Monday, May 11, 2020

நான் எழுதிய "கதம்பம்( சிறுகதைகள் & கட்டுரைகள்)" புத்தகம் அமேசானில் இலவசமாக

நட்பு வட்டத்தில் இருக்கும் புத்தகப் பிரியர்களே!
வீட்டுக்குளேயே இருப்பதால் போரடிக்கிறதா? இதோ, உங்களுக்காகவே, இன்றும், நாளையும்( ஞாயிறு & திங்கள்) நான் எழுதிய "கதம்பம்( சிறுகதைகள் & கட்டுரைகள்)" புத்தகம் அமேசானில் இலவசமாகப் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sunday, April 5, 2020, 12:00 AM PDT Monday, April 6, 2020, 11:59 PM PDT
படித்துவிட்டு, பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்யுங்கள். குறைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள்(gsjesu@gmail.com)

மலேசியாவிலிருந்து வெளியாகும் "தமிழ் மலர்" நாளிதழில் நான் எழுதிய கட்டுரை

மலேசியாவிலிருந்து வெளியாகும் "தமிழ் மலர்" நாளிதழில் திரு. ரமேஷ் 'மிஸ்டர் டெஃப் இந்தியா" பற்றி நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.


விகடனில் என் கட்டுரை

லண்டனில் இருந்து வெளியாகும் "வணக்கம் லண்டன்" தமிழ் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை

லண்டனில் இருந்து வெளியாகும் "வணக்கம் லண்டன்" தமிழ் பத்திரிகையில், எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த திரு. ரமேஷ் 'மிஸ்டர் டெஃப் இந்தியா" பற்றி நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.

என் கட்டுரை தினமலரில்

என் கட்டுரை தினமலரில் வெளியாகியுள்ளது

"இந்து-தமிழ் " நாளிதழில் என் கட்டுரை

என் கட்டுரை இன்றைய "இந்து-தமிழ் " நாளிதழில் வெளியாகியுள்ளது

கன்னியாகுமரியில் நான்!

கன்னியாகுமரியில் நான்!
ஒளிப்பதிவு: வானில் சூரியன்
டைரக்டர் : என்னில் இருந்தவன்

ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா 2020

ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா
- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்
-----------------------------------------------------------------------------------
"ஏண்டாப்பா! எப்படி இருக்கேள்?"
மூன்சன் நகரின் மரியன்பிளாட்ஸ் kaufhof கடையிலிருந்து வெளியே வந்த கிட்டுவை அந்த குரல் அழைத்தது.
'ஹை ....பட்டு மாமி..... நீங்க எப்படி இருக்கேள். பிரான்ஸ் போனதுக்கப்புறம் என்னை மறந்துட்டேளா மாமி!'
"யார மறந்தாலும் உன்ன மறப்பேனோ! ....அதான் உன்ன தேடி இங்க கடைக்கே வந்துட்டேனே, எப்படியிருக்கேடா?"
'நல்லா இருக்கேன் மாமி. நீங்க எப்படி இருக்கேள்? என்ன திடீர்னு மூன்சன் பக்கம்? ஏதாவது விசேஷமா மாமி?'
"ஆமாண்டா! இங்க மூன்சன் ல இருக்கிற உனக்கு, நான் தான் சொல்ல வேண்டியிருக்கு! வர்ற சனிக்கிழமை kulter Zentrum Trudering ல காலைல 11 மணிக்கு பொங்கல் விழா கொண்டாட்டம் தெரியுமோன்னோ?
'ஆமா மாமி, நானும் வாட்ஸ்அப்ல பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரிஞ்சது மாமி?'
"நான் இங்க மூன்சன்ல இருந்தப்போ, பக்கத்து ஆத்துல சேஷா இருந்தானோன்னோ....அதாம்பா, நம்ம தேவாவோட அண்ணா!, அவன் தான்பா எனக்கு இன்விடேஷன் அனுப்பி வச்சான். நீ கூட என்ன மறந்துட்டே பாத்தியா?"
'உங்கள மறப்பேனா மாமி, போன் பண்ணி கூப்பிடலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்'
"நல்லா சமாளிக்கிறேப்பா!, அது இருக்கட்டும். பொங்கல் விழாவுல விறகு அடுப்புல பொங்கல் கொண்டாடப் போறாளாம் தெரியுமோ! அது மட்டுல்ல, சிலம்பாட்டமும் உண்டு! நானும் அதுல கலந்துண்டு கம்பு சுத்தப் போறேன்! அதான் இன்னிக்கே வந்துட்டேன்.
'நிறைய தெரிச்சி வெச்சிருக்கீங்க மாமி'
"ஆமாண்டா, உனக்கும் போட்டி வச்சிருக்கா"
'அது என்ன மாமி?'
கரும்பை உடைச்சி வேகமா சாப்பிடுற போட்டி தான். இப்பவே பேர பதிவு செஞ்சிருடா. லேட்டான சேத்துக்க மாட்டா"
'ஆமா மாமி, நானும் கேள்விப்பட்டேன். செல்வம் அண்ணன் தான் இப்போ துணை தலைவர். நிறைய ப்ரொக்ராம் இருக்கிறதா சொன்னார்.'
"ஆமா, நம்மளோட பரதநாட்டியம், கேரளாவோட கதக் னு தென்னிந்திய கலைநிகழ்ச்சிகள் நிறைய இருக்கு!"
'அதென்ன மாமி, கையில பேப்பர ஒளிச்சி வச்சிருக்கேள்?'
"உனக்கு தெரியாததாப்பா. பட்டி மன்றம் இருக்கோன்னோ, அதுல நானும் பேசப்போறேன். தலைப்பு என்ன தெரியுமோ! குழந்தை பருவத்தில் சிறந்தது 80-90 ஆண்டா அல்லது 2000-2020 ஆண்டா? "
'தலைப்பு சூப்பர் மாமி. நடுவர் யாரு மாமி?'
"அதெல்லாம் நீ அங்கே வந்து பாத்துகோடாப்பா. மத்தவங்க கிட்டேயும் சொல்லிடு.வர்ற சனிக்கிழமை kulter Zentrum Trudering ல காலைல 11 மணிக்கு. மறந்துடாதே"
'சரி மாமி, அங்கே மீட் பண்ணலாம், பை ...பை'


https://www.dinamalar.com/nri/details.asp?id=13271&lang=ta

விகடனில் என் கதைக்கு கிடைத்த வெகுமதி

விகடனில் என் கதைக்கு கிடைத்த வெகுமதியாக இதை கருதுகிறேன்.


"ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்" தினமலர் நாளிதழில்................

தினமலர் நாளிதழில், நான் எழுதிய "ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்" கட்டுரை வெளியாகியுள்ளது

விகடனில் "டாப் 20 சிறுகதைகளில்" என்னுடைய 4 சிறுகதைகள்

விகடனில் "டாப் 20 சிறுகதைகளில்" என்னுடைய 4 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, டாப் 10 கதைகளில் 2 கதைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

என் கட்டுரை தினமலரில் .....

என் கட்டுரை தினமலரில் .....

இட்லி

மூணு இட்லி கேட்டேன், இரண்டு தான் இருக்கு"
'நல்லா பாருங்க சார், ஸ்பூனுக்கு கீழே ஒரு இட்லி இருக்கு'

என் கட்டுரை விகடனில்............

என் கட்டுரை விகடனில் வெளியாகியுள்ளது

வண்ணத்துப் பூச்சி

முடிவை யூகியுங்களேன்!
-----------------------------------------
இந்த கதையின் முடிவை நான் எழுதின மாதிரி யாரவது யூகித்திருக்கீங்களானு பாப்போம். சும்மா ஜாலியா முடிவை சொல்லுங்க நண்பர்களே!
"அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்னும் சிறிது நேரத்தில் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகவுள்ளது". அறிவிப்பை கேட்டுக்கொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கி ரயில் நிலையத்தில் நுழைந்த பிரணவ் வேகமாக அந்த நடை மேடையை நோக்கி நடந்தான். முதுகிலே ஒரு ஷோல்டர் பை, சில நாட்களுக்கான டிரஸ்களை தன்னுள் அடக்கிக்கொண்டிருந்தது. கழுத்தில் அவன் வேலை செய்யும் கணிப்பொறி கம்பனியின் ஐடி கார்டு. ரயிலில் ஏறி தனக்குரிய பெர்த்தில் அமர்ந்தான். ஹாரன் சத்தத்துடன் ரயில் முன்னோக்கிப் புறப்பட்டது. அவனின் மனமோ பின்னோக்கி சென்றது.
பணகுடிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அவனின் விவசாய பண்ணை வீடு. அப்பாவுக்கு இயற்க்கை விவசாயத்தில் ஆர்வம். ஐந்து ஏக்கரும் இயற்கை விவசாயமே. பாகற்காய், வெண்டை, பீர்க்கங்காய், வெள்ளரி, பூசணி, கத்தரி என்று பெரும்பாலும் காய்கறிகள் தான். அரை ஏக்கரில் மட்டும் அரைக்கீரை, தண்டங்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, வல்லாரை, பாலக்கீரை, பசலைக்கீரை முடக்கொத்தான் என்று பல கீரை வகைகள். வாரத்தில் மூன்று நாட்கள் காவல்கிணறு விலக்கில் உள்ள காமராஜர் சந்தைக்கு காய்கறிகளையும் கீரைகளையும் மாலை வேளையில் குட்டி யானை ஆட்டோவில் கொண்டு செல்வார். இயற்கை விவசாயம் என்பதால் அவரின் காய்கறிகளுக்கு எப்போதுமே கிராக்கி தான்.
அந்த தோட்டம் தான் பிரணவ்வின் விளையாட்டு மைதானம். தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் காபி குடித்துவிட்டு தோட்டத்துக்கு சென்று விடுவான். அங்கு பலவண்ணங்களில்
பறந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளிடம் பேசுவதுதான் அவனின் பொழுதுபோக்கு. அவனின் பேச்சுக்கேற்ப அவைகளும் தங்களின் இறக்கைகளை அசைத்து அவனுக்குப் பதில் சொல்லும். அவன் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது அவனின் சித்தப்பா ஒருசில ஆட்களுடன் வந்து அப்பாவுடன் தகராறு செய்துகொண்டிருந்தார். அப்பாவும் பதிலுக்கு பேசினாலும் சித்தப்பா மற்றும் அடியாட்களின் சத்தத்துக்கு முன்னால் அப்பாவின் பேச்சு சங்கு சத்தத்தின் முன் விசிலாகிப் போனது. அம்மா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். மறுநாள் பள்ளியிலிருந்தவனுக்கு வந்த தகவல் அவனை பயம் கொள்ள வைத்தது. அழுது அழுது சோர்ந்து போனான்.
அந்த பண்ணைத் தோட்டத்துக்காக கேஸ் நடப்பதாக சொன்னார்கள். வக்கீலும் மற்ற உறவினர்களும் அவனை சென்னையிலுள்ள அரசு ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்.அவ்வப்போது வக்கீல் மட்டும் வந்து பார்த்துவிட்டுப்போவார். அங்கு படித்து, இப்பொழுது ஒரு வெளிநாட்டு கணிப்பொறி கம்பெனியில் டீம் லீடராகப் பணிபுரிகிறான்.நேற்று தான் வக்கீல் வந்து சொன்னார், கேஸ் இவன் பக்கம் ஜெயித்து பண்ணை வீடு இவனுக்கே கிடைத்துவிட்டது என்று. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் தன் சொந்த ஊருக்குப் போகிறான்.
"டிக்கெட் காட்டுங்க" டிக்கெட் செக்கர் வந்து கேட்ட போது தான் சுயநினைவுக்கு வந்தான்.வண்டி செங்கல்பட்டு தாண்டியிருந்தது.
டிக்கெட்டை காட்டிவிட்டு ஹோட்டலில் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டான். தன் பெர்த்தில் ஏறி படுத்தவன் அப்படியே உறங்கிப் போனான்.
"இட்லி வடை பொங்கல் .........இட்லி வடை பொங்கல்...................."
கண்விழித்துப் பார்த்தான். காலை சூரியன் ரயிலின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து நுழைந்து மறைந்தது மரங்களின் உதவியினால்.
"சார், இனி எந்த ஸ்டேஷன் வரப்போகுது?"
'பணகுடி'
அவசரமாக எழுந்தான். தன் பையில் பெட் ஷீட்டை அடைத்தான். ரயில் நின்றது.
இறங்கினான்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்றிருந்தார். வக்கீல் ஏற்கெனவே சொல்லியிருந்தால் அடையாளம் காண சுலபமாய் இருந்தது.இருவரும் ஆட்டோவில் பண்ணை வீடு வந்தனர்.பால்கனியுடன் கூடிய மச்சு வீடு. பெயிண்ட் போய், வெளிறிப் காட்சியளித்தது.
தோட்டம் முற்றிலும் மாறி இருந்தது. தென்னை, மா, கொய்யா என்று நிறைய மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கொய்யா மரத்தின் அருகே பெரிய ரோஜா செடி கலர் கலராய் பூத்து, கண்களுக்கு விருந்து படைத்தது. அம்மா அப்பாவின் ஞாபகம் வந்து அந்த கண்களை குளமாக்கியது. வாசல் படியை தொட்டு கும்பிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
"இட்லி சுட்டு வைச்சிருக்கேன் ஐயா"
'நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்' என்றவன்,
"தோட்டத்தில் காய் கறிகள் ஏதும் போடலியா"
'கத்தரியும் வெண்டையும் குறுணி விதைப்பாட்டுல போட்டிருக்கு. நானும் என் வீட்டுக்காரரும் தான் இதுவரை பார்த்துகிட்டு இருந்தோம். உங்க சித்தப்பா தான் பணம் தருவாங்க. இப்போ, வக்கீல் ஐயா தான் எங்களையே தொடர்ந்து பாத்துக்கச் சொன்னார். ஆனா, நீங்க தான் முடிவு பண்ணனும். எங்களுக்கு இதை விட்டா வேற போக்கிடம் இல்ல. கொஞ்சம் தயவு காட்டுங்கய்யா'
"உன் பேர் என்ன?"
'கண்ணம்மா'
"நான் இதை பத்து வருஷத்துக்கு பணகுடியில இருக்கிற ராஜாராம் செங்கல் சூளை முதலாளிக்கு லீசுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன். நேத்தே போன்ல எல்லா விவரங்களையும் அவர்கிட்ட நானும் வக்கீலும் பேசிட்டோம். இரண்டு நாள்ல லீஸ் டாக்குமெண்ட் ரெடியானதும் வாங்கிட்டு திரும்பவும் சென்னை கிளம்பிடுவேன். உங்களைப் பத்தியும் அவர் கிட்ட சொல்றேன். கவலைப்படாதீங்க"
கண்ணம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
குளித்துவிட்டு இட்லி சாப்பிடவன், வெளியே வந்து பால்கனியில் நின்றான். சுத்தமான காற்று அவனை தாலாட்டியது. மனம் உற்சாகமானது. கண்களை சுழல விட்டான்.
"ஹே ..................................." உள்ளம் உற்சாகத்தில் ரீங்காரமிட்டது. கொய்யா மரத்தின் அருகில் இருந்த அந்த பெரிய ரோஜா செடியின் பூக்களை சுற்றிலும் நிறைய வண்ணத்துப்பூச்சிகள்! சந்தோஷம் அவனை மீண்டும் நான்காம் வகுப்புக்கே கொண்டு சென்றது. ஓடினான்.
"ஹே ........................" அருகில் சென்று கைகளை அசைத்தான்.
பதிலுக்கு அவையும் இறக்கைகளை படபடத்தன. சந்தோசக் கூத்தாடினான். வானமும் அவனுடன் சேர்ந்து கொண்டது. மாமரத்தில் நின்ற மயில் தோகை விரித்து ஆடியது. வண்ணத்துப்பூச்சிகள் ரோஜா இலைகளுக்கு அடியில் ஒவ்வொன்றாய் பதுங்கியது. அவைகளை தொந்தரவு பண்ண விரும்பாமல் மழையில் நனைந்துகொண்டே பால்கனிக்கு வந்தான். வீட்டு வாசலின் நிலைக்கு மேலே பலவண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஊட்டி மலர் தோட்டத்தில் எடுத்த புகைப்படம். அதில் அழகான பிங்க் நிறத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சி. மழைக்குப் பயந்து வந்திருக்கவேண்டும். நிஜ பூக்கள் என்று நினைத்துவிட்டதோ என்னவோ!
தலையை டவலால் துவட்டிக்கொண்டே, மேலே புகைப்படத்தைப் பார்த்தவன் மீண்டும் துள்ளிக் குதித்தான். இறக்கைகளில் கருப்பு பார்டரில் பிங்க் நிறம். அதில் நெற்றிப் பொட்டைப் போன்ற வடிவத்தில் மூன்று மஞ்சள் திட்டுகள்!. இதுவரையிலும் அவன் எந்த வண்ணத்துப் பூச்சியையும் இதுவரையில் பார்த்ததில்லை. அதை கையில் எடுத்து கொஞ்சவேண்டும் போல இருந்தது அவனுக்கு.
"உன் பேரென்ன?"
'கண்ணம்மான்னு காலையிலேயே சொன்னேங்களேய்யா' உள்ளே சமையல் கட்டிலிருந்து சத்தம் வந்தது.
"இவ வேற" என்று முணுமுணுத்தவன், வீட்டின் முன் கதவை சாத்திவிட்டு, மீண்டும் மெதுவாக,
"ஏய் ....பிங்கு .......உன் பேரென்ன?"
'...............'
"சொல்ல மாட்டியா? நான் உனக்கு ஒரு பேர் வைக்கட்டுமா?"
'ஆம்' என்பது போல் அந்த வண்ணத்துப் பூச்சி தன் இறக்கைகளை ஒருமுறை விரித்து மூடியது.
"பிரிஸில்லா....எப்படி இருக்கு. பிடிச்சிருக்கா?"
மீண்டும் இறக்கைகள் திறந்து மூடின.
கதவைத் திறந்து பார்வையை உள்ளே நீட்டினான். கண்ணம்மாவை காணோம். மீண்டும் பூட்டியவன்,
"என்னை கல்யாணம் கட்டிக்கிறியா?"
'..........'
"ஏய் ...பிரிஸில்லாலா லா லா .....என்னைக் கட்டிக்கிறியா?" அவனின் குரல் தேனில் குழைந்து ஒரு டெசிபல் ஆனது.
பிரிஸில்லாவின் இறக்கைகள் மெதுவாக திறந்து ஒருமுறை அடித்து மீண்டும் மூடியது.
"ஹே ...................................." ஆனந்தத்தில் கைகளைத் தூக்கி சத்தமிட்டான்.
வாசல் கதவு திறந்தது. கண்ணம்மாதான் நின்றிருந்தாள்.
"ஒண்ணுமில்ல" என்றவன், உள்ளே சென்று ஒரு நாற்காலியை எடுத்து வந்து பால்கனியில் போட்டு கையில் மொபைலை நோண்ட ஆரம்பித்தான். கண்ணம்மா உள்ளே நுழைந்ததும் பிரிசில்லாவை அவனின் மொபைல் பருகிக்கொண்டிருந்தது.
மழை நின்றிருந்தது.
பிரிஸில்லா வெளியே பறந்தாள்.
"ஏய்...சாயந்திரம் வந்துடு" என்றவன் தன் மெயில்களைப் பார்க்கத்தொடங்கினான்.
"ஐயா, சாப்பிட வாங்க"
சாப்பிட்ட பின் ஒரு குட்டித் தூக்கம் போட்டவன், ஐந்து மணி வாக்கில் கையில் காபி டம்ளருடன் அந்த ரோஜா செடியை நோக்கி சென்றான்.பக்கத்தில் கத்தரி செடிகள் நிறைய காத்திருந்தன.
அங்கே, அனைத்து வண்ணங்களும் கால் முளைத்து பறப்பது போல அந்த ரோஜா செடியை சுற்றிலும் வண்ணத்துப் பூச்சிகள். நடுநாயகமாக பிரிசில்லா பறந்துகொண்டிருந்தாள்.
"ஏய் பொண்டாட்டி...நீ இங்கே தான் இருக்கிறியா? வீட்டுக்கு வர மாட்டியா?"
பிரிஸில்லா மெதுவாக அவனின் தோளில் வந்து அமர்ந்தாள்.
சந்தோஷத்தின் உச்சத்துக்கே போனான் அவன்.
"நீஙக எல்லோரும் தான் அவளுக்கு திருமண தோழிகள். ஓகே வா?" என்றான் மற்ற வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்து.
'ஆம்' என்பது போல அவை அனைத்தும் ஒரே நேரத்தில் இறக்கை அடித்தன. கைகளால் அவைகளுடன் வாலிபால் விளையாடினான்.
மாலை மயங்கியது.
கண்ணம்மா காலையில் வருவதாக சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றுவிடாள்.
வீட்டுக்குள் வந்தவன் கொஞ்சநேரம் டிவி பார்த்தான். நேற்றைய பயண களைப்பின் தொட்ட குறை கண்களை சொக்கியது. சாப்பிட்டவன் அப்படியே சோபாவில் தூங்கிப் போனான்.
காலையில் , கண்ணம்மா பால் வாங்கி வந்து தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்து காபி போட்டு
அவனை எழுப்பினாள்.
காபியை வாங்கிக்கொண்டு பால்கனிக்கு வந்தான். வாசல் நிலைக்கு மேலே இருந்த படத்தைப் பார்த்தான். பிரிசில்லா இன்னும் வரவில்லை. குளித்துவிட்டு மீண்டும் பால்கனிக்கு வந்தான்.
ம்கூம். எந்த வண்ணத்து பூச்சிகளையுமே காணவில்லை. செல்லமாய் கோபித்துக்கொண்டான். இன்னிக்கு முழுவதும் உங்களிடம் பேசமாட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"ஐயா, மதியம் என்ன சமைக்கணும்?"
'நேத்து தோட்டத்துல நிறைய கத்தரிக்காய்கள் பார்த்தேன். அந்த சாம்பார் வையுங்க'
"இன்னிக்கு காலையில தான் பூச்சிமருந்து அடிச்சிருக்கு. இன்னும் இரண்டு நாளைக்கு எந்த காயையும் பறிக்க கூடாதுங்க"
'என்னது, பூச்சி மருந்தா? யாரை கேட்டு அடிச்சீங்க' என்று கோபத்துடன் சொன்னவனுக்கு உள்ளுணர்வு ஏதோ சொல்லியது.
அப்படின்னா என் பிரிஸில்லா......கடவுளே........வேகமாக அந்த ரோஜா செடியை நோக்கி ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி ....
ஐயோ பிரிஸில்லா............பிரிஸில்லா.........அவள் மட்டுமல்ல, நேற்று அவனிடம் சந்தோஷமாய் பேசிய அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும் ரோஜா மூட்டுக்கு அருகே அசைவற்றுக் கிடந்தன. எறும்புகள் அவற்றை இழுத்துச்சென்று கொண்டிருந்தன.
பிரிஸில்லாவின் ஒரு இறக்கையை காணோம்.மெதுவாக அதை கையில் எடுத்தான்.
பிரிஸில்லா.......ஈன குரலில் மெதுவாக கூபிட்டவன், வாயின் அருகில் கொண்டு சென்று தன் இதழ் பதித்தான். அவனின் கண்ணீர் பட்டு அந்த ஒற்றை இறக்கையும் தனியானது. ஒரே நாள்ல என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டியே....பெருங்குரலெடுத்து அழுதான். அப்படியே..........( இனி முடிவு உங்கள் கையில்.................சொல்லுங்க நண்பர்களே!)

Hoepfner பீர்

அலுவல் சம்பந்தமாக, ICE ட்ரெயினில் நண்பனுடன் பிராங்பேர்ட்டில் இருந்து Karlsruhe சென்றிருந்தேன். Hoepfner பீர் கட்டடத்தைப் பார்த்ததும் இரண்டுபேரும் ஸ்தம்பித்துவிட்டொம். 1896 ல் கட்டியது, சிவப்பு நிறத்தில் கோட்டை மாதிரி கம்பீரமாக இருந்தது.
"என்னை போட்டோ எடு" என்றான் நண்பன். மொபைலில் கோணம் பார்க்கும் போது, வயிறு கொஞ்சம் பெரிதாகத் தெரிந்தது. 'கொஞ்சம் வயிற்றை உள்ளே எக்கிக்கோ' என்றேன். "ம்" என்றான். 'வலது பக்க கோட் கொஞ்சம் தூக்கியிருக்கு' என்றேன். சரி செய்தவன், "ம்". 'காலை மடக்கி ஸ்டைலா ' என்றேன். மீண்டும் மீண்டும் ......
"சரி இனி எடு" என்றான்.
பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த ஜெர்மன் பாட்டி , 'வயிறை உள்ளே எக்க மறந்துவிட்டாய்' என சைகையில் அவனிடம் கூற, இருவரும் சிரிப்பில் மிதக்க பாட்டியும் எங்களுடன்.
Karlsruhe போனா, மறக்காம இந்த கட்டடத்தைப் பார்த்துட்டு வாங்க. இங்கே அந்த பில்டிங்கின் ஒரு பகுதி மட்டும் உங்களுக்காக