Friday, June 26, 2015

600 நாய்களின் தற்கொலை முயற்சி!!

600 நாய்களின் தற்கொலை முயற்சி!!



பிரிட்டனில் (UK) உள்ள  ஸ்காட்லாந்தின், டன்பார்ட்னஷரில் உள்ள ஹான்ட்டடு சூசைட் பிரிட்ஜ் ((பேய் உலாவும் தற்கொலை பாலம் - பாலத்தின் பெயரே பயமுறுத்துகிறதே!) -ல்   இருந்து,   600 நாய்கள்,  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற செய்தி அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பாலத்தில் இருந்து, இந்த நாய்கள் மொத்தமாக குதித்ததாகவும் அதில்  50 நாய்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.(ஒரே சமயத்தில் 600 நாய்கள் அங்கு எப்படி வந்தது என்றுதான் தெரியவில்லை!) மீட்கப்பட்ட நாய்களை, பரிசோதித்த கால்நடை  டாக்டர்கள், நாய்களுக்கு எந்தவித நோயும் இல்லை  என்றும்  நல்ல உடல்நலம் மற்றும் சாதாரண மனநிலையில் இருந்தன  என்றும் தெரிவித்துள்ளார்கள். 



                                      இது தான் அந்த பாலம் 
அதில் எச்சரிக்கை செய்தியும் உள்ளது. படித்து பாருங்கள் 

நாய்கள் அனைத்தும்  ஒரே இனத்தை சேர்ந்தவை.  பேய், பிசாசுகளால், இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக, பொதுமக்கள் நம்பத் துவங்கி உள்ளனர்.ஏனெறால்  சம்பவம் நடந்த பகுதியில், 19ம் நுாற்றாண்டை சேர்ந்த, ஓவர்டன் மாளிகை இருந்ததாகவும்; அதில் வசித்த பெண்ணின் ஆவி அப்பகுதியில் உலவுவதாகவும்; நாய்களின் தற்கொலை முயற்சிக்கு அந்த ஆவியே காரணம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

Thursday, June 25, 2015

கிசுகிசு கிசுகிசு

கிசுகிசு கிசுகிசு 

கண்ணம்மாவும் பொன்னம்மாவும் சிறு வயது முதலே தோழிகள். இருவருக்கும் திருமணமும் உள்ளூரிலேயே நடந்ததால் இந்த 50 வயதிலும் அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. J5 News -க்காக அவர்கள் தந்த  சில கிசுகிசு செய்திகள் அவர்கள் பேசும் நடையிலேயே::

"அடியே பொன்னம்மா! கேட்டியாடி சேதி!" 

"சொல்லுங்கக்கா!"

"வடக்கன்குளம் பக்கத்தில் உள்ள அந்த ஊருல ஜூலை மாசம் 2-ம் தேதிலருந்து 11-ம் தேதி வரைக்கும்  திருவிழா நடக்க போவுதாம்.கேட்டவரமெல்லாம் கெடைக்குமாமே அந்த கோயிலுக்கு போனா! நா போலாமுன்னு இருக்கேன். நீயும் வாரியா?"

"நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும். நா கூட கேள்வி பட்டிருக்கேங்கா அந்த ஊரைப்பத்தி! புதும வேப்பமரம் கூட உண்டாமே!அத ஒரு தடவையாவது பாத்துபுடனுமுன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இந்த வருஷம் அதுக்கு சந்தர்ப்பம் வந்திடிச்சி!" - இது பொன்னம்மா.

"அந்த ஊர்ல இருக்கிற பங்கு தந்தை கூட, அடுத்தவங்கள கை காட்டி வேலை  வாங்காம அவரே களத்தில இறங்கி கவுரவம் பாக்காம எல்லா வேலைகளையும் செய்வாராம்" - கண்ணம்மா 

"அங்க தங்க கொடிமரம் இருக்கிறதா கேள்வி பட்டேனே உண்மையா அக்கா?"

"இப்போதைக்கு கல் கொடிமரத்துக்கு தங்க கலர் அடிச்சிருக்காங்க. ஆனா கூடிய சீக்கிரமே நீ சொன்னது நடந்தாலும் ஆச்சரிய படறதுக்கு இல்ல! ஏன்னா, அந்த ஊர்ல உள்ளவங்க எல்லாருமே கோயிலுக்கு அள்ளி கொடுக்கிறதுல ஏழு வள்ளல்களையுமே மிஞசியவங்க தான்.அது மட்டுமில்ல! அந்த   பங்கு தந்தையோட உழைப்பும் இராசியும் அவங்க கூடவே இருக்கே!ஏற்கெனவே அந்த ஆலய வளாகத்தில இரண்டு கெபிகளையும் 14 ஸ்தலங்களையும் கட்டியிருக்காங்க. யார் கண்டது! அடுத்த புராஜெக்ட் தங்க கொடிமரமாக  கூட இருக்கலாம்! நடந்தா சந்தோசம் தானே ! "- கண்ணம்மா.

கண்ணம்மாவே மேலும் தொடர்ந்து, "

அந்த ஊரு இளைஞர்களப்  பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

கோயிலுக்கு போகணுமுன்னு சொன்னாலே பைக்க எடுத்துகிட்டு வெளிய போற இளைஞர்களுக்கு மத்தியில, அந்த ஊரு இளைஞர்கள்   தினமும் நல்ல காரியம் பண்றாங்க. அதாவது, மாலையில கோயிலில குடும்ப ஜெபமாலை முடிஞ்சதும்  எல்லா  இளைஞர்க ளும் ஒண்ணு  சேர்ந்தது கோயிலுக்குள்ள முழங்கால் படியிட்டு  ஜெபம் பண்ணுவாங்களாம். அது மட்டுமில்ல! கோயில் சம்பத்தமா எந்த வேலைன்னாலும் பங்கு தந்தை கூட  கை கோர்த்து உடனே செய்து முடிச்சிருவான்களாம்".

"அக்கா! நீங்க சொன்னத கேட்க கேட்க, எனக்கு அந்த ஊர் திருநாளைக்கு போகணும் போல ஆசையா இருக்கு! கூட்டிட்டு போங்களேன் "- பொன்னம்மா 

"கண்ணடிப்பா போவோம். போயி புனித ஆசீர்வாதப்பர் அருளையும் வாங்கிகிட்டு வருவோம்.அவர் தான் கேட்ட வரத்தையெல்லாம் கொடுப்பவர் ஆயிற்றே! ஆமா உன்கிட்ட ஒண்ணு  கேக்கனுமுன்னு நெனச்சிகிட்டே இருந்தேன்!

உன் மக அருக்காணிக்கு மாப்பிள்ள பாத்துக்கிட்டு இருந்தியே! அந்த கோவில் திருவிழாவுக்கு போவோம். அங்கெ ஏதாவது மாப்பிள்ளை அமைஞ சாலும் அமையும்! என்ன சொல்ற? " - கண்ணம்மா 

"அவ அமெரிக்கா மாப்பிள்ள தான் வேணும்முன்னு ஒத்த கால்ல நிக்கிறா! நா என்ன பண்ண! பெரிய படிப்பு வேற படிக்க வச்சி புட்டேன். அவ கேக்கிற மாதிரி மாப்பிள்ளை பாத்து தானே ஆகணும்!" -பொன்னம்மா 

"அப்படி என்ன பெரிய படிப்பு படிச்சிருக்கா  உன் பொண்ணு அருக்காணி?"  

" அஞ்சாங்  கிளாஸ்"


பின் குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.


2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team





Wednesday, June 24, 2015

குடியாவுக்கு ஏன் அந்த நிலை? ஷாயிஷ்தியா என்ன ஆனார்? - 1

குடியாவுக்கு ஏன் அந்த நிலை? ஷாயிஷ்தியா என்ன ஆனார்?

குடியாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. 2004-ம் ஆண்டின் அனைத்து வட இந்திய டிவி- க்களும்( ஏன்! தென்னிந்திய  டிவி- க்களும் தான்!)தங்களின் TRP ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ள இவரின் நிலையைக்  கண்டு பரிதாபப்படுவதுபோல் நடித்து, ஒவ்வொரு நாளும் இவரின் வாழ்க்கை நிலையை ஒளி பரப்பிக்கொண்டிருந்தனர். 

இப்போது ஞாபகம் வருகிறதா?


குடியா 

நம் சமூகத்தில் ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் என்பது சகஜம். ஆனால், ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன்மார்கள் என்றால்?உடனே அந்த பெண்ணை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். விதி அவளின் வாழ்க்கையில் விளையாடி , ஆணாதிக்கத்தின் வாயிலாக அந்த பெண்ணை அப்படி அலைக்கழித்தது.


1999-ல் உத்தரபிரதேசத்தில் உள்ள ( டில்லியிலிருந்து ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவில்)ஆரிப் -புக்கு மனைவியானார் குடியா. திருமணமான 10 நாட்களிலேயே கார்கில் போருக்காக இந்திய மிலிட்டரியில் வேலை பார்த்த ஆரிப் கிளம்பினார். கார்கில் போர் முடிந்தும் ஆரிப் திரும்பி வராததினால், இந்திய ராணுவத்திடமிருந்தும் சரியான பதில் வராததினால், ஆரிப் இறந்ததாக கருதி, குடியாவை அவரது குடும்பத்தினர் தூரத்து உறவினரான தவ்பீக் -குக்கு மணமுடித்தனர். 


                                                                 ஆரிப்

எட்டு மாத குழந்தை குடியாவின் வயிற்றில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக ஆரிப் ஊர் திரும்பினார்.என்ன! சினிமா படம் போல் இருக்கிறதா?ஆனால் இது தான் நடந்தது.பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆரிப் இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். 

பஞ்சாயத்து நடந்தது. முடிவில் குடியா முதல் கணவரோடு செல்லவேண்டும் என்று முடிவானது. குடியாவால் ஏதும் சொல்ல முடியவில்லை. இது தான் ஆணாதிக்க சமுதாயம் ஆயிற்றே!குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்வதாக முதல் கணவர் ஆரிப் உறுதி அளித்தார்.குடியா, முதல் கணவர் வீட்டிற்கு  அழைத்து வரப்பட்டார்.

குடியாவால் அவரது குடும்பத்தாரிடமோ அல்லது தன வயிற்றில் வளரும் சிசுவின் தந்தையான இரண்டாவது கணவனிடமோ எதுவும் பேச முடியவில்லை.என்ன ஒரு இக்கட்டான நிலை இந்த பெண்ணிற்கு!

தலைப்பில் இன்னொரு பெண் பெயர் இருக்கிறதே! அவர் யார் என்று யோசிக்கிறீர்களா? 

குடியா இப்போது எப்படி இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

குடியாவின் கணவன்மார் எங்கே? 

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அடுத்த பதிவில்!

நிறைய share பண்ணுங்க!


பின் குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team





Tuesday, June 23, 2015

இந்தியாவின் பழங்கால நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும்

இந்தியாவின் பழங்கால நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் 

சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோதும், வட இந்தியாவை மொகலாயர்கள் ஆண்டபோதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போதும் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ஒரு சில நாணயங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக:












பின் குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

Monday, June 22, 2015

ஜோதிடவியல்:10ல் ராகு இருந்தால்....

ஜோதிடவியல்:10ல் ராகு இருந்தால்....


ஜோதிடவியல், இந்தியாவின் பல பல்கலை கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக, தமிழ் நாட்டில் மதுரை காமராஜர் பல்கலை கழகம், அன்னை தெரசா பல்கலை கழகம் மற்றும் கேரளா பல்கலை கழகம் என்று பல பல்கலை கழகங்களில் பாடமாக உள்ளது.


ஜோதிடவியலும் வானவியலும் ஒன்றை ஒன்று பின்னி பிணைந்து இருப்பதாகவே தோன்றுகிறது.ஆரியபட்டரைப் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் நீங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த மாநிலம், இடம்( புகைப்படம் பார்க்கவும்) ஆகியவற்றை தேர்வு செய்தால், உங்கள் ஜாதகம் தமிழில் கிடைக்கும்.நீங்கள் பிறந்த இடம்  அதில் இல்லை என்றால், பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும்.

http://astrology.tamilcube.com/tamil-astrology/tamil-horoscope.aspx

உதாரணமாக இங்கு ஒரு ஜாதகம் கொடுத்துள்ளேன். ( புகைப்படம் பார்க்கவும்). இந்த ஜாதகத்தில் லக்னம் என்று எழுதிருக்கும் கட்டம் தான் முதல் வீடு,  இந்த புகைப்படத்தில் மிதுனம் ஒன்றாவது வீடு, கடகம் இரண்டாவது வீடு.....பத்தாவது வீடு மீனம். இதில் சந்திரன் உள்ளது. (படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்)

இந்த 10-வது வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். 

 சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும்  பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!

பல தொழில் செய்யும் யோகம் இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றுவான். ராகு தசை நடக்கும்  போது இவரை மிஞ்ச யாரும் கிடையாது. கமிஷன் தொழில் இவர்களுக்கு கை வந்த கலை.

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். சரியா இல்லையா என்று உங்கள் ஜாதகத்தை வைத்து தெருந்து கொள்ளுங்கள்.

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.
 
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team








Friday, June 19, 2015

வாசகர் பதிவு : திகில் கதை - கையளவு இரத்த மண்

                          திகில் கதை :
                                                     
கையளவு இரத்த மண்

எழுதியவர்: திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள்.இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://jfivenews.blogspot.in/2015/06/50000.html

கோடைக்கால சித்திரை மாசத்து அமாவாசை இருட்டு பேய் பிசாசுகள் உலா வரும் கும்மிருட்டு நேரம் ....காட்டில் மரங்களும் புதர்களும் ஏதோ மாய அரக்கர்கள் ...குட்டி பிசாசுகள் தோற்றத்தில்...........“கிர்ரக்” “கிரக்” “கிர்ராக்” ...ஊயன்க் ....கொயன்க்...சொயன்க்க்...டர்ர்ர்ர்ர்ர்ர்...கிராக்க்க் ...என்ற பல வித வினோத ஒலி பரப்பு சிறப்பு நேரம் ...நள்ளிரவு ..12 - ஐ நெருங்கும் பொதுவான ஒருவித அமானுஷ்ய வேளை .....



அந்தக் காட்டை ஊடறுத்துக்கிடந்த இருட்டிலும் பழகிய கண்களுக்கு ‘பளிச்’ சென தெரியும் ஒற்றையடி பாதையில் .....அது என்ன ....ஒரு போய்க்கொண்டிருந்த கரிய உருவம் சட்டென நின்றது...காதால் எதையோ உற்றுக்கேட்பது போல் ஒரு பாவனை ....’ சட்’ டென நிசப்தம் கலைக்கும் அச்சில் கொண்டு வர முடியாத அவலமான ஒரு ஊளை... உறுமல் !!!!! ..’தடால்’ என ஏதோ பலமாய் விழும் சத்தம்...காய்ந்த பனையோலை ஒன்று சரேலென ஓசை எழுப்பி தரையில் மோதி விழுந்தது ....
சற்று தயங்கிய கரிய உருவம் நடையை மெதுவாக்கி .... தொடர்ந்தது...சட்டென மீண்டும் நின்றது...எதிரே கன்னங்கரேலென இருட்டு பூசிய .... கனத்த பருத்த பெரிய உருவம் ...கரிய உருவம் சட்டென பின் வாங்கி பெரிது பெரிதாக அவசர மூச்சு விட்டது
“ம்மாஹ்” எனும் ‘ஹூம்’ காரம் ...குலை நடுங்க வைக்கும் அலறல் சத்தம் ....இப்போது காட்சி தெளிவானது.... மேய்ச்சல் முடித்து வழி தப்பிய ஒரு பெரிய கரிய ..... எருமை மாடு ....ஆசுவாசம் பெற்ற உருவம் குனிந்து ஒரு கல் எடுத்து எறிந்து மாட்டை விரட்டித் திரும்பியது ...இதயம் எகிறியது ......அட்ரீனலின் சுரந்து ...ஒரு மாதிரியான கசமுசாவெனும் .... அவஸ்தை ........திரும்பினால் !!!!!!!!!!!
அருகில் இருந்த குத்துச் செடி புதருக்குள் .... இரண்டு தீக்கங்குகள் வெட்டி மின்னின !!!!!!...ஏதோ மிருகம் ....எனப் புரிய சில கணங்கள் ஆன அந்த இடைவெளியில் ...”பட பட” .... வேர்த்துக்கொட்டியது........இதயமோ ‘தடக் தடக்’ என ரயில் எஞ்சின் அலறலோடு துடித்து பயம் காட்டியது....
நடையின் வேகம் அதிகமானது....திடீரென கதிகலங்க வைக்கும் விசித்திர !!!!!! காற்றொலி ...’ ஊ ஊ உய்’ என இரத்தம் உறைந்து விடும் போலான..... அதி வேக இரைச்சல்....கதிகலங்கும் அனுபவம் ....


தொலைவில் அந்த உடை மரம் இருந்தது ... இரவின் அந்தகாரத்தில் ஒரு மிகப் பெரிய குடையை மாய அரக்கன் ஒருவன் பூமியின் உள் புதைந்து நின்று கொண்டு .....கீழே இருந்து பிடித்துக்கொண்ட மாதிரி...மாயத் .தோற்றம் .......................
கரிய உருவம்..... கால்கள் பின்னி தடுமாறினாலும் அடி மேல் அடி வைத்து முன்னேறியது...திடீரென அதன் கால்களுக்கிடையே ஏதோ ஜந்து ..... நுழைந்து வழுக்கி .... புகுந்து ஓடியது ... தடுமாறி நிலை குலைந்த உருவம் தன்னையறியாமல் எழுத்தில் கொண்டு வர இயலா ஒரு வித கோழைச் சத்தம் எழுப்பி குழறியது....
சுதாரித்து எழுந்து மீண்டும் மரத்தை நோக்கி சென்றது .....பளீரென மின்னிய மின்னல் வெளிச்சத்தில் காடு பொம்மலாட்டம் காட்டியது ...... திகில் ஊட்டியது ...அதி பயங்கரம் ...மொத்த உடம்பும் குலுங்கி அதிர்ந்தது ....அந்தக்கணத்தில் ஒரு பெரிய இடிச் சத்தம்...பூமியே குலுங்கி ...மரங்கள் பேயாட்டம் ஆடின....
கரிய உருவம் பலம் எல்லாம் கூட்டி மரத்தடி நோக்கி ஓடியது ...ஒரு குறிப்பிட்ட இடம் ....மண்டியிட்டு குனிந்து வலக்கை நீட்டி தரை மண்ணை கூட்டி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிய கணத்தில் ...மயிர்க்கூச்செறியும் நூதன அனுபவம்... ரோமக்கால்கள் விலுக்கென எழுந்து உயர்ந்து குத்திட்டன !!!!! மூச்சு பெரிது பெரிதாய் !!!!!!!! நெஞ்சுக்கூடு தெறித்து விழும் அவஸ்தை ......
“விலுக்”என எழுந்த உருவம் ஓட்டமாய் ஓடி தான் வந்த ஒற்றையடிப்பாதையில் உருண்டு விழுந்தடித்து மீண்டும் ஓடி விழுந்து ...விழுந்து ஓடி....
அதோ ஒரு முக்கால் வட்ட வளைவு அதை தாண்டி விட்டால் ஊர் எல்லை ....முக்கால் வட்டம் நெருங்கும் சமயம் மீண்டும் ஒரு மின்னல் ...வெட்டிய வெளிச்சத்தில் வலப்புறம் புதரில்............ ஏதோ புகுந்தது போன்ற அசைவு ...நாய்களின் குரைப்பு ....நிசப்தம் கிழித்து நெஞ்சு கூட்டில் வாத்தியம் லயம் தப்பி அபஸ்வரமாய் .....தாறுமாறாய் .....முழங்கிற்று..... நெஞ்சுக் கூட்டில் ஒரே நேரத்தில் பல பறவைகளை அடைத்து உண்டான திகிலான சப்தங்கள் .......
சட்டென தோன்றியது ....ஒரு பெரிய தீப ஒளி!!!!!!!! முகத்தைக் கருக்கும் அதிக வெப்பம்...கரிய உருவம் தொப்பென குப்புற தரையில் விழுந்து சத்தமாய் பிதற்றியது....சுருண்டு விழும் முன்னர் யாரோ இருவர் தன்னை தாங்கிப் பிடிக்கும் அசைவை உணர முடிந்தது....அதோடு ஒரு அந்தகார இருளுக்குக்குள் சுமந்து கொண்டு போகப்பட்டது....

-தொடரும் 

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

 
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

Wednesday, June 17, 2015

ஆவியும் பேயும் உண்மையா?

ஆவியும் பேயும் உண்மையா?

தமிழ் சினிமா உலகம் தான் பேய் மற்றும் ஆவிகளின் பிடியில் உள்ளது என்றால் J5 News -மா? என்று கேட்டுவிடாதீர்கள்.


பேய் என்று, ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ள மட்டுமே இந்த பதிவு.மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக  அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.


 இணையத்தில் ஆவி மற்றும் பேய் பற்றிய புகைப்படங்களும் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் இருந்தும்  இந்த பதிவில் போடாததற்கு காரணம், இதைப் படித்து இரவில் கனவு கண்டு, யாரும் J5 News - ஐ திட்ட கூடாது என்பதற்காகத் தான்.


சமீபத்தில் எங்கள்  ஊருக்கு அருகில் உள்ள ஊரில் நள்ளிரவு 2 மணி அளவில் ஒரு வயதான பெண்மணி நெஞ்சு வலியால் துடித்தார். அருகில் படுத்திருந்த பேரன் உடனடியாக தன்  தந்தைக்கு கைபேசியில் தகவல் கொடுத்தான்( பேரன், பாட்டிக்கு துணையாக இந்த வீட்டில் படுத்திருந்தான்). அப்பா அம்மா அனைவரும் வந்தனர். வலியில் துடித்த அந்த பெண்மணி கடைசியாக கூறிய வார்த்தைகள்:


" அங்கே பாரு! என் உயிர் மேலே போகுது ....... என் உயிர் மேலே போகுது ....... "


என்று தன்  கையை மேலே தூக்கிக்காட்டி கூறினார். கூறிய சிறிது நேரத்தில் அவரிடம் எந்த அசைவும் இல்லை. அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர் சொன்ன பதில்,


" ஏற்கனவே இவர் இறந்துவிட்டார்".


இந்த நிகழ்ச்சி, எங்கள்  ஊரில் உள்ள நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படியானால் ஒருவர் இறந்தபின் என்ன நடக்கிறது? அவர் ஆவி அல்லது உயிர் எங்கே போகிறது?


டாக்டர் என்று மேலே கூறியதும் ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது. சற்று ரிலாக்ஸ் ஆக இருக்க இந்த ஜோக்உதவும் என்று நினைக்கிறேன். 

இனி ஜோக்:

அடிபட்டவரை, மருத்துவமனைக்கு உறவினர் தூக்கி வருகிறார். டாக்டர் செக்கப் செய்து பார்த்து விட்டு, 

டாக்டர்: ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு  கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்!

உறவினர் : டாக்டர்! அடிபட்டே 10 நிமிடம் தான் ஆகிறது.....


இதை கேட்ட டாக்டரின் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!



பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக்குப் பல ஆவிகள் உதவி செய்தது என்று நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.இது உண்மையா!  என்று எடிசனின் ஆவிதான் வந்து சொல்லவேண்டும். அவர் ஆவி யார் கனவிலாவது இன்று வந்து சொன்னால்  "J5 News" -க்கு உடனே தெரிய படுத்தவும்.

கருட புராணத்தில், ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகைகள் மட்டுமே பூமிக்கு வந்து செல்லமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. (எப்போதோ படித்த ஞாபகம்!)ஒரு நாள் என்பது அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது என்பது  ஒரு மணி நேரம்.பழைய அரச திரைப்படங்களில் ஒன்றாம் சாமம், இரண்டாம் சாமம் என்பார்களே! அது எப்படி எனில், 7.5 நாழிகைகள் ஒரு ஜாமம்.அப்படியானால் இரண்டாம் சாமம் எப்பொழுது வரும் என்று கணக்கிட்டு கொள்ளுங்களேன்!


Dr.இயான் ஸ்டீவன்சனை பற்றி தெரியாதவர்கள் உண்டா? மறுபிறவி பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் இன்றும் விவாதத்திற்குள்ளாகிறதே!


மனநல மருத்துவரான இவர் கனடாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். அமெரிக்காவில் உள்ள "விர்ஜீனியா ஸ்கூல் ஆப் மெடிசின்" என்ற பல்கலை கழகத்தில் 50 வருடங்களாக வேலை பார்த்தவர். ஏறக்குறைய 40 வருடங்களாக மறுபிறப்பை பற்றி ஆராய்ச்சி செய்தவர். அவரின் மறுபிறப்பு பற்றிய இரண்டு புத்தகங்கள் உலக புகழ் பெற்றவை.


1. Twenty Cases Suggestive of Reincarnation (1966)

2. European Cases of the Reincarnation Type (2003)



2007-ல் இவர் இறந்துவிட்டார்.இறக்கும் முன்னர்,
தன் மறுபிறப்பு பற்றிய அனைத்து இரகசியங்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அதன் சாவியை ஒரு இடத்தில் ஒளித்து வைத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், நான் மீண்டும் பிறந்து வந்து இந்த சாவியை எடுத்து இந்த பெட்டியை திறந்து மறுபிறப்பு பற்றிய என் ஆராய்ச்சியை உலகுக்கு நிருபிப்பேன் என்றார். இவர் இறந்து ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருவேளை 'மறுபிறப்பு' உண்டு என்பதை நிருபிக்க மறந்து விட்டாரோ!!

உலகில் உள்ள ஆயிரக்கணக்காண  மதங்களில், பலவற்றில் மறுஜென்மம் பற்றிய நம்பிக்கை நிலவுகிறது.  

கணவன் மனைவி சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும்  போது, மனைவி கணவனிடம், நீங்கதான் எனக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் புருஷனாக வரவேண்டும் என  கூறுகிறாள் என்று வைத்துகொள்வோம்!. கணவனின்  மனநிலை  என்னவாக இருக்கும்? இதை படிக்கும் கணவன்மார்கள் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள்!


இந்த ஏழேழு ஜென்மம் என்பது எதெல்லாம் தெரியுமா?


7 * 7  = 49 ஜென்மங்கள்.

முதலில் ஏழு ஜென்மங்கள் எவை என்று பார்ப்போம். அதன் பின் ஏழேழு  ஜென்மங்கள் என்ன என்று உங்களுக்கே தெரிய வரும்.

1. மனித பிறவி
2.தேவர்களில் ஒரு பிறப்பு
3.விலங்குகளில் ஒரு  பிறப்பு
4.ஊர்வனவற்றில் ஒரு பிறப்பு
5.பறப்பனவற்றில் ஒரு பிறப்பு
6.நீந்துவனவ்றில் ஒரு பிறப்பு
7.தாவரங்களில் ஒரு பிறப்பு

இது தான் ஏழு ஜன்ம பிறப்பு. ஏழேழு  ஜென்மங்கள்  என்பது இந்த ஏழு பிறவியையும் ஏழு முறை எடுப்பது!

Ruth Montgomery என்ற பெண்மணி  "A world beyand"  என்ற புத்தகத்தை 1971-ல் இறந்த ஆவி மனிதர் ஆர்தர் ஃபோர்ட் மூலம் எழுதினார்  என்று படித்த ஞாபகம். ஆவிகள் கதையும் சொல்லும் போல!

கவியரசு கண்ணதாசன் ஆவிகள் பற்றி கூறும் பொது,

”1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன”

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.ஒருமுறை, ரேமாண்ட் கேஸ் என்பவர்,ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ரேமாண்ட் கேஸின் நண்பர் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ரேமாண்ட் கேஸின் நண்பர் ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அப்படியானால் ஆவிகளால் எதிர்காலத்தில் நடக்க போகிறவற்றை தெரிந்து கொள்ள முடியுமா?

கடைசியாக,

பயந்தால் பத்தடி தூரம் கூட சுமை தான்!
பாய்ந்தால் இமயமலையும் கடுகு தான்!!

இதை மட்டும் மறந்து விடாதீர்கள்!

"எண்ணம் போல் வாழ்வு" என்று நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்,

நல்லதையே நினைப்போம்!                      நல்லதே நடக்கும்!!

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

 

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team








Tuesday, June 16, 2015

வாசகர் பதிவு : மாணவ மாணவியர் உதவி தொகை ரூபாய் 50,000 ( ஐம்பதாயிரம் )

வாசகர் பதிவு : மாணவ மாணவியர் உதவி தொகை ரூபாய் 50,000 ( ஐம்பதாயிரம் )



திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள் ஒரு முக்கியமான தகவலை J5 News -க்கு அனுப்பியிருக்கிறார். மிகவும் உபயோகமான இந்த தகவலை மறக்காமல் share செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் விளக்கேற்றி  வைத்த பெருமை உங்களைச் சாரும்.

திரு அலங்கார S பெனடிக்ட் அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கடைசியில்.






வாசகர் செய்தி:

 தாய், தந்தைக்கு விபத்தில் அடிபட்டு,நிரந்ததர ஊனமாகி இருந்தால்  அல்லது தாய், தந்தை விபத்தில் தவறியிருந்தால், அவர்களின் படிக்கும் குழந்தைகள் ரூபாய் 50,000 பெறுவதற்கு உதவியாக இந்த விண்ணப்பம்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களின் கிராம அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். 

விதியின் வசத்தால் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர் தங்கள் படிப்பை தொடர இந்த பணம் உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தோடு அனுப்பியிருக்கும் வாசகரின் இந்த செய்தியை பலருக்கு பகிர்ந்து நாமும் உதவி செய்த சந்தோசம் அடைவோமே!.



விண்ணப்பம்


தாய் / தந்தை விபத்தில் இழந்த / தாய் / தந்தை விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்த மாணவ மாணவியர் உதவி தொகை ரூபாய் 50 ஆயிரம்  பெற விண்ணப்பபடிவம்
1.
மாணவ / மாணவியர் பெயர்
:

2.
தகப்பனார் பெயர்
:

3.
தாயார் பெயர்
:

4.
நிரந்தர முகவரி



:

5.
மாணவ / மாணவி பயிலும் பள்ளி முகவரி



:

6.
பயிலும் வகுப்பு
:

7.
தலைமை ஆசிரியரின் சான்று இணைக்கப்பட்டுள்ளதா
:

8.
தாய் / தந்தை விபத்தில் இறந்த நாள் / மாதம் /வருடம்
:

9.
விபத்து நடந்த இடம்
:

10.
காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளதா
:

11.
இறப்பு சான்று இணைக்கப்பட்டுள்ளதா
:

12.
வாரிசு சான்று இணைக்கப்பட்டுள்ளதா
:

13.
வட்டாட்சியரின் ஒருங்கிணைந்த சான்று
:

14.
குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) நகல் இணைக்கப்பட்டுள்ளதா
:

15.
விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்தவர் தாய் / தந்தை
:

16.
அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் சான்று இணைக்கப்பட்டுள்ளதா
(சதவிகிதம் குறிக்கவும்)


:







தாயார் / தந்தையின் கையொப்பம்






மாணவ  /  மாணவியர் கையொப்பம்


-----------------------------------------------------------------------------------------

எனவே பலருக்கு பகிருங்கள்!         புண்ணியம் சேருங்கள்!!




திரு அலங்கார S பெனடிக்ட்  பற்றிய சிறு குறிப்பு:




                    திரு அலங்கார S பெனடிக்ட்  


ஞாபக சக்தி என்றதும் எல்லோருக்குமே நினைவுக்கு வருவது வல்லாரை.
எனக்கு ஞாபகத்திற்கு வருபவர், திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள். ஆம்! இவர் ஒரு என்சைகுளோபீடியா. எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.கூடிய விரைவில் இவரின் பல பதிவுகள் J5 News-ல் இடம் பெறும். அதுவரை காத்திருங்களேன்!













                                            வல்லாரை

பின் குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

 
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team