மச்சு பிச்சு மலை
உலக அதிசயத்திற்கு ஈடாக கருதப்படும் மச்சு பிச்சு மலை என்ற மேகம் தவழும் மலை கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டில், பேரரசர் பச்சாக்குட்டிக்(Pachacútec) என்பவர் ஏறத்தாழ 1000 பேர் வாழும் வகையில் இன்கா பேரரசின் கஸ்கா நகரத்தை இந்த மலையில் நிர்மாணித்தார். இந்த நகரம் ஆண்டஸ்பீடபூமிக்கு மேலே பாதி வழியில், அமேசான்காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் இருந்தது. (வரைபடத்தில் இந்த மலையின் இருப்பிடத்தை குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும்).
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியபோது கஸ்கா நகருக்கும் ஆபத்து வந்தது. மக்கள் அனைவரும் காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர்.இருப்பினும் ஸ்பானிஷ் படை படைகளை எதிர்த்துக்கொண்டே இருந்தனர். 36 ஆண்டு காலம் இந்த சண்டை நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.ஸ்பானியரால் இன்காபேரரசு தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக இந்நகரம் காணாமல் போனதாக கருதப்பட்டது.சின்னம்மைநோய் தொற்றால் மீதம் இருந்தவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மச்சு பிச்சுவில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமா
எந்திரன் படத்தில் வரும் 'கிளிமஞ்சாரோ ....' பாடல் இங்கு தான் படமாக்கப் பட்டது.
1911-ல் ஹிரம் பிங்கம் ( யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியர் ) என்பவரால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.இருப்பினும் பிங்கம் கண்டறிந்த செய்திகளே வரலாற்றில் அதிகம் இடம் பெற்றுள்ளன.
பிங்காம் இந்த இடத்திற்கு வந்து ஏறத்தாழ 3 குழுவினருடன் தங்கி அந்த நகரை ஆராய்ந்தார்.அப்போது 150 பெண்களின் எலும்புக் கூடுகளும் 233 ஆண்களின் எலும்புக் கூடுகலும் கண்டெடுக்கப்பட்டன. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது சற்று சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.இங்கு நடந்த ஆராச்சியில் வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் கூறியிருக்கிறார்.
தற்போது, இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் வந்து குவியும் இடமாகத் திகழ்கிறது. . 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.குஸ்கோ என்ற இடத்திலிருந்து ஒல்லாண்டயடம்போ - விற்கு ரயிலில் சென்று பிறகு பேருந்து பயணம் மூலம் மச்சு பிச்சு நகருக்கு செல்லலாம்.
அமெரிக்காவின் New Haven, Connecticut -ல் உள்ள யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் மச்சு பிச்சுவின் கலைப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வாருங்களேன்!
தினமும் www.jfivenews.in பாருங்கள்!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram