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.
புனித பவுல் உரோமை நகர மக்களுக்கு எழுதிய மடலில் கடவுளின் மக்கள் யார் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இரண்டாம் வாசகத்தில் அதற்கான பதிலை கூறியுள்ளார். அது என்ன பதில் என்பதை நாம் அனைவரும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்பதன் மூலம் தெரிந்து கொள்வோம்.



குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team






Monday, May 25, 2015

26.05.2015 இராசி பலன்

26.05.2015  இராசி பலன் 

இனி தினமும் காலையில்  12 இராசிகளுக்குரிய  பலன்களை தரலாம் என்றிருக்கிறேன்.

26.05.2015  இராசி பலன்  உங்களுக்காக:



குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

26.05.2015 தினம் ஒரு புகைப்படம்

26.05.2015  தினம் ஒரு புகைப்படம்

இன்றைய புகைப்படம்



மஞ்சள் 
குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team



26.05.2015 ஒரு தகவல்

26.05.2015 ஒரு  தகவல் 

இன்றைய தகவல் இதோ:

அவ்வையார்:

"அடக்கம் உடையாரை அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"


திருவள்ளுவர்: 

"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து"


அவ்வையாரும் திருவள்ளுவரும் ஏறத்தாழ ஒரே கருத்தைத்தான் சொல்லியிருக்கின்றனர்.

இருவருமே சொல்வது என்னவென்றால்,  "கொக்கு போல் பொறுமையுடன் தக்க சமயத்திற்காக காத்திருந்து,  காலம் சரியாக வாய்க்கும் போது கொக்கு குறிபார்த்து மீனை கொத்துவது போல நாமும் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்".



அவ்வையார்  மேலதிகமாக இன்னொரு கருத்தையும் முதலிரண்டு வரிகளில் கூறியுள்ளார். அதாவது, "பொறுமையுடையவர்களை முட்டாள்கள் என்று எண்ணக்கூடாது".



குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.



2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team


Sunday, May 24, 2015

FM ரேடியோ எப்படி ஒலிபரப்பப்படுகிறது?

FM ரேடியோ எப்படி ஒலிபரப்பப்படுகிறது?

FM ரேடியோ எப்படி ஒலிபரப்பப்படுகிறது என்று  பார்ப்போமா? 

அதற்குமுன் வெள்ளோட்டமாய் ஒரு முன்னோட்டம் உங்களுக்காக.

அரசு கட்டுப்பாட்டில் இருந்த இந்த பண்பலை வரிசைகள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  தனியாருக்கு ஏலம் விடப் பட்டன.விளைவு? டீக்கடை, மினி பேருந்து என்று அனைத்து இடங்களிலும் தனியார் பண்பலை மயம். 


இந்த படத்தில் டீக்கடை எங்கு இருக்கிறதென்று கண்டு பிடியுங்களேன் 



தனியார்  FM ரேடியோவிற்கு அனுமதி அளித்தவுடன் FM வரலாற்றில் ஓர் புத்துணர்ச்சி பரவியது.புத்தம் புதிய பாடல்களின் தொடர் அணி வகுப்பால் மக்களிடையே தனியார்  FM ரேடியோ நிகழ்ச்சிகளின் மேல்  ஒரு திடீர் ஈடுபாடு.அதனால் அனைத்து மினி பஸ்களிலும்,  டீக்கடைகளிலும் FM ரேடியோ தான்.  மினி பஸ்களில்  தனியார்  FM ரேடியோ நிகழ்ச்சிகளை speaker வைத்து ஒலிபரப்பி மக்களை பேருந்துக்கு இழுத்தனர்.

ஒரு முறை திருநெல்வேலிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். எங்களுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்சன் செல்லவேண்டி இருந்தது. மினி பஸ் கண்டக்டர்  மக்களை பேருந்துக்குள் வரவைக்க கையாண்ட உக்தி  அவரின் பேச்சுத்திறமைக்கு ஒரு சான்று.குறிப்பிட்ட  FM ரேடியோவின்  நிகழ்ச்சியையும் அதன் தொகுப்பாளரின்  பெயரையும்  குறிப்பிட்டு, 11 மணிக்கு ஒலிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியின் வர்ணனைகளையும் பாடல்களையும் கேட்க வேண்டுமென்றால் எங்கள் பஸ்சில் உடனடியாக ஏறுங்கள் என்று கூறி  மக்களை ஏற்றிக்கொண்டிருந்தார்.அந்த அளவிற்கு தனியார்  FM ரேடியோக்களும் அதன் தொகுப்பாளர்களும் மக்களிடையே பிரபலம் அடைந்திருந்தனர்.இன்று அந்தளவுக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. 

மழை காளான் போல திடீரென்று முளைத்த  தனியார்  FM ரேடியோக்கள், சில வருடங்களிலேயே  தொலைக்காட்சிப் பெட்டியால்  பல இடங்களில் காணாமல் போனது.  தொலைக்காட்சிப் பெட்டியின் விலை வீழ்ச்சியாலும் விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டியாலும் டீக்கடை மற்றும்  பேருந்துகளில்  தொலைக்காட்சிப் பெட்டியில் படம் பார்க்க முடிந்தது. 

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில்   டீக்கடையில், டீ குடித்துக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டியில் குஷ்பு நடித்த பிரம்மா படத்தில் இடம் பெற்ற " இவள் ஒரு இளங்குருவி ...எழுந்து ஆடும் மலர்கொடி ........" என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.பாடலின் ஒரு காட்சி டிராலி ஷாட்டாக முன்னோக்கி வருவதுபோல் படமாக்கி இ ருந்தார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நபரும் கையில் டீ கிளாஸுடன் பக்கவாட்டில் நகர்ந்தார்( பாடலில் ரொம்ப லயித்து விட்டார் போலும் ).அவ்வளவு தான்! டீ கிளாஸ் உடைந்ததோடல்லாமல் கையிலும் சிறு காயம்.டீக்கடையில் FM ரேடியோ வைத்திருந்தால்  இந்த நிலைமை வந்திருக்குமா?

இன்னமும் சிறு தொழில் செய்வோருக்கு, குறிப்பாக பீடி சுற்றுவோர், டைலர்கள், கொத்தனார் தொழில் செய்வோர் என்று பலருக்கும் FM ரேடியோ தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு. வேலையிலும் கவனம் சிதறாது. அதே சமயம் மனதிற்கும் புத்துணர்ச்சி! ஏனென்றால் சில பாடல்கள் நம்மை மலரும் நினைவுக்கு கொண்டு சென்று நமக்குள் ஒரு உற்சாகத்தை பீறிடச்  செய்யுமே, இதை யாரும் மறுக்க முடியுமா?

இந்த FM ரேடியோ எவ்வளவு தூரம் மக்களை சென்றடையும்?

 - தொடரும் 


குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.


2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team







Tuesday, May 19, 2015

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம்

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 

பிரதமரின் காப்பீட்டுத்திட்டங்கள் பற்றி இதில் குறிப்பிடலாம் என்றிருக்கிறேன்.  


மூன்று வித திட்டங்கள் உள்ளன.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று உங்களுக்கு விருப்பமுள்ள திட்டத்தின் பெயரை கூறி அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். மூன்றையுமே நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மாத கடைசிக்குள் சேர்ந்துவிட்டால் மெடிக்கல் செக்கப் எதுவும் கிடையாது. இந்த  திட்டத்தின் படி, ஒவ்வொரு வருடமும்  ஜூன் 1 முதல் மே 31 வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் கட்டிக்கொள்ளலாம்.

தமிழ் நாட்டுக்கான இலவச தொலைபேசி எண் : 1800-425-4415. நான் பேசி விபரங்கள் கேட்டேன்.மிகவும் தெளிவாக தமிழிலேயே விளக்கினார்கள்.அவர்களுக்கு என் நன்றிகள்!



அதெல்லாம் சரிதான்! வருடத்திற்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? விபத்து ஏற்பட்டால் நமக்கு எவ்வளவு பணம் தருவார்கள்? என்று கேட்கிறீர்களா?

இதோ உங்களுக்காக:

1).பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா : இது 2 லட்ச ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத்திட்டம்.இதற்கான வருட சந்தா 330 ருபாய்.

2). பிரதான் மந்த்ரி சுரக்க்ஷா  ஜோதி பீமா யோஜனா:  இது 2 லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத்திட்டம்.இதற்கான வருட சந்தா 12 ருபாய்.

3). 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கான பென்ஷன் திட்டம்: இதில்  210 ருபாய் முதல் 1454 ருபாய் வரை மாதம் பிரீமியமாக கட்ட்டலாம். அதற்கேற்றாற்  போல் 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும்.


குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team






Sunday, May 17, 2015

என்ன படிப்பு! எந்த கல்லூரியில்!!

என்ன படிப்பு! எந்த கல்லூரியில்!!


புதிதாக கல்லூரியில் சேரவிருக்கும் மாணவ மாணவிகள் நல்ல கல்லூரியில் சேர்ந்து தரமான கல்வி பயிலவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு.

கல்லூரி நடத்தும் உரிமையாளர்களே!

எங்களை தொடர்பு கொண்டு, உங்கள் கல்லூரி பற்றிய விபரங்கள், என்னென்ன படிப்புகள், முந்தைய வருட தேர்ச்சி நிலவரங்கள்,படிப்பு முடிக்குமுன்னே வேலை கிடைக்கப்பெற்ற மாணவ மாணவிகளின் சதவிகிதங்கள்  போன்ற விஷயங்களை எங்களுக்கு தெரிவித்தால்  உங்கள் கல்லூரி பற்றிய அனைத்து விபரங்களையும் இங்கு வெளியிட தயாராக இருக்கிறோம்.

இதை படிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை தேர்வு செய்வதற்கும், இளைஞர்கள்  தங்கள் படிக்கப்போகும் கல்லூரி பற்றி தெரிந்து கொள்ளவும் இப்பதிவு உதவியாக இருக்கும்.

எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய இ-மெயில் முகவரி:littlegroup555@gmail.com


குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news

- J5 news Team

Saturday, May 16, 2015

இடி மின்னலும் ஒற்றை பனைமரமும்

இடி மின்னலும் ஒற்றை பனைமரமும் 

இடி மின்னல் வந்தால் ஒற்றை பனை மரத்தடியில் ஒதுங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் என்று எளிய முறையில் விளக்க முயற்ச்சித்திருக்கிறேன். 






இடி மின்னல் எப்படி வருகிறதென்று அனைவருக்கும் தெரியும் அல்லது இணையத்திலாவது தேடிப்  படித்திருப்பீர்கள். படிக்கவில்லை என்றால் பின்னூட்டம் ( comment ) இடவும். அதைப்பற்றி புது பதிவு ஒன்று போடுகிறேன்.

பனை மரத்தைப் பொருத்தவரை நம் பத்திநாதபுரம் மக்களுக்கு 1889-ம் ஆண்டு தொட்டே உறவு இருந்து வருகிறது. கும்பிடு பனையை நம் வீட்டுப்  பெரியவர்கள்  யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்படா! ஒரு வழியாக தலைப்பில் உள்ள மூன்று வார்த்தைகளுக்கும்  விளக்கம் கொடுத்து விட்டேன். இனி மூன்றிற்கும் உள்ள சம்பந்தத்தை பார்ப்போமா?


ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் நாம் முதலில் மின்னலைத்தான் பார்க்க முடியும். சிறிது நேரம் கழித்தே இடியின் ஓசையை கேட்க முடியும்.


ஒளியின் வேகம்  =  299792458 metres per second (≈3.00×108 m/s). 

எளிதில் புரியும் படியாக சொல்வதென்றால்,

 நாம் பைக் ஓட்டும் வேகம்  மணிக்கு 60கிலோமீட்டர்
ஒளியின்  வேகமோ  மணிக்கு 107924400 கிலோமீட்டர்.


இவ்வளவு வேகத்தில் பயணித்தும், ஒளியானது சூரியனிலிருந்து பூமியை வந்தடைய 8 நிமிடங்களும் 17 வினாடிகளும் ஆகிறது. அதாவது சூரியன் முழுவதும் எரிந்து இருட்டாகிவிட்டால் கூட நமக்கு  8 நிமிடங்கள்  17 வினாடிகள் வெளிச்சம் இருக்கும்.

ஒலியின்  வேகம் மணிக்கு 1236 கிலோமீட்டர் மட்டுமே.

நாம் பறக்கும் விமானத்தின் சராசரி வேகம் மணிக்கு  900 கிலோமீட்டர் முதல்
1100 கிலோமீட்டர்  வரை. 

உங்கள்ளுக்கு ஒன்று தெரியுமா?

ஒலியை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு  வேகமாக செல்லும் கான்கார்டு
(concorde) விமானங்களை  பிரிட்டிஷ்  மற்றும் பிரான்ஸ் நாடுகள் 
இணைந்து தயாரித்தன.20 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

 1969 வெள்ளோட்டம் விடப்பட்டாலும் 1976 முதல் 2003 வரை
இந்த ரக விமானங்கள்  மக்களுக்காக பயன்பாட்டில் இருந்தன. சாதாரண ரக
 விமானங்கள் செல்லும் நேரத்தைவிட பாதி நேரத்திலேயே இது குறிப்பிட்ட 
இடத்தை அடைந்து விடும்.பெரும்பாலும் இவைகள் இங்கிலாந்தின் லண்டன் 
மற்றும் பிரான்ஸ் நாட்டின்  பாரிஸ் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்
 மற்றும் வாஷிங்டன்  நகரங்களுக்கு பறந்து கொண்டிருந்தன. 92 முதல் 128 இருக்கைகள் வரை 
இந்த ரக விமானத்தில் இருந்தன. 

பாரிஸ் நகரின் அருகில் உள்ள "Charles de Gaulle" ஏர்போட்டில்  25.07.2000- அன்று 
விமானம் பறக்கத்  தயாரானபோது Gonesse என்ற ஹோட்டலில் மோதி விபத்துக்குள்ளானது.   விமானத்தில் இருந்த  அனைவரும் (100 பயணிகள் 
 9 விமான சிப்பந்திகள்) மற்றும் விமான ஓடு தளத்தருகே இருந்த 4 பேரும் 
மோட்சம் சேர்ந்தார்கள். கான்கார்டு விமானத்தின் 27 வருட வரலாற்றில் 
இதுதான்  மிகப்பெரிய விபத்து.அது மட்டுமல்லாமல் செப்.2001-ல் 
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல்   uk மற்றும் பிரான்ஸ்-சுக்கு
 சற்று கலக்கத்தை ஏற்ப்படுத்தியது.எனவே  இந்த விமான போக்குவரத்து
 2003-ல் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

சில்லாட்டை என்றால் இன்று எத்தனை குழந்தைகளுக்குத்  தெரியும்?
பனை மட்டையை மரத்தோடு இணைக்கும் அந்த பகுதிதான் 40 ஆண்டுகளுக்கு
 முன்பு வரை விறகு அடுப்பு உபயோகித்துக்கொண்டிருந்த நம் மக்களுக்கு
 உடனடியாக தீ பற்றும் பொருளாக ( இன்று பேப்பர் இருப்பது போல) இருந்தது.
அன்று தீப்பெட்டி என்பதே அரிதுதான்.பக்கத்து வீட்டிற்கு  சென்று அவர்கள் 
அடுப்ப்புத் தணலை ( தீ கங்கு )  தேங்காய் சிரட்டையில் வாங்கி வந்து நம் வீட்டு 
அடுப்பில் போட்டு அதன்மீது சில்லாட்டை வைத்து ஊதுகுழலால் ஊதினால் 
உடனே சில்லாட்டை தீபற்றிக்கொள்ளும். 

பனைமரம் என்றதும் என்னவெல்லாம் ஞாபகம் வருகிறது என்று பாருங்கள்?


மலரும் நினைவுகள் போதும்.விஷயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா? 
இதோ வந்துவிட்டேன். 


மேகங்கள் ஒன்டோடொன்று  கொண்ட காதலால் உச்சகட்டம் அடைய, கூடும் 
போது ஏற்படும் மின்னலின் மின்சக்தி பூமியை நோக்கி மட்டுமல்லாமல் மேல் 
நோக்கியும், இரு பக்கவாட்டுப் பகுதிகளிலும் கூட பாய்கிறது.பூமியை நோக்கி 
வரும் மின்னலைத்தவிர மற்றவற்றைப் பற்றி நாம் கவலைப்படத் 
தேவையில்லை. ஏனெனில் அவை அண்ட வெளியில் கலந்து கரைந்து விடுகிறது.

ஒரு பொட்டல் காட்டில் ஒரே ஒரு பனை மரம் மட்டும் இருப்பதாக வைத்துக்
கொள்வோம்.மின்னல் இப்பகுதியில் உருவாகி பூமியை நோக்கி வருகிறது.
 பனை மரத்தைத்  தொட்டவுடன் மின்னலுக்கு பூமியோடு தொடர்பு ஏற்பட்டு
விடுகிறது. மின்னலின் அனைத்து மின் சக்தியும் உடனே பனை மரத்திற்கு
 கடத்தப்படுகிறது.விளைவு? ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான "வாட்"
 மின்சக்க்தி ஒரு பொருளில் பாய்ந்தால் என்னாகும்? பனை மரம் தீ பிடித்து 
எரியும். அதனால் தான் இடி மின்னல் வந்தால் பனை மரத்தடியில் நிற்க கூடாது என்று சொல்கிறார்கள். 



அப்படியானால் பல பனை மரங்கள் நிறைந்த பகுதியில் நிற்கலாமா? அல்லது 
பல தென்னை  மரங்கள் நிறைந்த தென்னந்தோப்பில் நிற்கலாமா?

இதற்கு பதில்-  நிற்கலாம்.

"எப்படி?"

ஏற்கனவே கூறியது போல வேகமாக பூமியை நோக்கி வரும் மின்னல், மரங்களை தொடும் போது அதன் மின் சக்தி அனைத்து மரங்களுக்கும் சரிசமமாக கடத்தப்படுகிறது. இதனால் அதன் வீரியம் குறைகிறது. உதாரணமாக  ஒரு இடத்தில் 100 பனை மரங்கள்  இருப்பதாக வைத்துக்கொள்வோம். 

உயரமான பனை மரத்தை முதலில்  தாக்கும் மின்னல் அடுத்த மைக்ரோ வினாடியில் அதற்கு அடுத்த உயரம் குறைந்த மரத்தை தாக்குகிறது.  அடுத்த இரண்டாவது மைக்ரோ வினாடியில் மூன்றாவது உயரம் குறைந்த மரத்தை தாக்குகிறது ( புகைப்படம் பார்க்கவும்). இப்படியே அனைத்து மரங்களுக்கும் மின் சக்தி கடத்தப்படுவதால்  மரத்தின்  அடியில் நிற்கும் நம்மை மின்னல் அடையும் போது அதன் சக்தி வலுவிழந்து விடுகிறது. மேலும்,
பூமியின் தரைதளத்தை தொட்ட மின்னலின் மின் சக்தி, பூமியின் அனைத்து பாகங்களுக்கும் உடனடியாக கடத்தப்படுவதால் மின்னலின்  வீரியம் அது பூமியைத் தொட்டவுடன் குறைந்து விடுகிறது.




மரங்களோ அல்லது வீடுகளோ  இல்லாத பொட்டல் வெளியில் ஒருவர் நிற்பதாக வைத்துக்கொள்வோம். அவர் எப்படி மின்னலிலிருந்து தப்பிக்கமுடியும்?


அதற்கும் வழி இருக்கிறது. 


ஆறடி கொண்ட அந்த மனிதன் நின்று கொண்டிருந்தால் மின்னல் முதலில் அவனின் தலையைத் தாக்கும்.பின் ஆறடி உயதத்தைக் கடந்துதான் பூமியைத்தொடும். இந்த ஆறடி தூர பயணத்திலேயே மின்னல் மனிதனை எரித்துவிடும்.அப்படியானால் அவனின் தலைக்கும்  பூமிக்கும் உள்ள ஆறடி உயரத்தை உடனடியாக குறைக்க வேண்டும் .அப்போதுதான் அவன் பிழைக்கமுடியும். எப்படி குறைக்கலாம்? 

நீங்கள் புத்திசாலிகள் தானே! உடனே பின்னோட்டம் (comment ) இடுங்களேன்!!


குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news




1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team


















Friday, May 15, 2015

சந்தோஷம்! மகிழ்ச்சி!! அசோகம்!!!

சந்தோஷம்!         மகிழ்ச்சி!!             அசோகம் !!!


சந்தோஷம் 1:

என் முதுகில் தட்டிக்கொடுத்து நேரிலும், போனிலும், facebook  ஊடாகவும் என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் மீண்டும் என்னை எழுதத் தூண்டும் தூண்டுகோலாக அவர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம்.என் மனதின் ஆழத்திலிருந்து மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இனி தினமும் ஒரு பதிவாவது போட்டுவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆகவே, தினமும் என் ப்ளாக்கிற்கு வந்து பதிவை படித்து  என்னை உற்சாகப்படுத்தவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்த பதிவின் தலைப்பில் 3 முறை சந்தோஷம் என்று எழுதிருக்கிறோமே, இன்னும் இரண்டு சந்தோஷத்திற்கு எங்கே போவது ( நமக்குத்தான்  எப்போதும் கூட்டணி போட, சோகம் வாசலிலேயே நிற்கிறதே ) என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது மூன்று சந்தோஷங்கள் என்ன முப்பதாயிரம் கோடி சந்தோஷங்கள் உனக்கு கிடைக்கும் என்ற அசரீரி கேட்டது. பலித்தால் சந்தோஷம் தானே! அதையும்  உங்களிடமும் பகிர்ந்து கொள்வேன்!! 


சந்தோஷம் 2:

ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே என் ப்ளாக் http://jfivenews.blogspot.in - கிற்கு 322 முறை மக்கள் வருகை தந்திருக்கின்றனர். Screenshot இணைத்துள்ளேன், பார்க்கவும். ப்ளாக்கில் counter இரண்டு நாட்கள் கழித்தே சேர்த்ததன் காரணமாக counter -ல்  மொத்தம் 33 எண்ணிக்கையை  குறைவாகத்தான்  காட்டும். Screenshot  பார்க்க மறந்துடாதீங்க.

இந்தியாவில் இருப்பவர்களில் என் ப்ளாக் http://jfivenews.blogspot.in - கிற்கு வருகை தந்தவர்கள்                                 - 196 முறை 
அமெரிக்காவிலிருந்து                             - 69 
ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து             - 16 
சவூதி அரேபியாவிலிருந்து                  - 14 
ஆஸ்திரேலியாவிலிருந்து                   - 7     
ஓமன்       நாட்டிலிருந்து                         - 7 
குவைத்    நாட்டிலிருந்து                        - 4 
மலேசியா       நாட்டிலிருந்து                - 4 
சின்ட் மார்ட்டின் தீவிலிருந்து              - 3 
பின்லாந்து                                                    - 2


வருகை புரிந்த அணைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த Screenshot -டைப் பார்க்கும் போதே மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பீரிடுகிறது .அதே சமயம் அவர்களுக்குத்தேவையான நல்ல கருத்துக்களை  மட்டுமே கொடுக்கவேண்டும் என்ற எச்சரிக்கை மணியும்  மனதில் ஒலிக்கிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்! நானும் நல்ல விஷயங்களை மட்டுமே தருவேன்!!.

சந்தோஷம் 3:

கடந்த 12 நாட்களாக நமது பத்திநாதபுரத்தில் VBS வகுப்புகள் நடைபெற்று வந்தது அனைவருக்கும் தெரியும். நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் முதலாவதாக வந்த மாற்கு குழுவில் என் கடைசி மகள் இடம் பெற்றிருந்தது சந்தோஷம். இரண்டாவதாக வந்த மத்தேயு குழுவில் என் மூத்த மகனும் இளைய மகளும் இடம் பெற்றிருந்தது இரட்டிப்பு சந்தோஷம்.அனைத்து VBS குழந்தைகளுக்கும் J5 news சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

அசோகம் என்று தலைப்பில் எழுதும் போதுதான் அசோகமரம் பற்றிய எண்ணம் மனதில் தோன்றியது. நம்மில் நிறைய பேர் நெட்டிலிங்க மரத்தைத் தான் அசோகமரம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம்( புகைப்படம் பார்க்கவும்).ஆனால் இரண்டுமே வேறு வேறு.அசோகமரத்தின் பூவானது, ஏறத்தாழ நாம் பார்க்கும் இட்லி பூ போலவே இருக்கும்.( புகைப்படம் பார்க்கவும்).அசோகமரத்தின் அறிவியல் பெயர் " Saraca asoca". நெட்டிலிங்க மரத்தின் அறிவியல் பெயர் "Polyalthia-longifolia".

நெட்டிலிங்க மரம் 

இராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்திருந்தான் என்று கம்ப இராமாயணத்தில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறதா? அசோக மரங்களுக்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் அந்த மரங்கள் இருக்கும் பகுதியில் யார் இருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாம்.


 அப்படியானால்  நாமும் நமது வீட்டில் வளர்க்கலாமே என்று சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்த விவசாய தோட்டக்கலை பண்ணையிலிருந்து ( செம்மொழி பூங்காவிற்கு எதிரே அமைந்துள்ளது)  இரு  செடிகள்  வாங்கிவந்தேன். அண்ணா மேம்பாலத்திற்கு  அருகே இவ்வளவு பெரிய தோட்டப்பண்ணை இருப்பது பலருக்கு தெரியுமோ என்னவோ? மிகப்பெரிய இந்த தோட்டப்பண்ணையில் walking செல்வது மனதிக்கு மிகவும் உற்சாகத்தைத் தரும். 


அசோகமரம்

ஏனென்றால் பலவித மலர்களும் அவற்றின் மணமும் மனதை  மயக்கவும் செய்யும் ஒருநிலை படுத்தவும் செய்யும்.பல சினிமா படங்களின் படப்பிடிப்புகளும் இங்கு நடந்துள்ளன. வெற்றி விழ படத்தில் குஷ்பு பிரபுவுடன் ஆடும் "சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே...."   என்ற பாடலின் இரண்டாவது சரணம் இங்கு படமாக்கப்பட்டது தான். 


அசோகமரத்தின்  பூ


நான் வாங்கிவந்த   செடி, தற்போது ஒரு அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. பார்க்க விரும்புபவர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்யலாம். 


பின்னூட்டம் (comment) இட மறந்திடாதீங்க.

குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team