ஆவியும் பேயும் உண்மையா?
தமிழ் சினிமா உலகம் தான் பேய் மற்றும் ஆவிகளின் பிடியில் உள்ளது என்றால் J5 News -மா? என்று கேட்டுவிடாதீர்கள்.
பேய் என்று, ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ள மட்டுமே இந்த பதிவு.மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
இணையத்தில் ஆவி மற்றும் பேய் பற்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருந்தும் இந்த பதிவில் போடாததற்கு காரணம், இதைப் படித்து இரவில் கனவு கண்டு, யாரும் J5 News - ஐ திட்ட கூடாது என்பதற்காகத் தான்.
சமீபத்தில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் நள்ளிரவு 2 மணி அளவில் ஒரு வயதான பெண்மணி நெஞ்சு வலியால் துடித்தார். அருகில் படுத்திருந்த பேரன் உடனடியாக தன் தந்தைக்கு கைபேசியில் தகவல் கொடுத்தான்( பேரன், பாட்டிக்கு துணையாக இந்த வீட்டில் படுத்திருந்தான்). அப்பா அம்மா அனைவரும் வந்தனர். வலியில் துடித்த அந்த பெண்மணி கடைசியாக கூறிய வார்த்தைகள்:
" அங்கே பாரு! என் உயிர் மேலே போகுது ....... என் உயிர் மேலே போகுது ....... "
என்று தன் கையை மேலே தூக்கிக்காட்டி கூறினார். கூறிய சிறிது நேரத்தில் அவரிடம் எந்த அசைவும் இல்லை. அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர் சொன்ன பதில்,
" ஏற்கனவே இவர் இறந்துவிட்டார்".
இந்த நிகழ்ச்சி, எங்கள் ஊரில் உள்ள நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அப்படியானால் ஒருவர் இறந்தபின் என்ன நடக்கிறது? அவர் ஆவி அல்லது உயிர் எங்கே போகிறது?
டாக்டர் என்று மேலே கூறியதும் ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது. சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க இந்த ஜோக்உதவும் என்று நினைக்கிறேன்.
இனி ஜோக்:
அடிபட்டவரை, மருத்துவமனைக்கு உறவினர் தூக்கி வருகிறார். டாக்டர் செக்கப் செய்து பார்த்து விட்டு,
டாக்டர்: ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்!
உறவினர் : டாக்டர்! அடிபட்டே 10 நிமிடம் தான் ஆகிறது.....
இதை கேட்ட டாக்டரின் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!
பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக்குப் பல ஆவிகள் உதவி செய்தது என்று நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.இது உண்மையா! என்று எடிசனின் ஆவிதான் வந்து சொல்லவேண்டும். அவர் ஆவி யார் கனவிலாவது இன்று வந்து சொன்னால் "J5 News" -க்கு உடனே தெரிய படுத்தவும்.
கருட புராணத்தில், ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகைகள் மட்டுமே பூமிக்கு வந்து செல்லமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. (எப்போதோ படித்த ஞாபகம்!)ஒரு நாள் என்பது அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது என்பது ஒரு மணி நேரம்.பழைய அரச திரைப்படங்களில் ஒன்றாம் சாமம், இரண்டாம் சாமம் என்பார்களே! அது எப்படி எனில், 7.5 நாழிகைகள் ஒரு ஜாமம்.அப்படியானால் இரண்டாம் சாமம் எப்பொழுது வரும் என்று கணக்கிட்டு கொள்ளுங்களேன்!
Dr.இயான் ஸ்டீவன்சனை பற்றி தெரியாதவர்கள் உண்டா? மறுபிறவி பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் இன்றும் விவாதத்திற்குள்ளாகிறதே!
மனநல மருத்துவரான இவர் கனடாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். அமெரிக்காவில் உள்ள "விர்ஜீனியா ஸ்கூல் ஆப் மெடிசின்" என்ற பல்கலை கழகத்தில் 50 வருடங்களாக வேலை பார்த்தவர். ஏறக்குறைய 40 வருடங்களாக மறுபிறப்பை பற்றி ஆராய்ச்சி செய்தவர். அவரின் மறுபிறப்பு பற்றிய இரண்டு புத்தகங்கள் உலக புகழ் பெற்றவை.
1. Twenty Cases Suggestive of Reincarnation (1966)
2. European Cases of the Reincarnation Type (2003)
2007-ல் இவர் இறந்துவிட்டார்.இறக்கும் முன்னர்,
தன் மறுபிறப்பு பற்றிய அனைத்து இரகசியங்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அதன் சாவியை ஒரு இடத்தில் ஒளித்து வைத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், நான் மீண்டும் பிறந்து வந்து இந்த சாவியை எடுத்து இந்த பெட்டியை திறந்து மறுபிறப்பு பற்றிய என் ஆராய்ச்சியை உலகுக்கு நிருபிப்பேன் என்றார். இவர் இறந்து ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை 'மறுபிறப்பு' உண்டு என்பதை நிருபிக்க மறந்து விட்டாரோ!!
உலகில் உள்ள ஆயிரக்கணக்காண மதங்களில், பலவற்றில் மறுஜென்மம் பற்றிய நம்பிக்கை நிலவுகிறது.
கணவன் மனைவி சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும் போது, மனைவி கணவனிடம், நீங்கதான் எனக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் புருஷனாக வரவேண்டும் என கூறுகிறாள் என்று வைத்துகொள்வோம்!. கணவனின் மனநிலை என்னவாக இருக்கும்? இதை படிக்கும் கணவன்மார்கள் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள்!
இந்த ஏழேழு ஜென்மம் என்பது எதெல்லாம் தெரியுமா?
7 * 7 = 49 ஜென்மங்கள்.
முதலில் ஏழு ஜென்மங்கள் எவை என்று பார்ப்போம். அதன் பின் ஏழேழு ஜென்மங்கள் என்ன என்று உங்களுக்கே தெரிய வரும்.
1. மனித பிறவி
2.தேவர்களில் ஒரு பிறப்பு
3.விலங்குகளில் ஒரு பிறப்பு
4.ஊர்வனவற்றில் ஒரு பிறப்பு
5.பறப்பனவற்றில் ஒரு பிறப்பு
6.நீந்துவனவ்றில் ஒரு பிறப்பு
7.தாவரங்களில் ஒரு பிறப்பு
இது தான் ஏழு ஜன்ம பிறப்பு. ஏழேழு ஜென்மங்கள் என்பது இந்த ஏழு பிறவியையும் ஏழு முறை எடுப்பது!

Ruth Montgomery என்ற பெண்மணி "A world beyand" என்ற புத்தகத்தை 1971-ல் இறந்த ஆவி மனிதர் ஆர்தர் ஃபோர்ட் மூலம் எழுதினார் என்று படித்த ஞாபகம். ஆவிகள் கதையும் சொல்லும் போல!
கவியரசு கண்ணதாசன் ஆவிகள் பற்றி கூறும் பொது,
”1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன”
இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.ஒருமுறை, ரேமாண்ட் கேஸ் என்பவர்,ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ரேமாண்ட் கேஸின் நண்பர் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ரேமாண்ட் கேஸின் நண்பர் ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அப்படியானால் ஆவிகளால் எதிர்காலத்தில் நடக்க போகிறவற்றை தெரிந்து கொள்ள முடியுமா?
கடைசியாக,
பயந்தால் பத்தடி தூரம் கூட சுமை தான்!
பாய்ந்தால் இமயமலையும் கடுகு தான்!!
இதை மட்டும் மறந்து விடாதீர்கள்!
"எண்ணம் போல் வாழ்வு" என்று நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்,
நல்லதையே நினைப்போம்! நல்லதே நடக்கும்!!
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.

பின் குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram