600 நாய்களின் தற்கொலை முயற்சி!!
பிரிட்டனில் (UK) உள்ள ஸ்காட்லாந்தின், டன்பார்ட்னஷரில் உள்ள ஹான்ட்டடு சூசைட் பிரிட்ஜ் ((பேய் உலாவும் தற்கொலை பாலம் - பாலத்தின் பெயரே பயமுறுத்துகிறதே!) -ல் இருந்து, 600 நாய்கள், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற செய்தி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலத்தில் இருந்து, இந்த நாய்கள் மொத்தமாக குதித்ததாகவும் அதில் 50 நாய்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.(ஒரே சமயத்தில் 600 நாய்கள் அங்கு எப்படி வந்தது என்றுதான் தெரியவில்லை!) மீட்கப்பட்ட நாய்களை, பரிசோதித்த கால்நடை டாக்டர்கள், நாய்களுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும் நல்ல உடல்நலம் மற்றும் சாதாரண மனநிலையில் இருந்தன என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இது தான் அந்த பாலம்
அதில் எச்சரிக்கை செய்தியும் உள்ளது. படித்து பாருங்கள்
நாய்கள் அனைத்தும் ஒரே இனத்தை சேர்ந்தவை. பேய், பிசாசுகளால், இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக, பொதுமக்கள் நம்பத் துவங்கி உள்ளனர்.ஏனெறால் சம்பவம் நடந்த பகுதியில், 19ம் நுாற்றாண்டை சேர்ந்த, ஓவர்டன் மாளிகை இருந்ததாகவும்; அதில் வசித்த பெண்ணின் ஆவி அப்பகுதியில் உலவுவதாகவும்; நாய்களின் தற்கொலை முயற்சிக்கு அந்த ஆவியே காரணம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பின் குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team


No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram