நியூசிலாந்தில் உள்ள christchurch நகரம்
பொதுவாக நாம் டி.வி, ரேடியோ மற்றும் நாழிதள்களில் தினசரி மழையளவு / ஒரு வாரத்திற்கான மழையளவு அல்லது வெயிலின் உச்ச பட்ச டிகிரி என்று தான் படித்திருப்போம். இதைப்போல, தினமும் இத்தனை முறை நிலநடுக்கம் என்றோ அல்லது ஒரு வாரத்தில் இத்தனை ரிக்டர் இத்தனை முறை இந்த நகரில் நிகழ்ந்துள்ளது என்றோ நாழிதள்கள் மற்றும் இதர ஊடகங்களில் ஒரு நாட்டில் வெளியிடுகிறார்கள் என்றால் அந்த ஊரில் நிலநடுக்கம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அங்கு உள்ள மனிதர்கள் எப்படி கவலை மறந்து வாழ்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்!.சற்று அதிர்ச்சி யாக இருக்கிறதா? அது எந்த நாடு, எந்த பகுதி என்று தெரிய வேண்டுமா?
அந்த ஊரே எப்போதும் ஆடிக்கொண்டே தான் இருக்கும். நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.
எப்படி தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு ஆண்கள் வேலைக்கு செல்கிறார்கள்? இந்த கேள்வி அனைவருக்குமே எழும்.அதற்கான பதில்:அங்கு வாழும் மக்களுக்கு இது பழகிவிட்டது. ஆம்! இது தான் உண்மை.முதலில் அது எந்த நாடு என்று சொல்லுங்கள் என்கிறீர்களா?
அது தான் நியூசிலாந்தில் உள்ள christchurch நகரம். ஆம்! இந்த நகதிலும் அதை சுற்றியும் எப்போதும் நிலநடுக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால், அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்த நிலநடுக்க விவரங்கள் தெரிய வரும்.http://www.christchurchquakemap.co.nz/
இதோ இன்னொரு லிங்க்: இந்த லிங்கின் மூலம் நியூசிலாந்து பகுதிகளில் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலநடுக்க விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். http://www.geonet.org.nz/quakes/felt
தினமும் நிலநடுக்கத்தை கொடுத்த இயற்கை அன்னை, இயற்கை அழகையும் அள்ளி கொடுத்திருக்கிறாள். Garden City என்றழைக்கப்படும் christchurch நகரம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கும்.
இங்கு ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்குள்ள வீடுகள் நிலநடுக்கத்துக்கு தாக்கு பிடிக்கத்தக்க வகையில் கட்டப்படுகின்றன.எப்படி பயம் இல்லாமல் வீட்டில் படுத்து உறங்க முடிகிறது என்று கேட்டால்,. அவர்கள் கூறும் பதில்: "நிலநடுக்கம் எங்களை கொல்வதற்கு பதிலாக வீடுகள் அதை செய்கின்றன".
ஆனால், இப்போது நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் வீடுகள் அங்கு கட்டப்படுகின்றன. அதற்காக அரசு சட்டம் இயற்றி வீடுகள் எந்த முறையில் கட்டப்படவேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள்.
முடிந்தால் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வாருங்களேன்!
christchurch நகரத்தின் சில புகைப்படங்கள் இந்த பதிவின் இடையிடையே இங்களுக்காக.
தினமும் www.jfivenews.in பாருங்கள்!