Thursday, May 30, 2019

நேசமணிக்கு என்னாச்சு! -அதிர்ச்சியில் உறைந்த ஜெர்மன் நாட்டுக்காரர் !

                                 
இன்று ஜெர்மனியில் விடுமுறையாததால் காலையில் சற்று தாமதமாகத்தான் எழும்பினேன். யோகா முடித்து குளித்துவிட்டு, டோஸ்ட் செய்ய பிரட் பாக்கெட்டைப்  பிரிக்கும் போது, என் மொபைல் சிணுங்கியது. எடுத்தேன். மறுமுனையில் ஜெர்மன் நண்பர்! இன்று அலுவலகம் இல்லையே! அப்புறம் ஏன் போன் செய்கிறார் என்று யோசித்துக்கொண்டே  'ஆன்' செய்தேன்.

"ஒரு முக்கியமான விஷயம்" என்று ஜெர்மன் மொழியில் பேச ஆரம்பித்தார். "எனக்கு உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாமே நன்றாக நடக்கும். கவலைப்படாதீர்கள்" என்றவர், 'சாப்பிடீர்களா?' என கேட்க,

"இனி தான்" என்ற நான், சற்று குழம்பிய நிலையில், "என்ன சொல்ல வருகிறீர்கள், அலுவலகத்தில் ஏதும் பிரச்சினையா? இன்று விடுமுறை தானே? " என்று கேள்விகளை அடுக்கினேன்.

'ஆம், விடுமுறைதான், நான் வீட்டில் தான் இருக்கிறேன்.நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்' என்றார்.

"வீட்டில்"

'கோவிலுக்கு செல்ல வில்லையா'

"சனி, ஞாயிறு மட்டும் செல்வேன்"

'நான் காலையிலேயே போயிட்டு வந்துட்டேன்" என்றவரிடம்

"பிறந்த நாளா ?"  என்று நான் கேட்க,

'இல்லை, நேசமணிக்காக வேண்டிக்கொள்ள!' என்றார்.

எனக்கு ஆரம்பத்தில்  எதுவுமே புரியவில்லை. எனக்கு அவர் விளக்கிக்கொண்டிருக்க, அருகில் இருந்த இன்னொரு மொபைலில் வாட்சப் பார்த்த எனக்கு எல்லாமும் புரிய ஆரம்பித்தது.

Friends படம் பற்றியும் அதில் வரும் காண்ட்ராக்டர் நேசமணி பற்றியும் விளக்கினேன். என் வீட்டுக் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

சிரித்தவர், அந்த படத்தின் காப்பி கிடைக்குமா என்றார்.

Friends பட தயாரிப்பாளர்கள் ஜெர்மன் மொழியில் படத்தை டப் செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.







No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram