காராவது, பறக்கிறதாவது! யார்கிட்ட கதை விடுறீங்கன்னு சொல்ற ஆளா நீங்க? அப்படினா, ஜெர்மனியின் மூனிச் (Munich) நகருக்கு வந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்! ஆம்! கடந்த ஒரு வாரமாகவே ஜெர்மனி முழுக்க இதே பேச்சு தான்! செய்தித்தாள், தொலைக்காட்சிப்பெட்டி என்று எதைத் தொட்டாலும் இந்த செய்தி தான்! சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இதை உருவாக்கிய டீம்!
முடடை வடிவ மையப்பகுதி, இரண்டு பக்கங்களிலும் இறக்கை போன்ற அமைப்பு - ஆனால் ஹெலிகாப்ட்டர் போன்ற வால் இல்லை! பாட்டரியில் இயங்கும் இந்த கார் ஜெர்மனியின் மூனிச் நகரில் உள்ள Lilium கம்பனியின் தயாரிப்பு! நின்ற இடத்திலிருந்தே பறக்கும் வசதி கொண்ட இந்த கார், 2025 ல் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 300 Km ஆக இருக்கும்.
பறக்கும் கார் பற்றி ஒரு நேர்காணல் வேண்டும் என்று அதன் தலைமை அதிகாரி, திரு. ரெமோ கெர்பர் அவர்களைத் தொடர்பு கொணடோம். உடனடியாக, புகைப்படங்கள், வீடியோ மற்றும் b-roll ஆகியவற்றை உபயோகப் படுத்திக் கொள்ள, கம்பனியின் தகவல் தொடர்பு அதிகாரி திரு ஆலிவர் லிங்க் அனுப்பியிருந்தார்.
ரெமோ கெர்பர், இந்த காரைப் பற்றி குறிப்பிடும்போது, " ஜெட் விமானத்தின் 'fixed wing' வடிவமைப்பில் இது உருவாகி உள்ளதால் இன்ஜினின் இயக்குத்திறன் சிறப்பாக செயல்பட மிகவும் ஏதுவாக இருக்கும்" என்றார்.மேலும் அவர் கூறும் போது, " இதில் 5 நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள், ஒரு பைலட் என பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விமானப் போக்குவரத்துத் துறையிடமும் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடமும் சான்றிதழ் பெற ஏற்படுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்றார்.
"இந்த இன்டர்நெட் உலகத்தில் மக்கள் எளிதில் இந்த காரை உபயோகிக்க என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்?"
"ஸ்மார்ட் போன் ஆப் மூலமாக எங்கள் பறக்கும் காரை புக் செய்யலாம். உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், Uber கார் மூலமாக 20 மைல் தூரம் செல்ல 48 நிமிடங்கள் ஆகிறது. அதற்காக, பயணம் செய்யும் நபர் 30 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும்.ஒரு நாளைக்கு இது மாதிரி Uber, 10 சவாரி வரை எடுக்கமுடியும். அப்படிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 300 டாலர், அதாவது வருடத்திற்கு 75,000 சம்பாதிக்க முடியும்.எங்கள் பறக்கும் காரில் (Lilium Jet) 12 நிமிடத்தில் 20 மைல் தூரத்தை அடைய முடியும். அதற்காக நாங்கள் வாங்கப் போகும் தொகை 50 டாலர் மட்டுமே! ஒரு நாளைக்கு 40 ட்ரிப் வரை செல்ல முடியும். கணக்குப் பார்த்தால், ஒரு நாளைக்கு 2000 டாலர், வருடத்திற்கு 1.5 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும்.
"முதலீடு என்பது எவ்வளவு முக்கியமோ அது மாதிரி பணம் போடுபவர்களின் நம்பிக்கையைப் பெறுவது அதைவிட முக்கியம். உங்கள் முதலீட்டாளர்கள் பற்றி....?
மொத்தமாக, 101.4 மில்லியன் டாலர்கள் இந்த ப்ராஜெக்ட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிரபல முதலீட்டாளர் திரு. பிராங்க் தீலன் அவர்களிடம் பலர், நெகடிவ் ஆக முடிந்த, இது போன்ற ப்ராஜெக்ட்டுகளை சொல்லி பயமுறுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளார். மற்றும் Skype நிறுவனத் தலைவர் திரு. நிக்லாஸ் சென்ஸ்ட்ராம் அவர்களின் வெஞ்சர் கேப்பிடல் நிறுவனம், Tencent என்ற சீனாவின் பிரபல இன்டர்நெட் நிறுவனம் என்று எங்கள் முதலீடாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையுடனே உள்ளனர்.
"கடைசியாக ஒரு கேள்வி! Joby Aviation, Kitty Hawk போன்ற பிரபல கம்பனிகளும் பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதே! போட்டியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?"
Blade ன் "Uber for helicopters", அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டனிலிருந்து JFK ஏர்போர்ட் செல்ல 195 டாலர் வாங்கும் பட்சத்தில் நாங்கள் 70 டாலரை நிர்ணயிக்க இருக்கிறோம்.
கார் பறக்கும் வீடியோ-வைக் காண, இங்கே
https://www.youtube.com/watch?time_continue=3&v=8qotuu8JjQM'கிளிக்'கவும்.
https://www.youtube.com/watch?time_continue=3&v=8qotuu8JjQM'கிளிக்'கவும்.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram