Monday, May 11, 2020

ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா 2020

ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா
- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்
-----------------------------------------------------------------------------------
"ஏண்டாப்பா! எப்படி இருக்கேள்?"
மூன்சன் நகரின் மரியன்பிளாட்ஸ் kaufhof கடையிலிருந்து வெளியே வந்த கிட்டுவை அந்த குரல் அழைத்தது.
'ஹை ....பட்டு மாமி..... நீங்க எப்படி இருக்கேள். பிரான்ஸ் போனதுக்கப்புறம் என்னை மறந்துட்டேளா மாமி!'
"யார மறந்தாலும் உன்ன மறப்பேனோ! ....அதான் உன்ன தேடி இங்க கடைக்கே வந்துட்டேனே, எப்படியிருக்கேடா?"
'நல்லா இருக்கேன் மாமி. நீங்க எப்படி இருக்கேள்? என்ன திடீர்னு மூன்சன் பக்கம்? ஏதாவது விசேஷமா மாமி?'
"ஆமாண்டா! இங்க மூன்சன் ல இருக்கிற உனக்கு, நான் தான் சொல்ல வேண்டியிருக்கு! வர்ற சனிக்கிழமை kulter Zentrum Trudering ல காலைல 11 மணிக்கு பொங்கல் விழா கொண்டாட்டம் தெரியுமோன்னோ?
'ஆமா மாமி, நானும் வாட்ஸ்அப்ல பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரிஞ்சது மாமி?'
"நான் இங்க மூன்சன்ல இருந்தப்போ, பக்கத்து ஆத்துல சேஷா இருந்தானோன்னோ....அதாம்பா, நம்ம தேவாவோட அண்ணா!, அவன் தான்பா எனக்கு இன்விடேஷன் அனுப்பி வச்சான். நீ கூட என்ன மறந்துட்டே பாத்தியா?"
'உங்கள மறப்பேனா மாமி, போன் பண்ணி கூப்பிடலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்'
"நல்லா சமாளிக்கிறேப்பா!, அது இருக்கட்டும். பொங்கல் விழாவுல விறகு அடுப்புல பொங்கல் கொண்டாடப் போறாளாம் தெரியுமோ! அது மட்டுல்ல, சிலம்பாட்டமும் உண்டு! நானும் அதுல கலந்துண்டு கம்பு சுத்தப் போறேன்! அதான் இன்னிக்கே வந்துட்டேன்.
'நிறைய தெரிச்சி வெச்சிருக்கீங்க மாமி'
"ஆமாண்டா, உனக்கும் போட்டி வச்சிருக்கா"
'அது என்ன மாமி?'
கரும்பை உடைச்சி வேகமா சாப்பிடுற போட்டி தான். இப்பவே பேர பதிவு செஞ்சிருடா. லேட்டான சேத்துக்க மாட்டா"
'ஆமா மாமி, நானும் கேள்விப்பட்டேன். செல்வம் அண்ணன் தான் இப்போ துணை தலைவர். நிறைய ப்ரொக்ராம் இருக்கிறதா சொன்னார்.'
"ஆமா, நம்மளோட பரதநாட்டியம், கேரளாவோட கதக் னு தென்னிந்திய கலைநிகழ்ச்சிகள் நிறைய இருக்கு!"
'அதென்ன மாமி, கையில பேப்பர ஒளிச்சி வச்சிருக்கேள்?'
"உனக்கு தெரியாததாப்பா. பட்டி மன்றம் இருக்கோன்னோ, அதுல நானும் பேசப்போறேன். தலைப்பு என்ன தெரியுமோ! குழந்தை பருவத்தில் சிறந்தது 80-90 ஆண்டா அல்லது 2000-2020 ஆண்டா? "
'தலைப்பு சூப்பர் மாமி. நடுவர் யாரு மாமி?'
"அதெல்லாம் நீ அங்கே வந்து பாத்துகோடாப்பா. மத்தவங்க கிட்டேயும் சொல்லிடு.வர்ற சனிக்கிழமை kulter Zentrum Trudering ல காலைல 11 மணிக்கு. மறந்துடாதே"
'சரி மாமி, அங்கே மீட் பண்ணலாம், பை ...பை'


https://www.dinamalar.com/nri/details.asp?id=13271&lang=ta

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram