ஜெர்மனியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் - பகுதி 2
முதல் பகுதியில் ரைன் நதிக்கரையோரம் 40 -க்கும் மேற்பட்ட அரண்மனைகளும் கோட்டை களும் இருப்பதாக எழுதியிருந்தேன் அல்லவா! அவற்றைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நான் ஜெர்மனியில் பல வருடங்கள் இருந்ததன் காரணத்தினால் இன்னும் ஒரு சில பதிவுகள் ஜெர்மனியைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். உங்களின் ஆதரவைப் பொறுத்து அது அமையும். ஆதரவு என்றால் நீங்கள் " share " செய்வதைப் பொறுத்து என்று பொருள்.
பாரதி ராஜாவின் 'கண்களாய் கைது செய்' படத்தின் பல பகுதிகளில் இந்த கோட்டைகள் இடம் பெறும்.சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன் கூட ஒருமுறை தன் பேட்டியில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். " ஜெர்மனியின் ரைன் நதியில் படகில் சென்றபடி அந்த கோட்டைகளை நான் ரசித்த நாட்கள் மறக்க முடியாதவை" .
இளைய தளபதி விஜய் நடித்த 'மின்சார கண்ணா ' படத்தின் பல பகுதிகள் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் எடுத்தது தான். இப்போது ஜெர்மனியில் உள்ள அரண்மனைகள் உங்களுக்காக:
1.Herrenchiemsee அரண்மனை (Bayern மாநிலம்):
இந்த அரண்மனையில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா, மற்றும் ஜெய சித்ரா நடித்த ரத்த பாசம் திரைப்படம் எடுக்கப்பட்டது. " மான் குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே..." என்ற பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது.
அரண்மனையின் வெளிப்புறத் தோற்றம்
அரண்மனையின் முன்னால் உள்ள சிலையின் மேல் என் வாரிசு
அரண்மனையின் உள்ளே .............
அரண்மனையின் ஒரு பகுதி
படகில் போன பின் குதிரை வண்டியில் மலை மீது ஏறும் போது.............வண்டியில் இருப்பது......நீங்கள் நினைப்பது சரிதான்! அது என் மகன் தான்.
2. Füssen அருகில் உள்ள Hohenschwangau கோட்டை:
பவேரியா (baveriya) மாகாணத்தை ஆண்ட இரண்டாம் Maximilian மன்னரும் அவரின் மனைவியும் கோடை காலத்தை இந்த அரண்மனையில் தான் களிப்பார்கள்.வருத்திற்கு மூன்று லட்சம் பேர் வரை இந்த அரண்மனையைப் பார்க்க வருகிறார்கள்.
3. Eisenach -கில் உள்ள Wartburg கோட்டை:
நான்காம் லூட்விக் ( Ludwig) மன்னன் ஹங்கேரியைச் சார்ந்த எலிசபெத்தை தன்னை மணம் செய்து கொள்ள சொல்லி இங்கு தான் அடைத்து வைத்திருந்தார். பின்னாளில் எலிசபெத், புனிதையாக பிரகடனம் செய்யப்பட்டார்( அவரது புகைப்படம் கீழே).
புனித எலிசபெத்
4. Würzburg - கில் உள்ள Residenz கோட்டை:
Würzburg நாட்டு இளவரசர் bishops - புக்கு சொந்தமான அரண்மனை இது.
5. Cochem-ல் உள்ள Reichsburg கோட்டை :
மூன்றாம் கொன்ராட் (Konrad III) அரசரிடம் இருந்து 1688-ல் ஒன்பது வருட சண்டைக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிஸ் (King Louis XIV) கைப்பற்றிய அரண்மனை இது.
தினமும் www.jfivenews.in பார்க்கத் தவறாதீர்கள்.