எனக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டிக் கொள்ளும், பெற்றோர்கள் தானே மொட்டை அடிக்க வேண்டும்! ஏன் ஒன்றும் அறியா அந்த குழந்தையை துன்புறுத்துகின்றனர்! இதற்கு சட்டத்தில் ஏதும் இடம் இல்லையா?
என் தலை பல வருடங்கள் மொட்டை வாங்கி இருக்கிறது. நண்பர்களுடன் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான் அம்மா வருவார். முடிவெட்டுபவர் வந்திருக்கிறார், வா.... மொட்டை அடிக்கலாம் என்று. எனக்கு கோபமாய் வரும். கடைசி மொட்டையாக கோயிலில், உறவினர்கள் முன்னிலையில் மொட்டை அடிப்பார்களே! அப்பப்பா.... அந்த சிறு வயதில் வெட்கம் பிய்த்து தின்னும். அம்மாவிடம் இது சம்பந்தமாக நிறைய முறை சண்டை போட்டிருக்கிறேன். அந்த கோபத்தில் தான் இந்த பதிவு!
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram