Wednesday, July 29, 2015

பூசணிக்காய் குழம்பு

                                                  பூசணிக்காய் குழம்பு

தேவையானவை:
பூசணிக்காய் - ஒரு கீத்து
தக்காளி - 2 ( தக்காளியை ஒதுக்குவோர், புளி  செரித்துக்கொள்ளலாம். ஆனால் தக்காளி புற்றுநோய்க்கு ஒரு சிறந்த நிவாரணி )
வரமிளகாய் -3
வெங்காயம் - பெரியது ஒன்று ( பொடிதாக நறுக்கவும். நீளவாக்கில் வேண்டாம்)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் -ஒரு டீஸ்பூன்
வத்தல் தூள் -ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - இரண்டு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - சிறிது
சர்க்கரை - சிறிது
கறிவேப்பிலை - இரண்டு கீத்து
உப்பு - தேவைக்கேற்ப


பூசணிக்காயில் மோர் குழம்பு நிறைய பேர் செய்திருப்பார்கள்.இது சற்று வித்தியாசமான சுவையான குழம்பு.செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் அனுப்புங்கள்!

செய்முறை:

முதலில் தண்ணீர் ஊற்றி அதில் பூசணிக்காயை வேக வைக்கவும்( அதிக நீர் வேண்டாம்.பாதி வேகும் போது அரை டம்ளர் தண்ணீர் இருக்க வேண்டும்).இப்போது மசாலா பொடிகளையும் ( மேலே குறிப்பிட்டுள்ள ) தக்காளி அல்லது புளித்தண்ணீரையும் அதில் இட்டு மேலும் வேகவிடவும்.வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், வரமிளகாய், வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும். இப்போது பூசணிக்காய் பாத்திரத்தில் இதை கொட்டி அடுப்பை அணைக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தினமும் www.jfivenews.in பாருங்கள்!

    No comments:

    Post a Comment

    This is Jesu from Pathinathapuram