Saturday, July 4, 2015

பர்முடா முக்கோணம் என்ற பேய் முக்கோணம்



பர்முடா முக்கோணம் என்ற பேய் முக்கோணம் 




அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அருகே , பர்முடா மற்றும் ப்யூட்டோரிகோ ஆகியவற்றின் இடையே அமைந்திருக்கிறது இந்த பர்முடா முக்கோணம்( புகைப்படம் பார்க்கவும்).



 

இதன் வழியே பயணம் செய்த சில கப்பல்கள் மற்றும் இந்த வான்வெளியே பயணித்த விமானங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.


இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து ஏப்பம் விட்டிருக்கிறது இந்த முக்கோணம் . திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம். இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு முதன்முதலாக செய்தி வெளியானது. அதன் பின்னர், இன்று வரை அந்த முக்கோணம் புரியாத புதிர் தான்.


சரி, அந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?

காணாமல் போன விமானங்களுடனான தரைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடாரிலிருந்து அவர்களுடைய இருப்பு காணாமல் போகியிருக்கிறது.தொடர்பு துண்டிக்கப்பதுவதற்கு முன் அவர்களின் கடைசி வார்த்தைகள் இங்கே:


'நாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை! தொலைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்'

'நாங்கள் ஏதோ ஒரு நிலபரப்பின் மேலே பறந்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. எங்களால் கீழே நிலத்தைப் பார்க்க முடியவில்லை!'

'நிலம் துண்டு துண்டாய் தான் கண்களுக்குத் தெரிகிறது'

இப்படி பல.






இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமல்போகவில்லை, அங்கேயே வேறு வடிவில் இருக்கு! எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துவிட்டது ! என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். 


இது வேற்றுகிரகவாசிகளின் செயல்! என்று கூட நினைப்பவர்களும் உண்டு!







சிலர் கடலுள் மூழ்கியதாக நம்பப்படும் அட்லான்டிஸ் கண்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். விஞ்ஞான ரீதியாகவும் சில விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க.அது:


மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு. நீரோட அடர்த்தியை குறைத்து கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.

கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு ஒரு கருத்து 

சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்- இது ஒரு யூகம்.

கிரிஸ்டோபர் கொலம்பஸ் 1492ஆம் ஆண்டு இந்த முக்கோணத்தைக் பல அதிசய அனுபவங்களுடன் கடந்திருக்கிறார். அவருடைய கப்பலின் மேக்னடிக் காம்பஸ் முதலில் செயலிழந்து போயிருக்கிறது. காற்று ஏதுமில்லாமலேயே கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும்
அலைந்துக் கொண்டிருந்த வெளிச்சப் புள்ளிகள் தெரிந்திருக்கின்றன.

இன்றுவரை காணாமல் போன கலங்களைப் பற்றிய தெளிவான தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.

இல்லையில்லை அந்த இடத்தின் பூகோள அமைப்பு அப்படி. அங்கே இருக்கும் காந்தசக்தி காம்பஸ்களை செயலிழக்க வைக்கிறது என்கிறார்கள் வேறு சிலர்.


எது உண்மை என்று தொலைந்து போன கப்பலில் உள்ளவர்கள் அல்லது மறைந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாராவது வந்து சொன்னால்தான் உண்டு. சொல்ல்வார்களா?

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram