நாகர்கோவிலில் உள்ள கருணை இல்லம் சந்தோஷத்தில் திக்குமுக்காடிக்கொண்டிருந்தது. மழை காதலன் வரவால் இன்புறும் செம்மண் பூமி போல சிகாவின் வருகையால் ஆசிரமக் குழந்தைகள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக்கொண்டிருந்தனர். புது உடைகள், விதவிதமான சாக்லேட்கள், என்று ஒவ்வொருவரின் கையிலும் சுமக்கமுடியாத அளவுக்கு பரிசுப் பொருட்கள்!
மாதத்தின் முதல் வாரம் என்றாலே ஐ.டி கம்பனியில் வேலை பார்க்கும் சிகா ஆஜராகிவிடுவாள். சிலமணி நேரங்கள் இருந்து அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வாள்.
"சரி சிஸ்டர், நான் கிளம்பறேன்" என்று வெளியே வந்த சிகாவை 'மேடம்' என்ற ஆண்குரல் தடுத்தது.
திரும்பினாள்.
'எனக்கு என்ன பதில்?' ஸ்டைலாக பைக்கில் உட்கார்ந்திருந்த அசோக் கேட்டான்.
"ஏற்கெனவே சொல்லிட்டேனே"
'அது செல்லாது' சிரித்தான்.
"கொஞ்சம் சீரியஸா பேசலாமா" என்றவள்,
"என்னால குழந்தை பெத்துக்க முடியாதுங்கிற காரணத்தால தான் நான் இந்த கருணை இல்லத்துக்கே வர்றேன். இந்த குழந்தைகள் முகத்தை பார்க்கும் போது என் சோகம் மறைஞ்சிடுது" வானத்தை வெறித்தபடி பேசிக்கொண்டிருந்தாள் சிகா.
'கல்யாணம் கட்டிக்குவோம், நானும் உங்க கூடவே இங்க வர்றேன்'
"எத்தனை நாளைக்கு?"
'ஆயுள் முழுக்க'
"என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?"
'உங்களை பார்த்த முதல் நாளே, நீங்க திருநங்கைனு புரிஞ்சிக்கிட்டேன். திருநங்கைகளுக்காக குரல் கொடுப்பவன் நான். அவர்களின் உணர்வுகளை மதிப்பவனும் கூட. அதனாலதான், அன்னிக்கே உங்களைத்தான் கட்டிக்கணும்னும் முடிவு பண்ணிட்டேன்' தீர்க்கமாய் பேசினான் அசோக்.
"எனக்கு சொந்தம்னு இருந்தது அண்ணன் மட்டும் தான். நான் திருநங்கையா மாறுனதும் அவரும் என்னை விட்டுட்டுப் போயிட்டார். இப்போ நான் தனிமரம்" சிகாமணி என்ற சிகாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
'ம்கூம்.....அனாதையாய் இருக்கிறது நான் தான். நீங்க வந்துட்டா என் வாழ்வே செழிக்க ஆரம்பிச்சுடும்' என்றவன் அவளின் கரங்களை மெதுவாகப் பிடித்தான்.
சில நாட்களிலேயே சிகாவின் அண்ணன் சுந்தரின் புகைப்படத்தின் முன்னால் இருவரும் மணமக்களாயினர். மாதங்கள் உருண்டது.
*****
அன்று தலைவலி காரணமாக அசோக் விடுமுறை எடுத்து வீட்டில் இருக்க, சிகா அலுவலகம் சென்றிருந்தாள்.
காலை பத்து மணி இருக்கும். சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான்.
வாசற்படியில் ஒரு சிறிய வெண்சங்கும் அதனுடன் ஒரு பேப்பரும் இருந்தன. அதில், " இந்த வெண்சங்கை சிவன் படத்தின் முன் பயபக்தியுடன் வைத்து வணங்கி, எந்த ஜென்மத்துக்கு போகணும்னு நினைச்சாலும் நீ அங்கே போகலாம், நல்லவற்றிற்கு மட்டுமே இதை பயன்படுத்து" என்றிருந்தது.
அசோக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை. நடப்பது கனவா நனவா என்று அவனையே கிள்ளிப்பார்த்துக்கொண்டான். வீட்டுக்குள் வந்தவன் தன் முன்ஜென்ம வாழ்வின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்ததுன்னு பார்க்கலாம் என்று எண்ணி, சங்கை கையில் வைத்து மனமுருகினான். முப்பது வருடங்களுக்கு முன்பான அசோக்கின் முன்ஜென்ம கடைசி நிமிடங்கள் அவன் முன் விரிந்தது.
இரவு நேர மயானம்.
"என்ன கிழவா! எல்லாம் ரெடிபண்ணிட்டியா?" அவனின் குரலில் அதட்டல் தெரிந்தது.
'தம்பி! மதியம் நீங்க வந்த போதே நான் தெளிவா சொல்லிட்டேன். இந்த மாதிரி தப்பான விஷயங்களுக்கு நான் துணை போகமாட்டேன்' அவரின் உடல் மொழியில் பெண்மை தூக்கலாகத் தெரிந்தது'.
கிண்டலாக சிரித்தான் அவன்.
அவரின் குரலையும், உடல் நளினத்தையும் அவனின் நக்கல் சிரிப்பு கேலி செய்தது. தொடர்ந்தான் அவன்.
"இந்த திவ்யா, என் ஆசைக்கு இணங்க மாட்டேன்னு சொன்னா. லேசா தட்டினேன். பொட்டுனு போயிட்டா. பாடி, என் கார் டிக்கில இருக்கு. எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் வாங்கிக்க, உடனே புதைச்சிடு" என்றவன் அதிர்ந்தான்.
கல்லறைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்த போலீசார் வெளியே வந்து அவனை கைது செய்தனர்.
"ஏய் கிழவா! என்னை காட்டிக்கொடுத்துட்டல்ல! உன்னை சும்மா விடமாட்டேன். இன்னொரு ஜென்மம் எடுத்தாவது பழிவாங்கியே தீருவேன்" கோபத்தில் கத்தியவனை போலீசார் இழுத்துச் சென்றனர்.
"சாயந்திரமே தகவல் கொடுத்தமைக்கு நன்றி சிகாமணி" என்று பெரியவரை தட்டிக்கொடுத்த போலீசார், டிக்கியைத் திறந்து பாடியை வெளியே எடுத்தனர். அவள் முகத்தைப் பார்த்த அசோக் அதிர்ந்தான்.
*****
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைதிறந்தான் அசோக். சிகா வந்திருந்தாள்.
"உனக்கும் உடம்பு சரியில்லையா?"
'அண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. அவரை பார்க்கணும் போல இருக்கு. போனமாசம் செந்தில் சூப்பர்மார்கெட்டில் பார்த்தபோது கூட, நீயெல்லாம் ஏன் உயிரோடிருக்கிறாய், எனக்கு அவமானமாய் இருக்கிறது என்று கோபமாய் பேசினார்' கண்ணீர் பெருக்கெடுத்தது சிகாவுக்கு.
அவளை திசை திருப்ப, கன்னத்தில் முத்தம் பதித்தான் அசோக். முகம் சிவந்து சிரித்தாள்.
அசோக் சிகாவை கட்டிலில் சாய்த்தான்.
"ஏங்க, காலையிலேயா! மணி பதினொன்ணாகப் போகுது, இனிதான் சமையலே ஆரம்பிக்கணும், ஒரு மணிக்கு சாப்பாடு ரெடியாகலைனா, உங்களுக்கு மூக்கு மேல கோபம் வந்துடும்,.......விடுங்க, "
வாய் அப்படி சொன்னாலும் அசோக் கைகளுக்குள் கட்டுண்டவுடன் அவளின் மேனி அந்த கதகதப்புக்கு ஆசைப்பட்டது.
அசோக்கின் முத்தங்கள் ஒவ்வொன்றும், குளத்து நீரில் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அயிரை மீனில், வட்ட வடிவ நீரலைகள் பவ்வியமாய் மசாஜ் செய்வது போலிருந்தது. காற்றின் வருடலால் நீரலைகளுக்கு கிடைத்த சுகம் பெரிதா? அல்லது மீனுக்கு கிடைத்த நீரலை மசாஜ்ஜின் சுகம் பெரிதா? என்றால், அதை அனுபவித்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்.
இருவரின் இதயமும் நிமிஷத்துக்கு 130 தடவை துடித்து மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தது. இருவருமே வியர்வையில் குளித்திருந்தனர். அசோக்கின் இடது தோளில் படுத்துக்கொண்டே அவனின் நெஞ்சு முடிகளில் விரல்களால் விளையாடினாள். பேச்சு, சிகாவின் அண்ணன் சுந்தர் பக்கம் திரும்பி வாக்குவாதமானது.
'நான் சொன்னா கேட்கவா போறீங்க' என்ற சிகா, கோபமாக திரும்பிப்படுக்க, அவள் பக்கமாக ஒருக்களித்து படுத்த அசோக்,
"இப்போ என்ன நடந்ததுனு கோவிச்சுகிறா?"
'என் அண்ணனை கூட்டிட்டு வருவீங்களா இல்லையா?' எரிச்சல் கலந்த கோபத்தை முகத்தில் காட்டினாள். அசோக் தலையாட்டி ஆமோதித்தான்.
பேச்சு சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு பிருந்தா, நிகழ்வை யூகித்துக்கொண்டு ஜன்னலை சாத்திவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். சற்று முன் பார்த்த நிகழ்வின் மோகம், அவள் கண்களில் ஒட்டிக்கொண்டு புருஷனை கூப்பிட்டது. அந்த காமத்துடன் போட்டி போட்ட அவளின் கைகள், மல்லிகைப் பூவை தலையில் சூடி, 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' கணவனின் லேப்டாப்பை மூடியது.
அதே சமயம், சிகாவின் வீட்டில்-
"டொக்...டொக்....."
"என்னங்க.....யாரோ கதவைத் தட்டுறாங்க"
'ம்....' அசோக்கிடம் விடைபெற்றுக்கொண்ட விரகதாபம், மெதுவாக பிரபஞ்சத்துடன் கலந்துகொண்டிருந்தது.
"சீக்கிரம் போய் பாருங்க " என்று எழுந்தவள் சேலையை சரிசெய்து கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.
கதவைத் திறந்த அசோக் ஆச்சரியத்தில் உறைந்தான்.
"வாங்க, வாங்க, சிகாகாகாகாகா.....சிகாமணி.......யார் வந்திருக்கா பாரு, உட்காருங்க, நானே உங்களை வந்து கூப்பிடணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்"
ஓடிவந்து அண்ணனை கட்டிக்கொண்டாள் சிகா. சுந்தரின் நெஞ்சில் வஞ்சம் இருந்தாலும் உதடு சிரித்தது. கையோடு கொண்டுவந்திருந்த சிறிய தோலிலாலான கைப்பையை கீழே வைத்தான். அண்ணனும் தங்கையும் பேசிக்கொண்டிருக்க, அசோக் கடைக்கு சென்று மச்சானுக்கென ஸ்பெஷலாக நிறைய வாங்கிவந்தான்.
*****
நண்பகல் ஒரு மணி!
மூவரும் சாப்பிட்டனர்.
'அசத்திட்டீங்க மாப்பிள்ளை, சாப்பாடு ரொம்பப் பிரமாதம்'
"எல்லாமே உங்க தங்கச்சி கைவண்ணம் தான்" என்றவன் சிகாவை பார்த்து கண் சிமிட்டினான்.
'ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, ஸ்ட்ராபெரி, ப்ளூ பெரி என்று கூட்டணி அமைத்திருந்த 'ஃப்ரூட் சலாட்'
கிண்ணத்தை அண்ணனிடம் நீட்டினாள்.
"கொஞ்சம் இருங்க மச்சான்" என்று எழுந்த அசோக் , சிறிய பாட்டிலுடன் வந்தான்.
"உங்களுக்காகவே ஸ்பெஷலா இந்த மலைத்தேனை வாங்கிட்டு வந்தேன்", என்றவன்,
பாட்டிலின் மூடியைத் திறந்து 'ஃப்ரூட் சலாட்' மீது முழுவதையும் ஊற்றினான். சுந்தரும் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தான்.
'அண்ணே, இன்னிக்கு எங்க ஊரு இடுகாட்டுசாமி கோவிலில் திருவிழா. மதியம் வில்லுப்பாட்டு இருக்கு. இவருக்கு வில்லுபாட்டுனா ரொம்ப பிடிக்கும். அதான் அங்கே போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். நீங்களும் வாங்களேன்' ஆர்வமாய் கேட்டாள் சிகா.
மூவரும் ஊர் எல்லையில் இருந்த இடுகாட்டுக்குச் சென்றனர்.
மயானம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பல வண்ணங்களில் பேப்பர் கொடிகள்! நுழைவாயிலிலேயே ஐஸ் மற்றும் சோன்பப்பொடி வண்டிகள்! பலூன்,பீப்பீ, பொம்மைகள் என சிறுவர்களுக்கான திடீர் கடைகள் மழை காளான்களாய் முளைத்திருந்தது.
இரு பங்கங்களிலும் வெள்ளை நிற கல்லறைகள் உறங்கிக் கொண்டிருக்க, நடுநாயமாக இடுகாட்டுசாமி கோவில். பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. வலது பக்கத்தில் மேடை அமைத்து வில்லுபாட்டுக்காரர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். பல நிற உடைகளில் குமரிகளும் பெரியவர்கள்களும் குடும்பமாக உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தனர். குழந்தைகளும், சிறுவர்களும் ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்தனர். சில முதியவர்கள் ஆலமர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்த கல்லறைகளின் மீதமர்ந்து, இறப்புடன் 'டீல்' பேசிக்கொண்டிருந்தனர்.
இயற்கை நிழல் தேடி சுந்தர் கல்லறை பக்கம் நகர, அசோக்கும் சிகாவும் பந்தலுக்குள் விரவியிருந்த கடல் மண்ணில் உட்கார்ந்து வில்லுபாட்டை இரசிக்க ஆரம்பித்தனர். அசோக்கின் மனம் காலையில் கண்ட முன்ஜென்ம நிகழ்வை அசை போட்டது.
"இறந்து கிடந்த பெண்ணைப் பார்த்த அசோக்கிற்கு அதிர்ச்சி! அச்சுஅசலாக அவனை மாதிரியே இருந்தாள். அப்படினா, அவள் தான் இந்த ஜென்மத்தில் நானா! வானத்தில் இருந்து பெண் உருவில் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. சிகாவின் அண்ணன் சுந்தர் தான், முன்ஜென்மத்தில் திவ்யாவாக இருந்த என்னைக் கொன்றவன். சிகாமணி வெட்டியான் தான் இன்றைய சிகா!"
பின்னந்தலையில் சுந்தர் அடித்ததால் வாய் பிளந்தவாறே உயிரை விட்டிருந்தாள் திவ்யா. கண்களில் உக்கிரம் சுந்தரத்தை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தது.
"என்ன யோசனை?" கன்னத்தில் சிகா இடிக்க, சுயநினைவுக்கு வந்தான் அசோக்.
'ஒண்ணுமில்லே' என்று எழுந்தவன், பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த காலியாகியிருந்த தேன் பாட்டிலை தூர எறிந்ந்தான். கண்கள் சுந்தரை தேடியது.
அதே சமயம் அசோக்கின் வீட்டில் சுந்தர் கொண்டு வந்த பையிலிருந்து கருநாகம் வெளியே வந்துகொண்டிருந்தது.
சிவன் படத்தின் முன் இருந்த வெண்சங்கு அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தது. ஒரு சாது காற்றில் ஆடிக்கிக்கொண்டே அந்த சங்கை பிடித்துக்கொண்டிருந்தார்.
இங்கே திவ்யாவின் கல்லறையில் ....
கதையின் மீதியை தெரிந்துகொள்ள எனக்கு PM செய்யவும்
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram