Saturday, August 1, 2015

நியூசிலாந்தில் உள்ள christchurch நகரம்

  நியூசிலாந்தில் உள்ள christchurch நகரம் 


பொதுவாக நாம் டி.வி, ரேடியோ மற்றும் நாழிதள்களில்  தினசரி மழையளவு /  ஒரு வாரத்திற்கான  மழையளவு அல்லது வெயிலின் உச்ச பட்ச டிகிரி என்று தான் படித்திருப்போம். இதைப்போல, தினமும் இத்தனை முறை நிலநடுக்கம்  என்றோ  அல்லது  ஒரு வாரத்தில் இத்தனை ரிக்டர் இத்தனை முறை இந்த நகரில் நிகழ்ந்துள்ளது  என்றோ  நாழிதள்கள் மற்றும் இதர ஊடகங்களில் ஒரு நாட்டில் வெளியிடுகிறார்கள் என்றால் அந்த ஊரில் நிலநடுக்கம் எப்படி இருக்கும் என்று  கற்பனை செய்து பாருங்கள். அங்கு உள்ள மனிதர்கள் எப்படி கவலை மறந்து வாழ்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்!.சற்று அதிர்ச்சி யாக இருக்கிறதா? அது எந்த நாடு, எந்த பகுதி என்று தெரிய வேண்டுமா?


அந்த ஊரே எப்போதும் ஆடிக்கொண்டே தான் இருக்கும். நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.





எப்படி தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு ஆண்கள் வேலைக்கு செல்கிறார்கள்? இந்த கேள்வி அனைவருக்குமே எழும்.அதற்கான பதில்:அங்கு வாழும் மக்களுக்கு இது  பழகிவிட்டது. ஆம்! இது தான் உண்மை.முதலில் அது எந்த நாடு என்று சொல்லுங்கள் என்கிறீர்களா?



 அது தான்   நியூசிலாந்தில் உள்ள christchurch நகரம். ஆம்! இந்த நகதிலும் அதை  சுற்றியும்  எப்போதும் நிலநடுக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால், அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்த நிலநடுக்க விவரங்கள் தெரிய வரும்.http://www.christchurchquakemap.co.nz/

இதோ  இன்னொரு லிங்க்: இந்த லிங்கின் மூலம் நியூசிலாந்து பகுதிகளில்  தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலநடுக்க விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். http://www.geonet.org.nz/quakes/felt 




தினமும் நிலநடுக்கத்தை கொடுத்த இயற்கை அன்னை, இயற்கை அழகையும் அள்ளி கொடுத்திருக்கிறாள். Garden City என்றழைக்கப்படும் christchurch நகரம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கும்.


இங்கு ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்குள்ள வீடுகள் நிலநடுக்கத்துக்கு தாக்கு பிடிக்கத்தக்க வகையில் கட்டப்படுகின்றன.எப்படி பயம் இல்லாமல் வீட்டில் படுத்து உறங்க முடிகிறது என்று கேட்டால்,. அவர்கள் கூறும் பதில்: "நிலநடுக்கம் எங்களை கொல்வதற்கு பதிலாக   வீடுகள் அதை செய்கின்றன".



ஆனால், இப்போது நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் வீடுகள் அங்கு கட்டப்படுகின்றன. அதற்காக அரசு சட்டம் இயற்றி வீடுகள் எந்த முறையில் கட்டப்படவேண்டும் என்று அரசாணை  வெளியிட்டிருக்கிறார்கள். 





முடிந்தால் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வாருங்களேன்!



christchurch நகரத்தின்  சில புகைப்படங்கள் இந்த பதிவின் இடையிடையே இங்களுக்காக.

தினமும் www.jfivenews.in பாருங்கள்!










ஏரோப்ளேன் கேட்

ஏரோப்ளேன் கேட் 


ரயில்வே கேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். புகை வண்டி வரும் போது  இந்த கேட் அடைக்கப்பட்டிருக்கும். நாமும்  டிரெயின் போகும் வரை காத்திருப்போம்.அதென்ன!  ஏரோப்ளேன் கேட் என்கிறீர்களா? இதுவும் ரயில்வே கேட் போலத்தான்.

என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த ஊரில் வேறு இடமே இல்லையா விமான நிலையம் அமைக்க? ஏன் விமான ஓடு தளத்திற்கருகே சாலையையும் வைத்து விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் கேட் போட்டு சாலையை மூட வேண்டும்? இது எந்த நாட்டில் இருக்கிறது? தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதா?

முதலில் அந்த நாட்டின் வரைபடத்தை பாருங்கள். அப்போதுதான் அவர்களின் நிலம் சார்ந்த பிரச்சினை உங்களுக்குத் தெரியவரும்.



எவ்வளவு சிறிய நாடு என்று பார்த்தீர்களா? நம் நாட்டைப் போல இதுவும் தீபகற்பம் தான். மூன்று பக்கம் கடலும் வடக்கு பக்கம் நிலமும் அமைந்துள்ளது. இந்த சிறிய இடத்தில் சாலை, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் என்று அனைத்தையும் வைக்க வேண்டுமென்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?






பில்டப் எல்லாம் போதும். அந்த நாட்டின் பெயரை சொல்லுங்கள் என்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன்! 

பிரிட்டீஷ் காலனியின் ஆதிக்கத்தில் இன்றும் உட்பட்டுள்ள ஜிப்ரால்டர் ( Gibraltar) என்ற நாடு தான் அது. நம் செஸ்  வீரர் விஸ்வநாத் ஆனந்திற்கு மிகவும் பிடித்த அவர் வருடத்திற்கு அதிக நாட்கள் தங்கி இருக்கும்  ஸ்பெயின் நாட்டின் தெற்கே தான் இந்த சிறிய நாடு  அமைந்துள்ளது. ஏறத்தாழ  30,000 பேர் வாழும் இந்த நாட்டின் பரப்பளவு 6.8 சதுர கிலோமீட்டர் மட்டுமே!  பூர்விக மொழியாக "லியானிட்டோ"(Llanito) இருந்தபோதிலும், ஸ்பானிஷ் மொழி பரவலாகவும், ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பேசப்படுகிறது.







பறப்பதற்கு பல சிக்கல்கள்( இடப்பிரச்சினை தான், வேறென்ன!) இருப்பதனால் வாரத்திற்கு 









30 சர்வீஸ்கள் மட்டுமே உண்டு. அதுவும் UK வுக்குத்தான் அதிகம். புகைப்படங்களை பாருங்களேன் உங்களுக்கே புரியும்.










தினமும் www.jfivenews.in படியுங்கள்




தினமும் www.jfivenews.in படியுங்கள்