ஏரோப்ளேன் கேட்
ரயில்வே கேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். புகை வண்டி வரும் போது இந்த கேட் அடைக்கப்பட்டிருக்கும். நாமும் டிரெயின் போகும் வரை காத்திருப்போம்.அதென்ன! ஏரோப்ளேன் கேட் என்கிறீர்களா? இதுவும் ரயில்வே கேட் போலத்தான்.
என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஊரில் வேறு இடமே இல்லையா விமான நிலையம் அமைக்க? ஏன் விமான ஓடு தளத்திற்கருகே சாலையையும் வைத்து விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் கேட் போட்டு சாலையை மூட வேண்டும்? இது எந்த நாட்டில் இருக்கிறது? தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதா?
முதலில் அந்த நாட்டின் வரைபடத்தை பாருங்கள். அப்போதுதான் அவர்களின் நிலம் சார்ந்த பிரச்சினை உங்களுக்குத் தெரியவரும்.
எவ்வளவு சிறிய நாடு என்று பார்த்தீர்களா? நம் நாட்டைப் போல இதுவும் தீபகற்பம் தான். மூன்று பக்கம் கடலும் வடக்கு பக்கம் நிலமும் அமைந்துள்ளது. இந்த சிறிய இடத்தில் சாலை, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் என்று அனைத்தையும் வைக்க வேண்டுமென்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?
பில்டப் எல்லாம் போதும். அந்த நாட்டின் பெயரை சொல்லுங்கள் என்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன்!
பிரிட்டீஷ் காலனியின் ஆதிக்கத்தில் இன்றும் உட்பட்டுள்ள ஜிப்ரால்டர் ( Gibraltar) என்ற நாடு தான் அது. நம் செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்திற்கு மிகவும் பிடித்த அவர் வருடத்திற்கு அதிக நாட்கள் தங்கி இருக்கும் ஸ்பெயின் நாட்டின் தெற்கே தான் இந்த சிறிய நாடு அமைந்துள்ளது. ஏறத்தாழ 30,000 பேர் வாழும் இந்த நாட்டின் பரப்பளவு 6.8 சதுர கிலோமீட்டர் மட்டுமே! பூர்விக மொழியாக "லியானிட்டோ"(Llanito) இருந்தபோதிலும், ஸ்பானிஷ் மொழி பரவலாகவும், ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பேசப்படுகிறது.
பறப்பதற்கு பல சிக்கல்கள்( இடப்பிரச்சினை தான், வேறென்ன!) இருப்பதனால் வாரத்திற்கு
30 சர்வீஸ்கள் மட்டுமே உண்டு. அதுவும் UK வுக்குத்தான் அதிகம். புகைப்படங்களை பாருங்களேன் உங்களுக்கே புரியும்.
தினமும் www.jfivenews.in படியுங்கள்
தினமும் www.jfivenews.in படியுங்கள்
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram